செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி மானிய விலையில் வழங்க நடவடிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட்  கருவி மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கருவியைப் பயன்படுத்தி விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்ப்செட்டுகளை வீட்டில் இருந்தபடியும், வெளியூர்களில் இருந்தபடியும் இயக்கவும், நிறுத்தவும் முடியும்.

இதற்கு மானியமாக சிறு/குறு/பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்குக் கருவியின் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.7000/- வரை மானியமாக வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40% அல்லது அதிகபட்சமாக ரூ.5000/-வரை மானியமாக வழங்கப்படும்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

தானியங்கி பம்ப்செட் கருவி
தானியங்கி பம்ப்செட் கருவி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தற்போது, திருச்சி மாவட்டத்தில் பொதுப்பிரிவுக்கு 127 எண்களும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு 30 எண்களும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் திருச்சி, முசிறி மற்றும் இலால்குடி வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், திருச்சி உபகோட்டத்திற்கு உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) ரா.ரமேஷ்குமார்  9791306938, முசிறி உபகோட்டத்திற்கு உதவி செயற்பொறியாளர் (வே.பொ) ரா.அசோக்குமார் 9942112882 மற்றும் இலால்குடி உபகோட்டத்திற்கு உதவி செயற்பொறியாளர் (வே.பொ) ஆ.கந்தசாமி 9842435242 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.