இதை எல்லாம் பார்த்தால் தொழில் செய்ய முடியாது மிஸ்டர் விஜய் !
விஜய்க்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. கடும் மழை , புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி நிவாரணப்பொருட்கள் வழங்கி அவரது இமேஜை வாக்குவங்கியை உயர்த்திக்கொள்ள முடியும். கலைஞர் முதல் விஜயகாந்த் வரை அதை செய்தார்கள். ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்றாவது பார்ப்பார்.
இவரது முதல் மாநாடு நடந்த விக்கிரவாண்டி சுற்றியுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறைந்தபட்சம் அங்காவது நேரில் சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கியிருக்கலாம்.
விஜய் ஒருமுறை கேரளாவுக்கு சென்றபோது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் விஜய்யை கட்டிப்பிடித்து லிப் கிஸ் அடித்துவிட்டார்கள். அதிலிருந்து விஜய்க்கு இப்படி பொது இடங்களுக்கு செல்வது அலர்ஜி என்று நினைக்கிறேன்.
இதை எல்லாம் பார்த்தால் தொழில் செய்ய முடியாது. கூட்டத்தில் நாலு பேர் அன்புமிகுதியால் முத்தம் தரத்தான் செய்வான். இதுவே எம்ஜியாராக இருந்தால் அவரே ஒரு கிழவியை பிடித்து முத்தம் கொடுத்திருப்பார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொதுமக்களோடு கனெக்ட் ஆகாமல் இங்கு அரசியல் செய்யமுடியாது. அதற்கு உதாரணம் கமல். அவர் சினிமாவில் கொடுத்திருந்த முத்தத்தை பொது மக்களுக்கு கொடுத்திருந்தால் இந்நேரம் எதிர்க்கட்சி தலைவராகியிருப்பார்.
— விநாயக முருகன், டிஜிட்டல் படைப்பாளி