அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திரைப்படப் பாடல்கள் காப்புரிமை மீறல் ! கேபிள் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி !

திருச்சியில் அடகு நகையை விற்க

திரைப்படங்களுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் காப்புரிமை வழங்கப்பட்ட நிறுவனமான iHorse Pictures, அண்மையில் SONY MUSIC, THINK MUSIC, SAREGAMA போன்ற முன்னணி இசை நிறுவனங்களுடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்து, இதனை அனைத்து MSO மற்றும் கேபிள் சேனல் உரிமையாளர்களுக்கும் முறையாக அறிவித்திருந்தது.

அதனால், எந்த ஒரு கேபிள் சேனலும் iHorse Pictures–க்கு சொந்தமான திரைப்படங்கள் மற்றும் பாடல்களை அனுமதி பெற்ற பின் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்பதும் தெளிவாக அறிவிக்கப்பட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஆனால், இந்த அறிவிப்பை மீறி பல கேபிள் சேனல்கள் தமிழ்நாடு முழுவதும் காப்புரிமை இல்லாமல் திரைப்படப் பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வந்த சூழலில், சேலம் மாவட்டத்தை தலைமையாகக் கொண்டு இயங்கி வந்த 7STAR TV என்ற கேபிள் சேனல் கூட அனுமதி இன்றி திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பியதாக iHorse Pictures நிறுவனம் புகார் அளித்தது.

இதன் பேரில், iHorse Pictures நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த சேலம் மாவட்ட அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல் (IPREC)

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆய்வாளர் திருமதி கெஜலக்ஷ்மி அவர்கள், 15.11.2025 அன்று 7STAR TV சேனல் உரிமையாளருக்கு எதிராக காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனால், iHorse Pictures நிறுவனம் சார்ந்த எந்த திரைப்படம், எந்த திரைப்படப் பாடல் என்றாலும் அனுமதி பெறாமல் ஒளிபரப்பினால், அதற்கு எதிராக கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காப்புரிமை மீறல்–கேபிள் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது!

 

 —   பிரபு பத்மநாபன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.