வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட – மாடுலர் கிச்சன் ! உங்கள் வீட்டிலும் அமைக்க வேண்டுமா? தற்போது திருச்சியில்…

0

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  மாடுலர் கிச்சன் உங்கள் வீட்டிலும் அமைக்க வேண்டுமா?

உன் நண்பர்கள் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்” என்ற தீர்க்க வரிகளைப்போலவே, பெண்களின் குணநலன்களை பிரதிபலிக்கும் சமாச்சாரமாக கருதப்படுவது சமையலறை! சமையலறையில் சாதம், பால் பொங்கி வடிந்த தடங்களும்; ப்ரஷர் குக்கிரிலிருந்து நாலாபக்கமும் சிதறிய படிமானங்களும்; அன்றாடம் தாளிக்கும்போது சுற்றி தெறித்த எண்ணெய்ப்பிசுக்குகளும்; தோசை ஊற்றிய போது சிந்திய மாவுப்படலங்களும்; காய்ந்து வற்றலாகிப்போன என்றோ சமைத்த உணவுப் பொருட்களுமாக ஒரு சமையலறை இருக்கிறதென்றால், என்ன சொல்வார்கள்?

பேச்சிலர்ஸ் ரூம் மாதிரி இப்படி கண்றாவியாக இருக்கிறதென்று முகத்துக்கு நேராகவே சொல்லி விடுவார்கள். வேலைக்கு போகிற அவசரம், வேலை முடித்து களைத்து ஓய்ந்து திரும்புவதால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று என்ன காரணம் கூறினாலும் நம்மை பற்றிய குறை மதிப்பீட்டிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது. கௌரவக்குறைச்சல் ஆகிவிடும் என்பதால் மட்டுமல்ல; இதுபோன்ற சமையலறை சூழல், கரையான், பல்லி மற்றும் பூச்சிகளை விருந்து வைத்து அழைப்பது போன்றது. உடல்நலன், சுகாதாரத்தோடு தொடர்புடைய ஒன்று.

பாஸ்ட்புட் உணவுகளை, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகளை தவிர்த்து, கைப்பக்குவத்தோடு வீட்டிலேயே சுகாதாரமான முறையில் சமைத்து உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. உடல்நலன் சார்ந்த ஆரோக்கியத்திற்கு காட்டும் இந்த அக்கறை, அதன் உற்பத்தி இடமான சமையலறை சார்ந்தும் இருக்க வேண்டாமா?

பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பியாகவேண்டும்; கணவரை வேலைக்கு அனுப்பியாக வேண்டும்; கூடவே, சமைத்து முடித்து தானும் அரக்க பரக்க வேலைக்கு கிளம்பியாக வேண்டும் என்ற அன்றாட சூழலில், சமையலறை ஒழுங்கை பராமரிப்பது கடினமானது. அதுவும் சில வீடுகளில், வாட்டமான சமையலறை அமையாவிட்டால், எந்த பொருளை எங்கு வைப்பது என்று தெரியாமல் தட்டு தடுமாறி எரிச்சலுடனே சமைக்க வேண்டியதாகிவிடும். இந்த எரிச்சலின் விளைவு வெந்தும் வேகாமலும், உப்பு, காரம் குறைத்தோ, தூக்கலாகவோ போட்டு சமைத்த சுவையற்ற உணவுகளாக குடும்பத்தினருக்கு பரிமா றப்படும். இந்த சிக்கல்களுக்கு தீர்வாக, ”மாடுலர் கிச்சன்” என்ற மாற்றை முன்வைக்கிறார்கள்.

”இன்றைய நவீன சமையலறையில் கேஸ் ஸ்டவ், மிக்சி, கிரைண்டர் மட்டுமின்றி மைக்ரோ வேவ் அவன், இண்டக்சன், கெட்டில், காபி மேக்கர், சாண்ட்விச் மேக்கர், டோஸ்டர், எலக்ட்ரிக் குக்கர் போன்ற பலவும் அலங்கரிக்கின்றன. அவற்றின் பயன்பாட்டிற்கு ஏற்ப சரியான இடம், அதற்கான மின் இணைப்புடன் எளிமையாக பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டு, பூச்சி, கரையான் போன்றவற்றின் பாதிப்பு இன்றி, நீண்ட நாட்கள் நீடித்து நிலைத்திருக்கும் வகையில் மாடுலர் கிச்சனை அமைக்க வேண்டும்.” என்கிறார், ‘நேஷனல் அலுமினியம் மாடூலர் கிச்சன்’ நிறுவனத்தின் உரிமையாளர் ‘ரோட்டேரியன்’ எம்.ஏ.அஹமது இப்ராஹிம்.

உரிமையாளர்எம்.ஏ.அஹமது இப்ராஹிம்
உரிமையாளர் எம்.ஏ.அஹமது இப்ராஹிம்

மாடுலர் கிச்சன் துறையில் 20 ஆண்டுகள் அரபு நாட்டில் பணியாற்றிய அனுபவத்தை, அவர்களது தொழிற்நுட்பத்தை அதுவும் திருச்சியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார், எம்.ஏ.அஹமது இப்ராஹிம். திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில், அரியமங்கலம், ரயில் நகர் பேருந்து நிலையம் அருகில், (ரிலையன்ஸ் மார்க்கெட் அருகில்) அமைந்துள்ளது, இந்த நேஷனல் அலுமினியம் மாடூலர் கிச்சன்.


”நாங்கள் அமைத்து தரும் மாடுலர் கிச்சன் முழுவதும் POWER COATED  அலுமினியம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட HIGH PRESSURE LAMINATED (HPL SHEET) ஷீட்களை பயன்படுத்தி இணைத்து உறுதியாகவும், அழகாகவும், நேர்த்தியான முறையில் வடிவமைத்து தருகிறோம். பார்ப்பதற்கு மரத்தினால் ஆன கிச்சனை போலவே இருக்கும்.

ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மாடுலர் கிச்சன் வடிவமைப்பதில் பயிற்சி பெற்ற டெக்னீஷியன்களைக் கொண்டு, அனுபவம் வாய்ந்த இன்ஜினியர் மூலம் திட்டமிட்டு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் ஸ்கெட்ச் செய்து அவுட்லுக் உருவாக்கி, நேர்த்தியான முறையில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் மாடுலர் கிச்சன் அமைத்துத் தருகிறோம். மேலும் எங்கள் மாடுலர் கிச்சன், பராமரிப்பது எளிது. தண்ணீர், நெருப்பு பட்டு வீணாகாது. துருப்பிடிக்காது. கரையான் அரிக்காது. நீண்ட காலம் உழைக்கக் கூடியது. இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது.” என்கிறார், எம்.ஏ.அஹமது இப்ராஹிம்.


” எங்கள் இடத்திலேயே அனைத்து வேலைகளையும் முடித்து, பிட்டிங் பணியை மட்டுமே சம்பந்தபட்ட சமையலறையில் செய்கிறோம். கிச்சன் அமைத்துத் தருவதோடு எங்கள் வேலை முடிந்தது என சென்றுவிடாமல், சர்வீஸ் வாரண்டியும் தருகிறோம். நாங்கள் அமைத்துத் தரும் ‘மாடுலர் கிச்சன்’ சுமார் 25 ஆண்டுகளுக்கு எந்தவித தொந்தரவும் தராமல் நிலைத்திருக்கும். இது வரை நாங்கள் அமைத்துக் கொடுத்த மாடுலர் கிச்சன் குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித புகார்களும் வந்ததில்லை.” என்பதை பெருமையாகவும் குறிப்பிடுகிறார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள கிச்சனை மாடுலர் கிச்சனாக மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கையுடனும் பலர் அணுகிவருகிறார்கள். அவர்களது இட அமைப்பு, அவர்களது எதிர்பார்ப்பு, அதேசமயம் அவர்களது பட்ஜெட்டுக்கு ஏற்றபடி அவர்களது மனம் மகிழும்படியான மாடுலர் கிச்சன்களை நிர்மாணித்து தருகிறோம்” என்கிறார், நேஷனல் அலுமினியம் மாடூலர் கிச்சன் உரிமையாளர் எம்.ஏ.அஹமது இப்ராஹிம்

“புதியதாக வீடு கட்டும்பொழுதே எங்களை தொடர்புகொண்டால் நேரில் பார்வையிட்டு உங்களது விருப்பம் அறிந்து எங்களது ஆலோசனைகளையும் கட்டணமில்லாமல் வழங்கிவருகிறோம். மேலும் விபரங்களுக்கு  90253 20742, 94432 91946 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்”.

நேஷனல் மாடுலர் கிச்சன் மாடல்களை வீடியோ வடிவில் காண..  

நேஷனல் மாடுலர் கிச்சன் வெப்சைட் காண… 

http://www.nationalmodularkitchen.com

Leave A Reply

Your email address will not be published.