மிஸ்டர் ஸ்பை – 3 (அங்குசம் இதழ் ஏப்.10-24)
சினிமா ஹீரோயின்களைப் பற்றியும் பாப்புலராக இருக்கும் பெண்களைப் பற்றியும் அருவறுப்பாகவும் ஆபாசமாகவும் சில யூடியூப் சேனல்களில் தொடர்ந்து பேசி வருகிறார், சினிமா மூலமே தன்னை வளர்த்துக் கொண்ட அந்த தாட்டியான நபர். அவருக்கு சிலபல ஆயிரங்களைக் கொடுத்து, அப்படிப் பேசச் சொல்வதே சில டுபாக்கூர் பி.ஆர்.ஓ.க்கள் தானாம். இதை வைத்தே அந்த நடிகைகளிடம் சில லட்சங்களை கறந்துவிடுகிறார்களாம் அந்த பி.ஆர்.ஓ.க்கள். சில போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் அந்த தாட்டியான நபரிடம், “த்ரிஷாவைப் பத்தி, நயன்தாராவைப் பத்தி நீங்க தாராளமா பேசுங்க. அந்த நடிகைகளெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் படியேறி வரமாட்டார்கள். அதையும் மீறி வந்தா பார்த்துக்கலாம்” என பூஸ்ட் கொடுக்கிறார்களாம்.