பிரபல ஹோட்டலில் நான்கு புர்கா அணிந்த கல்லூரி பெண்களும் ஒரு மாற்று மதச் சகோதரரும் !

0

திருச்சி தில்லை நகர் பிரபலமான ஒரு ஹோட்டலில் இருந்து நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டார் சகோதரா இங்கே நான்கு இஸ்லாமிய பெண்களும் ஒரு மாற்று மதத்தை சார்ந்த சகோதரரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதை நான் கண்டேன் அவர்களின் நடவடிக்கை பார்க்க மனம் வருத்தம் அளிக்கிறது முடிந்தால் நேரில் வரவும் என்று அழைப்பு கொடுத்தார்.

உடனடியாக என்னோடு இரண்டு சகோதரர்களும் வந்தார்கள் அங்கு சென்றோம். அந்த ஹோட்டலில் நேரில் பார்த்த பொழுது காலேஜ் படிக்கும் புர்கா அணிந்தபடி நான்கு இஸ்லாமிய பெண்களும் கையில் கயிறு நெற்றியில் செந்தூர பொட்டு காப்பு என்று ஒருவர் அமர்ந்து கொண்டு உணவு அருந்தி கொண்டிருந்தார்.

2 dhanalakshmi joseph

நானும் அதை பார்த்துவிட்டு சரி இப்படித்தான் நடக்கிறது இதை போய் என்னவென்று கேட்பது போய் தொலைகிறது சைத்தான்கள் என்று கிளம்பலாம் என்று முடிவு செய்த பொழுது அங்கு ஒரு சில நிகழ்வுகளை பார்க்க கண்டோம்.

அந்த மாற்று மத சகோதரர் அந்த ஒரு பெண்ணுக்கு இவர் உணவு ஊட்ட அந்தப் பெண் அவருக்கு உணவு ஊட்ட தோளில் கை போட கன்னத்தை கில்ல தலையில் கை வைத்து விளையாட என்று சில பல வேலைகளுடன் உணவு அருந்துவதை கண்டேன் சுத்தி அமர்ந்து கொண்டிருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் மேலே இருந்தது.

- Advertisement -

- Advertisement -

ஒரு சிலர் கண்களில் கோபத்தையும் கண்டோம் இதை பார்த்த பிறகு அங்கிருந்து கடந்து செல்ல முடியவில்லை

உடனடியாக மாவட்டத் தலைவர்களை தொடர்பு கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை கூறினோம். அவர்களும் யாராக இருந்தால் என்ன தவறு என்றால் அழைத்து பேசுங்கள் என்று கூறினார்கள்

வெளியே வரும் வரை அமைதியாக காத்திருந்தோம் சாப்பிட்டுவிட்டு ஆற அமர சிரிப்பு சத்தங்களுடன் வெளியே வந்தார்கள்.

அந்த மாற்று மத சகோதரரை அன்பாக அழைத்து தங்கள் யார் எங்கிருந்து வருகின்றீர்கள் இந்தப் பெண்கள் எல்லாம் யார் என்ற கேள்வியை கேட்டோம் அதற்கு அவர் நீங்கள் யார் எதற்காக இதையெல்லாம் கேட்கிறீர்கள் என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார்.

பிறகு அவருக்கு புரியும் படி சில விஷயங்களை எடுத்து சொன்னோம் அதன் பிறகு அவரின் தந்தை எஸ்.பி.சி.ஐ. டி.யில் பணியில் இருக்கிறார். நானும் டிரைனிங்கில் இருக்கின்றேன் நாங்கள் காதலிக்கின்றோம் இருவரும் திருமணம் செய்யப் போகின்றோம் என்று அனைத்தையும் உடைத்தார்.

அவருக்கு புரியும் படியும் உறைக்கும் படியும் சில கேள்விகளைக் கேட்டோம் அவர் குடும்பத்தாரிடமும் அலைபேசியில் பேசினோம். தங்களின் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்.

அதன் பிறகு அந்தப் பக்கமாக அமைந்திருக்கும் அந்த பெண்களிடம் சற்று பேசினோம்.

இஸ்லாத்தின் அடையாளங்களில் முக்கியமான ஒரு பங்கு பெண்கள் அணிந்திருக்கும் ஹிஜாப் பெண்களை பாதுகாக்க அணிந்திருக்கும் ஒரு புனிதமிக்க உடையை உங்களுடைய மொள்ளமாரித்தனத்திற்கும் சுயநலத்திற்கும் கேவலமான காரியத்தை மறைப்பதற்கும் பயன்படுத்துவதா இது போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு ஒரு ஆணிடம் அமர்ந்து கொண்டு அனைவரும் இருக்கும் இடத்தில் எப்படி இது போல் உங்களால் நடந்து கொள்ள முடிகிறது எங்கிருந்து இந்த தைரியம் உங்களுக்கு வந்தது.

அப்படி உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் நடந்து கொள்ள விரும்பினால் இது போன்ற உடைகளை அணியாமல் வேற உடையை அணிந்து கொண்டு உங்கள் விருப்பத்திற்கு போல் நீங்கள் நடந்து கொண்டால் அதை பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது என்று கூறினோம்.

அதன் பிறகு நம்மோடு இருந்த மற்றொரு சகோதரர் அவர்களிடம் கொஞ்சம் மார்க்க ரீதியாகவும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறித்தும் கொஞ்ச நேரம் பேசினார்.

அதன் பிறகு அவர்கள் இதுவெல்லாம் எங்களுக்கு தெரியாது நாங்கள் இதை எல்லாம் நினைக்கவில்லை இது தவறு என்று எங்களுக்கு புரிகிறது எங்கள் தவறை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் இனி இதுபோன்று நாங்கள் ஈடுபட மாட்டோம் நாங்கள் செய்த தவறுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்றெல்லாம் கூறினார்கள்.

4 bismi svs

நீ மன்னிப்பு கேட்பது எங்களிடத்தில் அல்ல நீ அணிந்திருக்கும் இந்த ஹிஜாப் ஒரு சமுதாயத்தின் அடையாளம் இதை அணிந்து கொண்டு நீ செய்யும் தவறு இந்த சமுதாயத்திற்கு நீ செய்யும் துரோகம் நீ மன்னிப்பு கேட்க விரும்பினால் அது இந்த சமுதாயத்திடம் தான் கேட்க வேண்டும் எங்களிடமிருந்து உன்னால் பேசி சென்றுவிட முடியும் ஆனால் படைத்த இறைவனிடம் இருந்து எளிதில் உங்களால் தப்ப முடியாது என்று கூறப்பட்டது.

அந்தப் பெண்கள் யார் உங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் வராமல் அவர்களை தொடர்பு கொள்ளாமல் உங்களை அனுப்ப முடியாது என்று நாம் கூறினோம் அதை மிரட்டுவதற்காக அல்ல அவர்களைப் பாதுகாப்பதற்காக.

ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல் எப்படியாவது ஒன்றாக வாழும் இந்த சமுதாயத்தில் பிரச்சனை உண்டாக்குவதற்கு பல வழிகளை கையாளுகிறார்கள் அதிலும் இஸ்லாமிய பெண்களை குறி வைத்து அந்த பெண்களின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்பதே ஆர் எஸ் எஸ் அஜந்தாவாக இருக்கிறது அது போன்ற அயோக்கியரிடம் நீங்கள் சிக்கிக் கொண்டால் நாளை உங்கள் வாழ்வு சீரழிந்தால் அதை வேடிக்கையை பார்க்கும் சமூகமாக நாங்கள் இருக்க விரும்பவில்லை இது போன்ற பொதுவெளியில் குடும்பம் பார்த்து விடுமோ என்ற பயம் மட்டும் இருக்கக் கூடாது யாரைப் பார்த்தாலும் இவர்களுக்கு நம்மை கேட்கும் உரிமை இருக்கிறது என்ற பயம் இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாக கூறப்பட்டது.

யார் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பொதுவெளியில் நடந்து கொள்ளும் கண்ணியம் என்று ஒன்று இருக்கிறது.

யார் யாரையோ விரும்புகிறார்கள் யார் யாரையோ திருமணம் செய்கிறார்கள் இதுவெல்லாம் நமக்குத் தேவையில்லாத ஒரு விஷயம் அழகிய முறையில் எடுத்துச் சொல்வோம் கேட்கவில்லை என்றால் கடந்து செல்வோம் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி திருமணம் வாழ்க்கை என்பது அவர்களின் முடிவு வாழ்வதும் வாழ்க்கை வீணடிப்பதும் அவர்கள் கையில் உள்ளது. இதையெல்லாம் நாங்கள் கடந்து விடுவோம் ஆனால் இஸ்லாமிய பெண்களை குறி வைத்து காதல் என்ற பெயரில் அவர்களின் வாழ்வை சிதைக்க நினைக்கும் காவிகளிடம் ஒருபோதும் இந்த சமுதாயப் பெண்களை நாங்கள் விட்டு விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் அதற்கான விசாரணை மட்டுமே இது என்று இறுதியாக கூறப்பட்டது.

அவர்களின் விவரம் விலாசம் அனைத்தும் அறிந்த பிறகு கண்ணியமான முறையில் பாதுகாப்பாக அறிவுரை கூறி அவர்களை நாம் அங்கிருந்து அனுப்பி வைத்தோம்.

அந்த மாற்றுமத சகோதரர் நாம் இறுதியாக சொன்னது

நீங்களும் நம் சகோதரனே உங்கள் வீட்டு பெண்ணுடன் இது போன்ற ஆண்கள் யாராவது இப்படி நடந்து கொண்டால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்
மதத்தின் பெயரால் நாம் யாரையும் எதிர்ப்பதில்லை ஆனால் மதத்தின் பெயரால் எங்கள் சமுதாயம் பெரிதும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இஸ்லாமியர்களும் மாற்று மதத்தை சார்ந்தவர்களும் அண்ணன் தம்பியாக பழகிக்கொண்டிருக்கும் இந்த தமிழ்நாட்டில் எந்த ஒரு விஷயத்தை வைத்தும் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் எங்கள் மீது சுமத்தப்படும் போலியான பிம்பங்கள் இருந்து நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்ளவும் போராடுகிறோம் எங்கள் நிலையை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் இன்று அவருக்கு புரியும்படி கூறி அனுப்பி வைத்தோம்.

இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம் பெண் பிள்ளை பெற்றோர்களே முதல் உங்கள் பிள்ளைகளை மார்க்க கல்வியை கற்றுக் கொடுங்கள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் ஆண்களும் ஒழுக்கம் உடன் நடந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய பெண்கள் என்ற அடையாளத்தில் யார் அத்துமீறினாலும் உடனே அவர்களை அழைத்து அழகிய முறையில் எடுத்துச் சொல்லும் கடமையும் எச்சரிக்கையும் நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இனியாவது முயற்சி செய்யுங்கள்.

ஹிஜாப் அணிந்து கொண்டு இதை யார் தவறு செய்ய நினைத்தாலும் அவர்கள் மனதில் ஓடுவதெல்லாம் நம்மை யார் வேண்டுமானாலும் நிறுத்தி கேள்வி கேட்பார்கள் என்ற பயம் வந்தால் மட்டுமே இங்கு அவர்கள் செய்யும் குற்றம் குறையும்.

தினம் தினம் வெளி உலகத்தில் நடக்கும் நிகழ்வை பார்க்கும் போதெல்லாம் மனம் கணம் கணக்கிறது குற்றங்களிலிருந்து நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் அப்பொழுதுதான் நடக்கும் தவறுகளை உங்களால் கேள்வி கேட்க முடியும்.

மரணிக்கும் வரை மரணம் வரும் வரை நீதமாக நடந்து கொள்வோம் களத்தில் உறுதியாக இருப்போம்.. அனைவரையும் சமம் என்ற சொல்லும் மார்க்க முறைப்படி அனைவரும் நம் சகோதரர்களே என்று உறுதியாக இருப்போம்

– திருச்சி உஸ்மான் – தமுமுக

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.