அரசு போக்குவரத்து கழகமா? அல்லது திமுக அரசுக்கே போக்கு காட்டும் கழகமா? பூனைக்கு யார் மணி கட்டுவது.?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அரசு போக்குவரத்து கழகமா? அல்லது திமுக அரசுக்கே போக்கு காட்டும் கழகமா? பூனைக்கு யார் மணி கட்டுவது.? நீதி, நேர்மை, நியாயம். வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை அரசு பஸ் கண்டக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை ஆரப்பாளை யம் பஸ் நிலையத்திலிருந்து தேனி நோக்கி செல்லும் அரசு பஸ்சில் காதுகுத்து நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்த நண்பர் செக்கானூரணி பஸ் ஸ்டாப்பில் டிக்கெட் கேட்கும்போது அந்த பஸ்சில் உள்ள கண்டக்டர் செல்போன் ஆடியோ ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தார். நமது நண்பர் கண்டக்டரிடம் என்ன ஆடியோ என்று கேட்க, எங்களது போக்குவரத்துக் கழக பிரச்னை சார் என்னைப்போல் அரசு பஸ் கண்டக்டர் மனக்குறைகளை அள்ளி வீசி இருக்கிறார் முதல்வருக்கு என்றதும், அந்த வாட்ஸ்அப் ஆடியோவை நமக்கு அனுப்பி இதை கேளுங்கள் என்றார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்குளம் கிளை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்குளம் கிளை

நாமும் அதை கேட்க. “என்னை பழி வாங்கு கிறார்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நான் கொலை செய்யப்பட்டால் அதற்கு காரணம் தொமுச பொதுச்செயலாளர்மேலூர் அல்போன்ஸ்தான் என்று கூறியுள்ளார். அந்த வாட்ஸ் அப் ஆடியோவில் பேசிய நபரை விசாரித்ததில் அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் குமார் என்று தெரிய வந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

எனக்கு ஏதாவது நடந்தால்..

இதையடுத்து மதுரை ஆரப்பாளையம், மஞ்சள்மேடு பகுதியில் வசிக்கும் கண்டக்டர் குமாரை அவரது இல்லத்தில் நாம் நேரில் சந்தித்தோம். “நான் இப்பகுதியில் உள்ள சோனைசாமி கோயிலில் பூசாரியாக உள்ளேன். ஆண்டு தோறும் திருவிழா காலங்களில் சாமியாடியாகவும் வலம் வருகிறேன். எனது தந்தை பாண்டி சேர்வை அப்போது இருந்த பாண்டியன் போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்தார். அவர் இறந்த பிறகு1997ல் வாரிசு அடிப்படையில் நான் கண்டக்டராக வேலையில் சேர்ந்தேன். தற்போது மதுரை டூ ஓசூர் அரசு பஸ்சில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

அரசு போக்குவரத்து கழக நடத்துனர் குமார்
அரசு போக்குவரத்து கழக நடத்துனர் குமார்

எனக்கு டூட்டி போட மறுக்கிறார்கள். இதற்கு காரணம் தொமுச பொதுச் செயலாளர் மேலூர் அல்போன்ஸ் என்பவர்தான். அவர் அதிகாரிகளை தன் கைக்குள் வைத்துக் கொண்டு என்னை போல் உள்ள அப்பாவிகளை பழி வாங்குகிறார். மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக டிப்போக்கள் 16ம், புறநகர் சேர்த்து மொத்தம் 20 உள்ளது. இங்கு ஆள்பற்றாக்குறையை வைத்து இங்குள்ள டிரைவர், கண்டக்டர் ஆகியோரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பணியில் அமர்த்துகிறார் தொமுச பொதுச்செயலாளர் அல்போன்ஸ்.

தொமுச முன்னாள் பொதுச் செயலாளர் சுவாமிநாதன்
தொமுச முன்னாள் பொதுச் செயலாளர் சுவாமிநாதன்

கடந்த 15 ஆண்டாக பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். அவரை எதிர்ப்பவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி டிரிப்புக்கு ஏற விடமாட்டார். கட்சியின் மேலிடத்தில் தனக்கு இருக்கிற செல்வாக்கை பயன்படுத்தி 1992ம் ஆண்டு மேலூர் கிளையில் தொமுச செயலாளராக பதவியேற்றார். 2012ம் ஆண்டு தொமுசவின் பொதுச் செயலாளராக இருந்த சுவாமிநாதன் மறைவுக்குப் பின்பு பேரவை செயலாளர் சண்முகத்தால் அல்போன்ஸ் மண்டல பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு 2015ல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாள் முதல் இன்று வரை மண்டல பொதுச் செயலாளராக தன்னை நிலை நிறுத்தி வருகிறார். மேலூர் அல்போன்ஸ் பதவி ஏற்றதும் மத்திய சங்கப் பொறுப்பில் இருந்த மூத்த நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நிர்வாகிகள் பலர் அல்போன்சின் செயல்பாடுகள் பிடிக்காமல் சங்கத்தை விட்டு வெளியேறிவிட்டனர். சங்கமும் சரிவர செயல்படவில்லை. ஆண்டு சந்தா, பேரவை சந்தா, கட்டிட நிதி என அனைத்திலும் கமிஷன் பெற்று வருகிறார். இது போக தீபாவளி நன்கொடை, கிளையின் சார்பாக மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் மாமூல் வேறு கிடைக்கிறது.

மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ளஅரசு போக்குவரத்து கழக டெப் போ
மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ளஅரசு போக்குவரத்து கழக டெப்போ

திண்டுக்கல் மற்றும் பல ஊர்களில் வங்கி கணக்கு, நகை ஆபரணங்கள், இடம், வீடு என இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பல இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவர் மீது தமிழக முதல்வர், தொமுச பேரவை செயலாளர், திமுக துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பேரவை பொருளாளர், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆகியோருக்கு இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அல்போன்ஸுக்கு கொரோனா வந்தபோது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்காக மதுரையில் உள்ள ஒவ்வொரு கிளையும் ரூ.5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மத்திய சங்க தொமுச பொருளாளர் மணிகண்டன் மூலம் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ செலவு உதவிக்காக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி பணம் வசூலித்து கொடுத்து உதவினோம். என் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆய்வாளர்களை அனுப்பி பொய்யான குற்றச்சாட்டு மற்றும் சஸ்பெண்ட், டிரான்ஸ்பர் செய்வது இதில் ஏதேனும் நடந்தால் அதற்கு முழு காரணம் மதுரை தொமுச பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ்தான். அவர் கொரோனாவில் இருந்தபோது மருத்துவமனை செலவுக்காக பணம் வசூல் செய்து கொடுத்தார் என்பதை மணிகண்டன் மற்றும் சத்யராஜிடம் கேட்டுப்பாருங்கள் விரக்தியுடன் கூறினார்.

யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மதுரை மண்டல மத்திய சங்க தொமுச பொருளாளர் மணிகண்டனிடம், அல்போன்ஸ் கொரோனா தொற்று ஏற்பட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செலவிற்காக தொழிலாளர்கள் பணம் கொடுத்தது சம்பந்தமாக நாம் அவரிடம் கேட்டதற்கு, யார் என்னிடம் கொடுத்தது. நீங்கள் பார்த்தீர்களா? நான் யாரிடமும் பணம் வசூல் செய்யவில்லை. வேண்டுமென்றே என் மீது புகார் கூறுகிறார்கள். அப்படி பணம் கொடுத்தவர்களை காண்பியுங்கள் பார்க்கலாம் என்றார்.

தொமுச பொதுச் செயலாளர் மேலூர் அல்போன்ஸ்
தொமுச பொதுச் செயலாளர் மேலூர் அல்போன்ஸ்

அதிமுக-காரர்களுக்கு முக்கியத்துவம் தருவார்.

தொடர்ந்து நாம் மேலூர் சத்யராஜிடம் இதுபற்றி கேட்டபோது, நானும் அல்போன்ஸ்சும் நகமும்-சதையுமாக இருந்து வந்தோம். ஒரு சில காரணங்களாக பிரிவினை உண்டானது. இவர் அதிமுககாரர்களுக்குதான் முக்கியத்துவம் தருவார். இவரால் பாதிக்கப் பட்டு பழிவாங்கப்பட்டவர்கள் அதிகம். திமுக கட்சிகாரர்களையும் என்னையும் புறக்கணிக்கிறார். எனக்கு 2 வருடங்களாக இன்கிரிமெண்டை கட் பண்ணிவிட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரம் திறப்பதற்காக வந்தபோது அல்போன்சை பற்றி நேரடியாக கடிதம் எழுதி கொடுத்தேன். எந்த பலனும் இல்லை. அல்போன்ஸ் டார்ச்சர் தாங்காமல் புதுக்குளம் கிளையில் பாஸ்கரன் என்பவர் வேலையே வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். நீங்கள் அந்த கிளையில் கேட்டால் இன்னும் விவரங்கள் அதிகமாக கிடைக்கும் என்றார்


யாருடைய தூண்டுதலிலும் போகவில்லை..

நாம் நேரில் சென்று புதுக்குளம் கிளையில் உள்ள டிரைவர் ஒருவரிடம் பாஸ்கரை பற்றி கேட்டபோது தவறான தகவலை உங்களுக்கு யாரோ தந்திருக்கிறார்கள். பாஸ்கர் யாருடைய தூண்டுதலிலும் வேலையை விட்டுப் போகவில்லை. அவர் உடம்பு சரியில்லாத காரணத்தினால் தான் அவர் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் என்றார்.

மணிகண்டன் தெமுச பெருளாளர்
மணிகண்டன் தொமுச பெருளாளர்

என்னை வில்லனாக சித்தரிக்கிறார்கள்.

தொமுச பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் நம்மிடம் கூறியது: குமாரின் வாட்ஸ்அப் ஆடியோவை நானும் கேட்டேன். இஷ்டத்துக்கு பேசியிருக்கிறார் மறுநாள் காலை அவரே நேரில் என்னிடம் வந்து நான் பொதுவாக தான் பேசினேன். தங்களை குறிப்பிட்டு பேசவில்லை என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார். நான் தொமுச சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் விதிகளை மீறி ஏதுவும் செயல் படவில்லை. என்னை வில்லனாக சித்தரிக்கிறார்கள். நான் வீடு ,ஏக்கர் கணக்கில் நிலம், ஊர் ஊருக்கு வங்கி கணக்கு வைத்திருப்பதாக கூறுகிறார்கள். சங்க கட்டிடம் கட்டுவதற்கு போலி ரசீது கணக்கு காட்டவில்லை என்று என் மீதும் என்னுடன் இருப்பவர்களையும் சுட்டிகாட்டுகிறார்கள். இதோ பாருங்கள் சங்கத்தில் இதுவரை வசூல் செய்த ரசீது புத்தகம், கட்டிடநிதி, அதிகாரிகள் கையெழுத்து, சீல் வைத்திருப்பதை எழுதி வைத்திருக்கிற கணக்குகளை நீங்களே பாருங்கள் என்று நம்மிடம் காண்பித்தார். நான் திமுககாரன்தான் எங்கேயும் அடித்து செல்வேன். எங்களது கட்சியினருக்குதான் முக்கியத்துவம் எதிர்கட்சியினருக்கு காசு வாங்கிக்கொண்டு டூட்டி போட அவசியமில்லை.

ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்த அரசு போக்குவரத்து கழகத்தில் கலக்கம் வந்தால் தொண்டர்களையா கலங்கவிடுவார் முதல்வர். அதிகாரிகளிடமும், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரிடம் அன்பாகத்தான் இருக்கிறேன். கடந்த 15 ஆண்டாக பொதுச் செயலாளராக நீங்களே இருக்கிறீர்களாமே என்றதும் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விருப்பத்தின் பேரில்தான் நான் பொதுச் செயலாளராக இங்கு இருக்கிறேன். நீங்கள் இங்கே கேட்டுப் பாருங்கள், என்னை டிரைவர், கண்டக்டர் உழைப்பை திருடக்கூடாது. யாரிடமும் கமிஷன் வாங்க வேண்டிய அவசியமில்லை. சரியான முறையில்தான் அதிகாரிகள் டூட்டி போடுகிறார்கள். ஒரு சிலர் டபுள் டூட்டி போட சொல்லி கோட்கிறார்கள். தரவில்லை என்றதும் இந்த மாதிரி குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

மேலூர் சத்யராஜ்
மேலூர் சத்யராஜ்

2022 தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர்கள் வெறும் 20 ஒட்டு வாங்கி வெற்றிவாய்ப்பை இழந்து, நான் வெற்றி பெற்றதை அறிவிப்பு வந்ததும் அதே இடத்தில் என்னை எதிர்த்து நின்ற அனைவரும் ஒன்றுகூடி எனக்கு மாலை மரியாதை செய்தனர். ஒரு சிலர் பிடிக்காமல் இப்படி குற்றம் சுமத்துகிறார்கள் போற்றுவார் போற்றட்டும்.. தூற்றுவார் தூற்றட்டும் என்பதுபோல் எனது பணியை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன் என்றார். நாம் மேலூர் சத்யராஜ் என்றதும். நம்பிக்கை துரோகி. அவரைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள். அவர் சங்கத்திலும் இல்லை. மேல் அதிகாரிகள் மீது பிசிஆர் புகார் போலீசில் கொடுத்திருக்கிறார் படபடவென பேசி முடித்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு பஸ்கள் ஆயிரக்கணக்கில் ஓடுகின்றன. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். டிரைவரும், கண்டக்டரும் எந்த குறைபாடும் இல்லாமல் பயணத்தில் இருந்தால் பொதுமக்கள் போய் சேர வேண்டிய இடத்திற்கு பத்திரமாக போய் சேர்வார்கள் அப்படி இல்லை என்றால் அந்த பயணம் இனிதாக அமையாது.

-ஷாகுல், படங்கள் – ஆனந்த்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.