இது அஜித்தின் அமர்க்களமல்ல…. மோடியின்”அழிவுத்தளம்”
ரயில் நிலையம் இல்லாத டீக்கடை கேட்டேன்.
சான்றிதழ் இல்லாத பட்டம் கேட்டேன்.
மனைவி இல்லாத வாழ்க்கை கேட்டேன்
குழந்தைகள் இல்லாத மாளிகை கேட்டேன்.
முஸ்லிம்கள் இல்லாத குஜராத் கேட்டேன்.
பாலியல் வன்மம் செய்யும் பாதகர்கள் கேட்டேன்.
பசுவின் பெயரால் நசுக்கக் கேட்டேன்.
விசுவகுருவென அழைக்கக் கேட்டேன்
ஏழைத்தாயின் மகனெனக் கேட்டேன்
ஏரோப்ளேன் தனியாக கேட்டேன்
உலகம் முழுதும் உலவக் கேட்டேன்
ஊதாரியான செலவுகள் கேட்டேன்.
ஜி என அழைக்கக் கேட்டேன்.
4 G, 5G அற்ற BSNL கேட்டேன்
சீனாவிடம் ஜியோ கேட்டேன்.
பொதுத்துறை இல்லாத தொழில்கள் கேட்டேன்.
குஜராத் சர்வீஸ் டாக்ஸ் ( Gujarat Service Tax- GST) எனும் ஜிஎஸ்டி கேட்டேன்.
ஜன”வரி” பிப்ர”வரி”க்கும் வரிப் போடக் கேட்டேன்.
வரியை வாரிக்கொடுக்க கார்ப்ரேட்கள் கேட்டேன்.
கார்ப்ரேட்களிடம் பத்திரம் கேட்டேன்
அம்பானிக்கான பெட்ரோல் டீசல் கேட்டேன்
அதானிக்கான துறைமுகம், விமானநிலையம் கேட்டேன்.
இருவருக்குமான இந்தியா கேட்டேன்.
இந்தியாவை அதானியா என மாற்றக் கேட்டேன்
மருந்துகளற்ற கொரோனா கேட்டேன்
மாட்டுக் கோமிய மகிமை கேட்டேன்
தட்டும் கரண்டியும் தட்டக் கேட்டேன்
விளக்கில்லாத வீடுகள் கேட்டேன்
மானியம் இல்லா சிலிண்டர் கேட்டேன்.
மக்கள் பணத்தை அமுக்கக் கேட்டேன்.
எரிவாயு இல்லாத சமையல் கேட்டேன்.
வெங்காயம், பூண்டற்ற உணவு கேட்டேன்
ஆவணங்களை எரித்த ரபேல் கேட்டேன்.
ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு கேட்டேன்.
ஸ்விஸ் வங்கி பட்டியல் கேட்டேன்.
பத்திரக்கணக்கற்ற பாரத் வங்கி கேட்டேன்.
சிறுகுறு தொழில்கள் நசுக்கக் கேட்டேன்
சீனப் பட்டாசு வெடிக்க கேட்டேன்.
ஊழலை உறிஞ்சும் வாசிங்மெசின் கேட்டேன்.
உத்தமர்கள் என உலர்த்தக் கேட்டேன்
குலத்தொழில் செய்யும் குதர்க்கம் கேட்டேன்.
அழுக்கு என்பதை நீட் எனக்கேட்டேன்
படித்த இளைஞர்கள் பணிந்திடக் கேட்டேன்
பக்கோடா விற்கும் வேலை கேட்டேன்
சமூகநீதி மறுக்கும் மனுநீதி கேட்டேன்.
தட்டிப் பறிக்கும் தத்துவங்கள் கேட்டேன்
கடமையாற்றாக் கவர்னர் கேட்டேன்.
கண்ணியம் விலை என்னவெனக் கேட்டேன்.
வேளாண் அழிக்கும் சட்டம் கேட்டேன்
வீதியில் இறங்குவதை தடுக்கக் கேட்டேன்
சத்தம் இல்லாத துப்பாக்கி கேட்டேன் யுத்தம் செய்யாத உழவன் கேட்டேன்
மினிமம் பேலன்ஸ் அக்கவுண்ட் கேட்டேன்.
பேலன்ஸ் வயலன்ஸ் செய்யக் கேட்டேன்.
நிவாரணமற்ற வெள்ளம் கேட்டேன்.
வேடிக்கை மட்டும் பார்க்கக் கேட்டேன்
ஏழைகள் செல்லாத ரயில்கள் கேட்டேன்
வந்தே பாரத் என வழங்கக் கேட்டேன்.
மூதாதையரை முழுங்கக் கேட்டேன்
முதலைக் கண்ணீர் வடியக் கேட்டேன்
தைவான் நாட்டுக் காளான் கேட்டேன்
தைரியமற்ற மார்புகள் கேட்டேன்
பாகிஸ்தானை பயப்படக் கேட்டேன்
சீனாவிடம் சிணுங்கிக் கேட்டேன்
மாநிலங்கள் இல்லாத இந்தியா கேட்டேன்.
மணிப்பூர் செல்லாத மாநிலங்கள் கேட்டேன்.
இந்தியா அல்லாத பாரத் கேட்டேன்.
விவாதம் இல்லாத மன்றம் கேட்டேன்
கேள்விகள் இல்லாத ஊடகம் கேட்டேன்
ஆடிட் இல்லாத நிதியைக் கேட்டேன்
அளவே இல்லாத விளம்பரம் கேட்டேன்
மூளையையும் சுமையாய் கருதும் முட்டாள்கள் கேட்டேன்
அன்னைத் தமிழை அகற்றக் கேட்டேன்
ஆய்வுகளற்ற தொல்லியல் கேட்டேன்
அவ்வையாரை அவ்வப்போது கேட்டேன்.
உரிமையற்றக் குடிகள் கேட்டேன்
வள்ளுவனை வாடகைக்குக் கேட்டேன்
வல்லபாய்க்கு சிலையைக் கேட்டேன்.
ஒன்றிய அரசென்பதை மறுக்கக் கேட்டேன்.
ஒன்றாத அரசாக இருந்திடக் கேட்டேன்
உயிரை உறிஞ்சும் கந்து கேட்டேன். இந்து என்று கூவக் கேட்டேன்.
பகையை பையில் சுமக்க கேட்டேன்
பாரத் மாதாக்கி ஜே கேட்டேன்
அதிமுக அழியக் கேட்டேன்
ஆதரிக்கும் அடிமைகள் கேட்டேன்
இலையை மேயும் ஆடு கேட்டேன்
ஈன,மானம் எதுவெனக் கேட்டேன்
உண்மையற்ற பொய்கள் கேட்டேன்.
ஊழல் ஊழலென உளறக் கேட்டேன்
வாக்குச் சீட்டற்ற தேர்தல் கேட்டேன்.
இவிஎம் பிரதமராய் இருக்கக் கேட்டேன்.
எல்லை தாண்டு்ம் சீனா கேட்டேன்.
பாகிஸ்தானிடம் பயப்படக் கேட்டேன்.
கூசாத பொய்கள் கேட்டேன்.
வாயாலே வடை சுடக் கேட்டேன்
ஒன்றிய அரசெனக் கூறக்கேட்டேன்
ஒன்றாத அரசாக இருந்திடக் கேட்டேன்
காந்திய வழி என கூறிக் கேட்டேன்.
கோட்சே வழியில் செல்லக் கேட்டேன்.
தமிழில் பேசும் வாய்ப்பு கேட்டேன்
தமிழை ஒழிக்க ஹிந்தி திணிப்புக் கேட்டேன்.
மெட்ரோ இல்லாத கோவை கேட்டேன்
எய்ம்ஸ் இல்லாத மதுரை கேட்டேன்
அமமுக அடங்கிடக் கேட்டேன்
தவெக தணிந்திடக் கேட்டேன்
ஓபிஎஸ் ஒழியக் கேட்டேன்
மறவர் வாக்கை மடக்க கேட்டேன்
இன்னும் இன்னும் நிறையக் கேட்டேன்.
இத்தனை கேட்டும் கிடைத்தது.
மக்களிடம் வாக்குகள் கேட்டேன்.
தமிழ் வாக்குகள் மட்டும் கிடைக்கவில்லை.
தேர்தல் தேர்தல் வேண்டாமென்று
அதிபர் ஆட்சி அமையக் கேட்பேன்
அரசியலமைப்பை அகற்றக் கேட்பேன்.
— சூர்யா சேவியர்
(மோடி நாளை தமிழ்நாடு வருவதை முன்னிட்டு கவிதை இல்லை.கவிதை மாதிரி)
Comments are closed, but trackbacks and pingbacks are open.