பிரபுதேவா மகனும் களத்தில் குதிச்சுட்டாரு!
டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவாவும் இண்டிபெண்டெண்ட் வீடியோ ஆல்பம் மூலமாக சினிமாக்களத்தில் டான்ஸராக குதிச்சுட்டாரு. ரவிச்சந்திரன் ஸ்ரீனிவாஸ் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள ‘முதல் முதலாய்’ பாட்டுக்கு அசத்தலாக நடமானடியிருக்கார் ரிஷி தேவா. ரிஷியுடன் நடிகை கைராவும் இணைந்து கலக்கியுள்ளார்.
இந்த வீடியோ ஆல்பத்தை ட்ரஸ்டினா ஐசக் டைரக்ட் பண்ணியுள்ளார். ஒளிப்பதிவு : ஆர்.பி.குருதேவ், நடனம் : சுரேன். ‘ஜெண்டில்மேன்’ படத்தில் பிரபுதேவா நடனமாடும் ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ பாடலை சிறுவயதில் பாடினார் ஜி.வி.பிரகாஷ். இப்போது பிரபுதேவா மகன் டான்ஸராக அறிமுகமாகும் வீடியோ ஆல்பத்திலும் ஜி.வி.பிரகாஷ் பாடியிருப்பது அசத்தலான சங்கதி தான். இந்த வீடியோ ஆல்பத்தை சரிகம நிறுவனம் ரிலீஸ் பண்ணியுள்ளது.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.