முதல் போடாமலேயே லாபம் பார்த்த முருகதாஸ்!
‘தர்பார்’ சறுக்கலுக்குப் பின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் சினிமா சறுக்கல் ஆரம்பித்தது. விஜய்யிடம் கதை சொல்லும் முயற்சி, அஜீத்தை சந்திக்கும் முயற்சி எல்லாமே தோற்றுப் போன நிலையில் ஏ.ஆர்.எம். புரொடக்ஷன் என்ற தனது சொந்த பேனரில், தனது உதவி இயக்குனர்களை இயக்குனர்களாக்கி சினிமா தயாரிக்கும் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதற்காக ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பணம் போடுவதற்காக மும்பை பார்ட்டிகள் சிலரை கைவசம் வைத்துள்ளார் முருகதாஸ்.
அவர்களில் இருவருடன் கூட்டுச் சேர்ந்து ‘ஆகஸ்ட்16 1947’ என்ற படத்தைத் தயாரித்து கடந்த வாரம் ரிலீஸ் பண்ணினார் முருகதாஸ். மொத்தம் 10 கோடி பட்ஜெட்டில் படம் தயாரானாலும் பத்து பைசா கூட முதல் போடவில்லையாம் முருகதாஸ். ஆனால் மூணு கோடி லாபமாம் முருகதாஸுக்கு.
அது எப்படி? அதான் அப்படி…
–மதுரை மாறன்