நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு? திருச்சி மாநகராட்சி வார்டு 57 ரவுண்ட்அப்!
ரூ.35 கோடி மதிப்பில் அமைச்சரின் கனவு திட்டம் எனது வார்டில் அமைவது மிகுந்த பெருமையளிக்கிறது
திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவுபெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்ட பணிகள் எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய ‘அங்குசம் செய்தி’ திட்டமிட்டது.
இதன்படி, கள்ளுபட்டறை தெரு, நாயக்கர் தெரு, கொள்ளாங்குளம், ஸ்டாலின் நகர், பாரதி நகர், ஜே.ஜே. நகர், எம்.ஜி.ஆர் நகர், இராஜீவ் காந்தி நகர், விவேகானந்தர் தெரு, பாரதி தெரு, இளங்கோ தெரு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது 57வது வார்டு சுமார் 13 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த வார்டின் கவுன்சிலர் முத்துசெல்வம்.
3வது முறையாக… 15 வயதில் கட்சி கூட் டங்களில் பேசுவது, தொழிற்சங்க கொடி யேற்று விழாக்களில் தவறாமல் பங்கேற்பது போன்ற தொடர் ஈடுபாட்டின் காரண மாக பேரூர் கழக துணைச்செயலாளர், வட்டசெயலாளர், கடந்த முறை திருச்சி மாநகராட்சி கொறடா, தற்போது கவுன்சிலர், மாநகராட்சி நிதிக்குழு தலைவர், திமுக மாவட்ட துணைச்செயலாளர் என்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு களுடன் 3வது முறையாக கவுன்சில ராக பணியாற்றி வருகிறார்.
ஓராண்டு சாதனைகள் : அவரிடம், கடந்த ஓராண்டில் வார்டி ற்கு செய்த நலத்திட்ட பணிகள் குறித்து கேட்டோம், அப்போது, அவர் வார்டு முழுவதும் குடிதண்ணீர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறேன். ஸ்டேட் பாங்க் காலனி, பாப்பா காலனி, பாரதியார் நகர், எம்.ஜி.ஆர். கார்டன், விவேகானந்தர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்று தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நகரில் தார்ச்சாலை மற்றும் கழிப்பிடம் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இராஜீவ் காந்தி நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய குடிநீர் இணைப்புகள் : வார்டு பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கீழ் புது குடிநீர் இணைப்புகள் பதிக்கப்பட்டுள்ளன. வெளிச்சம் தேவைப்படும் 25 இடங்கள் கண்டறியப்பட்டு 20 வாட்ஸ் பல்புகளை அகற்றி விட்டு 90 வாட்ஸ் பல்புகள் பொருத்தியுள்ளேன். எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், ரூ.70 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பிடம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பில் கூலிங் மேற்கூரை அமைத்து தந்துள்ளேன். தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியுடன் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பலனடைந்தனர்.
சிறுமிகளுக்கு சேமிப்பு திட்டம் : புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகள் 400 பேருக்கு செல்வமகள் என்ற அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் தலா ரூ.250 டெபாசிட் செய்து அமைச்சர் மூலம் வழங்கப்பட்டது.
ரயில்மறியல் போராட்டம் : கிராப்பட்டி அன்பு நகர் பகுதியில் உள்ள இரயில்வே சுரங்கபாலம் மழைநீர் தேங்கி பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த தகுதி யற்றதாக இருந்தது. அதை ரயில் மறியல் போராட்டம் நடத்தி காரைக்குடி இரயில்வே துறையிடமிருந்து மீட்டு மாநகராட்சி வசம் ஒப்படைத்து பொதுமக்களுக்கு பயன்படும் பாலமாக அமைத்தது மிகுந்த மனநிறைவு தருகிறது.
ரூ.10 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் வசதியுடன் அரசு பள்ளி : இராஜிவ் காந்தி நகரில், சுமார் 10 கோடி மதிப்பில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி தரம்உயர்ந்தபட்டு ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைச்சர் கே.என்.நேரு பூமிபூஜையுடன் கட்டிட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதுவரை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் வசித்து வந்த 50 குடும்பத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது, நத்தம் புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் 400 குடும்பங்களுக்கு அமைச்சரின் பெரும் முயற்சியால் பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளது.
அமைச்சரின் கனவு திட்டம் : நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் கனவுத் திட்டமான எடமலைப்பட்டி புதூரில் உள்ள சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கொள்ளாங் குளத்தில் பூங்கா, பொழுது போக்கு அம்சங்கள், சுற்றிலும் நடைபாதை, படகு சவாரியுடன் சுற்றுலா தளம் போல (கோவை உக் கடத்தில் உள்ளது போல்) ரூ.35 கோடி யில் அமைக்க திட்டமிடப்பட்டு கோப்புகள் சென்னையில் பரிசீலனையில் உள்ளது. அமைச்ச ரின் கனவு திட்டம் எனது வார்டில் அமைய உள்ளது மிகுந்த பெருமையை தருகிறது என்றார்.