இரயில் நிலையத்தை ஆய்வு செய்த எம்.பி. மாணிக்கம் தாகூர்!
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் பி. மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று (13.10.2025, திங்கள்) சாத்தூர் இரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். இரயில் நிலையத்தின் வசதிகள், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்க தாகூர் எம்.பி., “மத்திய அரசு ஜிஎஸ்டி வரிகளை அதிகமாக வசூலித்து, மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாக வழங்குகிறது. மேலும், வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நிக்காதது வருந்தத்தக்கது. விரைவில் நிறுத்தம் வழங்கப்படாவிட்டால், காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் எம். ஜோதி நிவாஸ், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் டி. எஸ். அய்யப்பன், மேற்கு வட்டார தலைவர் ஆர். கே. சுப்பையா, கிழக்கு வட்டார தலைவர் பி. கார்த்திக், மேற்கு வட்டார பொறுப்பாளர் சன். மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். மேலும், ரயில்வே உதவி கோட்ட வர்த்தக மேலாளர் மணிவண்ணன் மற்றும் கோட்ட வர்த்தக ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகிய அதிகாரிகளும் கலந்து கொண்டு ஆய்வில் பங்கேற்றனர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.