திருச்சி மாநகராட்சி வார்டு 14-ல் ரவுண்ட்அப் ! நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு?

0

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்ட பணிகள் எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய “அங்குசம் செய்திக்குழு”  திட்டமிட்டது.

என்.எஸ்.பி ரோடு, கிலேதார் தெரு, பாபு ரோடு, சின்னக்கடை வீதி, ஆண்டாள் தெரு, வாணப்பட்டறை தெரு, காலேஜ் ரோடு, ஹோலி கிராஸ் காலேஜ் ரோடு, மேற்கு புலிவார்டு ரோடு, சின்ன சௌக், பெரிய சௌக், ஈ.பி சாலையின் ஒருபகுதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது 14 வது வார்டு. இதன் கவுன்சிலர் அரவிந்தனிடம் அவரின் ஓராண்டு சாதனை குறித்து கேட்டோம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சி.அரவிந்தன் மாமன்ற உறுப்பினர் 14வது - வார்டு (அதிமுக )
சி.அரவிந்தன் மாமன்ற உறுப்பினர் 14வது – வார்டு (அதிமுக )

சவாலான விஷயம்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அவர் கூறுகையில், திருச்சியில் கல்லூரி படிப்பு முடிந்தது முதல் கடந்த 24 ஆண்டு காலமாக அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறேன். கட்சியில் எனது ஈடுபாடு மற்றும் களப்பணி குறித்து ஆய்வு செய்த கட்சி தலைமை ஒப்புதலோடு கவுன்சிலராக போட்டியிட்டு 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

முன்னதாக, 10 ஆண்டு காலம் தி.மு.க வசம் இருந்த இந்த வார்டினை எனது சகோதரர் திருச்சி மாவட்ட பால்வள தலைவர் (ஆவின் சேர்மன்) மற்றும் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான கார்த்திகேயன் 2011-2016ம் ஆண்டில் வெற்றி பெற்று அவர் பதவி காலத்தில் பல்வேறு நலப்பணிகளை செய்திருந்தார். அப்போது, அவர் செய்த மக்கள் நலப்பணிகள் எனது வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது. முற்றிலும், வணிக பகுதிகளை உள்ளடக்கிய திருச்சியில் மையப்பகுதியான மலைக்கோட்டையை பகுதியில் கவுன்சிலராக இருப்பது ஒரு சவாலான காரியம். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரப்பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன் என வாக்குறுதி அளித்திருத்தேன்.

 

மேற்கு புலிவார்டு பகுதியில்…

வெற்றி பெற்ற பின், மேற்கு புலிவார்டு பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த லூர்துசாமி பிள்ளை பூங்காவினை தூய்மைப்படுத்தி, பழுதடைந்துயிருந்த விளையாட்டு உபகரணங்களை சொந்த செலவில் சீரமைத்து பொதுமக்கள், மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி உள்ளேன். மேலும், அடிக்கடி கொசு மருந்து அடித்து சுகாதாரமாக பராமரித்து வருகிறேன்.

புகழியா பிள்ளை தெரு பகுதியில்…

புகழியா பிள்ளை தெரு பகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, அடிகுழாய் பைப் இருந்த 3 இடங்களில் மின்மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி தலா 1 இலட்சம் என ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி கொடுத்துள்ளேன். மேலும், 25 முக்கிய பகுதிகளில் 20 வாட்ஸ் திறன் கொண்ட மின்விளக்குகளை மாற்றி 90 வாட்ஸ் திறன் கொண்ட பல்புகளாக மாற்றி உள்ளேன்.

வாணப்பட்டறை தெருவில்…

வாணப்பட்டறை தெருவில் நகர்நல மையம் மற்றும் டவுன் ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டண கழிவறையை சீரமைத்தது உட்பட பல்வேறு பணிகளை செய்துள்ளேன்.

பாராட்டிய வியாபாரிகள்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் திடீரென மீன்கள் இறந்து துர்நாற்றம் வீச தொடங்கிய உடனே மீன்களை அப்புறப்படுத்தி குளத்தை தூய்மைபடுத்தியது பஜார் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பெரும் பாராட்டை பெற்றது.

போஸ்டர் தொல்லை கிடையாது…

மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள், வார்டு பகுதியில் 50-க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள், காவல்துறை சார்பில் அமைக்கப் படும் சாலைத்தடுப்பு கட்டைகளை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றனர். அதில், மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டுவது, வார்டு பகுதிகளில் போஸ்டர்களே இல்லாத பகுதியாக மாற்றுவது, (இதற்காக போஸ்டர்கள் ஒட்டும் பகுதியில் இயற்கை காட்சிகளை படங்களாக வரைந்து வைப்பதால் போஸ்டர்கள் ஒட்டுவது தவிர்க்கப்படுகிறது)

குப்பை இல்லா பகுதியாக…

மேலும், குப்பையே இல்லாத வார்டாக மாற்றும் ஒரு முன்மாதிரி முயற்சியாக மக்களிடம் எடுத்துக்கூறி வீடு வீடாக சென்று குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பெறும் திட்டத்தை நடைமுறைப் படுத்தி உள்ளேன்.

எதிர்கால திட்டங்கள்…

அருணாச்சலம் மன்றம் அருகே மாநகராட் சிக்கு சொந்தமான இடத்தில் யாத்ரா நிவாஸ் கட்ட வேண்டும் என்று மாமன்ற கூட்டம் மற்றும் கோட்ட கூட்டங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன்.

மலைக்கோட்டை பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சரியான மழைநீர் வடிகால் அமைத்து தரவில்லை. அதனை வடிகால் வசதி செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதையாக மாற்றும் முயற்சி எடுத்து வருகிறேன்.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு பக்தர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றேன்.

மேலும், என்.எஸ்.பி சாலை வியாபாரிகள் நீண்ட நாள் கோரிக்கையான தார்சாலை அகற்றி சிமெண்ட் சாலையாக மாற்றும் திட்டமும் வைத்துள்ளேன்.

கோட்டை வளைவுப்பகுதியில் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் ஒரு நடைமேம்பாலம் அமைக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.