இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு !

0

திருச்சி மேற்கு மாவட்ட மமக சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் குழுமிக்கரை பகுதியில் சிறுபான்மையினர் – அரசாணை (நிலை எண் – 15) 30.01.2024 அடிப்படையில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை  மாவட்ட தலைவர் அ. பைஸ் அகமது MC தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மாநில துணை செயலாளர் முகமது ரபீக், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், 29 வது வார்டு தலைவர் கபீர், செயலாளர்கள் அப்துல் நாசர், காஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் தென்னூர் சதாம், உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-நிஷா

Leave A Reply

Your email address will not be published.