அருந்தியர் உள்ஒதுக்கீடு – விசிக இரவிக்குமார் எதிர்ப்பு – தேவையா?
அருந்தியர் உள்ஒதுக்கீடு – விசிக இரவிக்குமார் எதிர்ப்பு – தேவையா ? அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அருந்ததியருக்குள்ளேயே 7 ஜாதிகள் இருக்கிறது அதிலே வலிமையானவர்கள் வாய்ப்பைத் தட்டி பறிக்க மாட்டார்களா என்று கேட்கிறார்.
பறையர்களுக்குள்ளேயே 18 ஜாதிகள் இருக்கிறது அது அவருக்குத் தெரியாதா? அதிலேயும் வலிமையானவர்கள் மற்றவருக்கான வாய்ப்பைத் தட்டி பறிக்கமாட்டார்களா?
என்ன லாஜிக்கில் ரவிக்குமார் பேசுகிறார் என்பது தெரியவில்லை! திருமாவளவன் அவர்களது கருத்தும் இதுதானா? அல்லது தலைவருடைய கருத்துக்கு எதிராக இவர் பேசுகிறாரா?
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே பெரியாரியத் திராவிட இயக்க எதிர்ப்பை வளர்த்து இவர் என்ன செய்யப்போகிறார்?
-முகநூலில் ஆறுமுகம் பெல்