இசைப்பள்ளியில் சேரத் தயாரா ? திருச்சி கலெக்டர் அழைப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை மே மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கப்படவுள்ளது. மாணவர்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய துறைகளில் பயிலுவதற்கு 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம் மற்றும் தவில் துறைகளில் பயில எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானதாகும்.

இசைப்பள்ளி சோ்க்கை
இசைப்பள்ளி சோ்க்கை

Sri Kumaran Mini HAll Trichy

இசைப்பள்ளியில் பயிற்றுவிக்கபடும் சான்றிதழ் படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இதில் பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.350/-செலுத்திட வேண்டும். இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூ.400/-கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும், வெளியூர் மாணவர்கள் அரசு விடுதியில் இலவசமாக தங்கி பயிலவும். பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும்.

Flats in Trichy for Sale

மூன்று ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும் நாதசுரம், தவில் கலைஞராக வாசித்து தொழில் புரியவும், தேவார ஓதுவாராக கோயில்களில் பணிபுரியவும், வானொலி தொலைக்காட்சிகளில் நடத்தப்பெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட அரசு இசைப்பள்ளிகளில் தேவாரம் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இருபாலருக்கும் முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இசைப்பள்ளி சோ்க்கை
இசைப்பள்ளி சோ்க்கை

எனவே கலை ஆர்வம் மிக்க மாணவ மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.32. மூலத்தோப்பு, மேலூர்ரோடு, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி-620006 என்ற முகவரியிலும் மற்றும் 9486152007, 0431-2962942 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.