அங்குசம் பார்வையில் ‘முஸ்தபா முஸ்தபா’
தயாரிப்பு: ‘ தி மாபோகோஸ் பிலிம் ‘ பிரதீப் மகாதேவன். டைரக்டர்: பிரவீன் சரவணன், ஆர்டிஸ்ட்: சதீஸ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, ஐஸ்வர்யா தத்தா, புகழ், பாவெல் நவநீதன், கருணாகரன், லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், ஒளிப்பதிவு: கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ, இசை: ஜோன்ஸ் ரூபெர்ட், எடிட்டிங்: தினேஷ் பொன்ராஜ், பி.ஆர்.ஓ : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
டிவி சேனலில் வேலை பார்க்கும் சதீஷும் சுரேஷ் ரவியும் சேனலின் டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக ஸ்போர்ட்ஸ் டாக்டர் மோனிகாவை அழைத்து வந்து ஷூட்டிங் எடுக்கிறார்கள். இதில் மோனிகா மீது லவ்வில் விழும் சதீஷ், “தண்ணி தம் அடிக்கமாட்டேன்” என மோனிகாவிடம் சத்தியம் செய்கிறார். ஆனால் ஒரு வீடியோவால் மாட்டிக் கொண்டதால், இனிமேல் இப்படி நடக்காது எனமன்னிப்புக் கேட்கிறார் சதீஷ். ஆனால் ஐஸ்வர்யா தத்தாவுடன் படுக்கையறை சீன் லீக்கானதும் ஷாக்காகும் சதீஷ், அதை எப்படியாவது டெலிட் பண்ணிவிட வேண்டும் என கருணாகரனின் உதவியை நாடுகிறார். சீன் டெலிட் ஆச்சா? இல்லையா? இதான் ‘முஸ்தபா முஸ்தபா’.
இது காமெடிப்படமாத் தான் இருக்கணும்னு நம்பி தியேட்டருக்குள்ள போனோம். அப்படியெல்லாம் உங்க நம்பிக்கையை ஜெயிக்க வச்சுருவோமா? முடிஞ்சா சிரிச்சுப்பாருங்க என சவால்விட்டிருக்கிறார்கள் டைரக்டரும் ஹீரோ சதீஷும். இந்த சவாலில் அவர்கள் இருவரும்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படம் முழுக்க அப்படி ஒரு ட்ரையான காமெடி ட்ராக்.
சதீஷ் சகோதரா… நீங்க எப்பத் தான் நடிப்பீக சகோதரா? பேந்த பேந்த முழிச்சு இம்சை பண்றீகளே சகோதரா. சதீஷின் நண்பனாக வரும் சுரேஷ் ரவி, நடிக்குறதுக்கு கொஞ்சம் ட்ரை பண்ணியிருக்காரு. ஹீரோயின் மோனிகா சின்னகோட்லா, மற்ற ஹீரோயின்களான மானஸா செளத்ரி, ஐஸ்வர்யா தத்தா, சதீஷின் அம்மா-அப்பாவாக லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், மோனிகாவின் முறைமாமனாக புகழ், பான்பராக் வாயனாக பாவெல் என ஏகப்பட்ட பேர் படத்தில் இருக்கிறார்கள்.
‘முஸ்தபா முஸ்தபா’ அட போங்கப்பா… நீங்களும் உங்க படமும்.
அங்குசம் பார்வையில் ‘ முஸ்தபா முஸ்தபா ‘ 32/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.