பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது – கனிமொழி பேச்சு !
”பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது” என்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார். தூத்துக்குடியில் நடைபெற்ற ஆதரவற்ற முதியோர் மனநல காப்பகத்தை திறந்துவைத்தபோது, இவ்வாறு பேசினார்.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளியில் ஆதரவற்ற முதியோர் மனநல காப்பகம் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, இதில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை காப்பதற்காக அப்பகுதியில் அன்பு உள்ளங்கள் என்ற முதியோர் இல்லம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
இதில், ஆண்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 163 பேர் இந்த காப்பகத்தில் உள்ளனர். இவர்களுக்கு சேவை செய்வதற்காக 20 பணியாளர்களும் உள்ளனர். இந்நிலையில் அந்த காப்பகத்தில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக முதியோர் இல்ல கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசுகையில், இந்த இல்லத்திற்கு கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து இதுபோன்று பல்வேறு இல்லங்களை இவர்கள் தொடர்ந்து ஆரம்பித்து தற்போது மாவட்டத்தில் அதிகமானோர் ஆதரவற்றோராக உள்ளனர் அவர்களுக்கு தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
— மணிபாரதி.