வெயில் காலத்தில் பரவும் கூகைக்கட்டு அம்மை !

மம்ப்ஸ் எனும் கூகைக்கட்டு அம்மை தற்போது குழந்தைகளிடையேவும் பள்ளி செல்லும் பருவத்தினரிடையேவும் அதிகமாகப் பரவி வருகிறது.

0

வெயில் காலத்தில் பரவும் கூகைக்கட்டு அம்மை !

ம்ப்ஸ் குறித்து அறிந்து கொள்வோம் வாருங்கள். தற்போது நம் நாட்டில் கோடைக்காலம் நிலவி வருவதால் அம்மை நோய் பரப்பும் வைரஸ்களுக்கு ( தீநுண்மிகள்)  வழக்கம் போல பரவல் காலமாகும்.

சின்னம்மை ( சிக்கன் பாக்ஸ்)
தட்டம்மை/ சின்னமுத்து / மணல்வாரி அம்மை ( மீசில்ஸ்)
அக்கி ( வேரிசெல்லா சோஸ்டர்)
கூகைக்கட்டு அம்மை / பொன்னுக்கு வீங்கி ( மம்ப்ஸ்)

என்று பல வைரஸ்கள் பரவி, குறிப்பாக குழந்தைகளிடையே அம்மை நோயை ஏற்படுத்துகின்றன.

- Advertisement -

- Advertisement -

இவற்றுள் மம்ப்ஸ் எனும் கூகைக்கட்டு அம்மை தற்போது குழந்தைகளிடையேவும் பள்ளி செல்லும் பருவத்தினரிடையேவும் அதிகமாகப் பரவி வருகிறது.

ஏனைய வைரஸ் தொற்றுகளைப் போலவே,

    • அதீத காய்ச்சல்
    • தலைவலி
    • உடல் சோர்வு
    • உடல் வலி
    • வயிற்றுப் பகுதி வலி
    • பசியின்மை போன்ற அறிகுறிகளுடன்

முக்கியமாக, கண்ணப்பகுதிக்கு கீழே கழுத்தின் ஒரு புறத்திலோ இரு புறங்களிலுமோ வீக்கம் ஏற்படும்.

இதற்குக் காரணம், மம்ப்ஸ் வைரஸ் தாக்கும் போது எச்சிலை உருவாக்கும் பரோட்டிட் சப் லிங்குவல், சப் மேண்டிபுலார் சுரப்பிகளில் அழற்சியை உருவாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது.

இதன் விளைவாக “கூகை” – ஆண் ஆந்தை போல கண்ணத்தின் இரு பக்கத்திலும் வீக்கம் இருப்பதால் கூகைக் கட்டு என்று அழைக்கப்படுகிறது.

4 bismi svs

இந்தத் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையாக

    •  காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் வழங்கலாம்.
    • வலி அதிகமாக இருக்கும் என்பதால் மருத்துவர் பரிந்துரையில் வலி நிவாரணிகள் வழங்கலாம்.
    • வீக்கம் ஏற்பட்ட இடத்தில் குளிர் அல்லது சுடு ஒத்தடம் வழங்கலாம். இது வலியைக் குறைத்து சற்று இதம் தரும்.
    • உணவுகளை  கஞ்சி, மோர், பழச்சாறு, கூழ் வடிவத்தில் திரவமாக வழங்க வேண்டும். அதிகமான அளவு நீரைப் பருக வழங்க வேண்டும்.
    • அமில பழச்சாறுகளான எலுமிச்சை ஆரஞ்சு போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
    • கூகைக்கட்டு அம்மை நோய் தானாகவே 2 முதல் 3 வாரங்களில் குணமாகும்.

இந்த நோயின் அபாய அறிகுறிகள்

    • கணையத்தை தாக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுத்தும்.
    • பெண் குழந்தைகளில் சினைப்பையைத் தாக்கி அழற்சியை ஏற்படுத்தலாம். அடிவயிற்றுப் பகுதியில் தீவிர வலி இருக்கும்.
    • ஆண்களில் விந்தணு உற்பத்தியில் உதவும் விதைகளில் அழற்சியை ஏற்படுத்தி விதைப்பையில் வலியை ஏற்படுத்தும்.
    • தண்டுவட நரம்பில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூளை வரை தொற்றுப் பரவி மூர்ச்சை நிலை / கழுத்துப் பகுதி இறுக்கம் / பிதற்றல் நிலை/ தீவிரமான தலைவலி போன்ற அபாய அறிகுறிகள் தோன்றும்.
    • தொடர்ந்து உணவு மற்றும் திரவம் கூட உட்கொள்ளாத நிலை இருக்கும் போது குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

எனினும் பெரும்பான்மையினருக்கு தீவிர தொற்றாக மாறாமல் சாதாரண நோயாகவே கடந்து செல்லும்.

இந்த நோய், இருமல், தும்மல் , மூக்கொழுகுதல் சளி போன்றவற்றால் எளிதாகப் பிற குழந்தைகளுக்குப் பரவும்.

எனவே, காய்ச்சல் தணியுமட்டும் அல்லது  கண்ணப் பகுதியில்  உள்ள வீக்கம் தொடங்கி முதல் ஐந்து நாட்களுக்கேனும் “தனிமைப்படுத்துவது” நோய் பரவல் நிகழாமல் தடுக்க உதவும்.

இந்த நோயைத் தடுப்பதற்கு, எம் எம் ஆர் ( மீசில்ஸ் மம்ப்ஸ்  ரூபெல்லா)  முத்தடுப்பூசியை ஒன்பதாவது மாதத்திலும் 15-வது மாதத்திலும் பிறகு ஐந்து வயதிலும் வழங்குவது பலனளிக்கும்.

மம்ப்ஸ் பரவல் நடக்கும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கும் பள்ளி செல்லும் பருவத்தினருக்கும் நான்கு வார இடைவெளியில் எம்எம்ஆர்  தடுப்பூசி வழங்கலாம்.

மம்ப்ஸ் குறித்து அறிந்து தெளிந்தோம்! மேற்கூறிய அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுப்பது சிறந்தது! நன்றி!

முகநூலில் :
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.