அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“விஜய் சேதுபதியால் தான் நடந்தது” ஜியோ ஹாட் ஸ்டார் தலைமை நிர்வாகி பெருமிதம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் & பி.அஜித்குமார் டைரக்‌ஷனில் 10 எபிசோடுகளாக தயாராகியிருக்கும் வெப் சீரிஸ் ‘முத்து என்கிற காட்டான்’. மிகப்பெரிய ஓடிடி நிறுவனமான ஜியோ ஹாட்ஸ்டாருடன் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸும் கைகோர்த்து தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ் மார்ச்.27-ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

10 எபிசோடுகளில் 3 எபிசோடுகள் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. அடுத்த 7 எபிசோடுகளைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்ததன 3 எபிசோடுகள். அதன் பின்னர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு மார்ச்.25-ஆம் தேதி இரவு சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடந்தது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

முத்து என்கிற காட்டான்’இதில் வெப் சீரிஸின் நடிகர்கள் விஜய் சேதுபதி,  மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன், விஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், அபி நட்சத்திரா, கதாசிரியர் ராஜ்குமார், கேமரா மேன்கள் மது நீலகண்டன், சண்முக சுந்தரம், மியூசிக் டைரக்டர் ராஜேஷ் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய சிலரின் பேச்சுகள்…

Trich Job

கிருஷ்ணன் குட்டி [ ஜியோ ஹாட்ஸ்டாரின் தென்னிந்திய தலைவர்], “இதுவரையிலான ஜியோ ஹாட்ஸ்டாரின் தயாரிப்புகளில் மிகவும் பெருமைக்குரியது இந்த வெப் சீரிஸ். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக விஜய் சேதுபதியுடன் பணியாற்றியிருக்கோம். இப்போது அவருடனேயே இணைந்து தயாரித்திருப்பது மகிழ்ச்சியான அனுபவம். இரண்டரை ஆண்டுகாலம் இந்தப் படக்குழுவுடன் பயணைத்தது நல்ல அனுபவம்”.

பிரதீப் [ கண்டெண்ட் பிரிவின் துணைத் தலைவர்], “மணிகண்டன் சொன்ன கதையைக் கேட்டு ஓகே சொன்னவுடன் விஜய் சேதுபதியைச் சந்தித்தோம். இந்த புராஜெக்ட் எத்தனை நாளில் முடியும்னு எனக்குத் தெரியாது. ஆனால் எத்தனை நாட்கள் நடந்தாலும் நான் முழு ஒத்துழைப்புக் கொடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார். பெரிய நடிகர் ஒருவரிடமிருந்து இப்படியொரு வாக்குறுதி கிடைப்பது அரிதானது. எங்களின் தயாரிப்புகளிலேயே இதான் மிகப்பெரிய பட்ஜெட். இருந்தாலும் ஷூட்டிங் ஆரம்பித்து 20 நாட்களில் நின்றுவிட்டது. நாங்கள் கார்ப்பரேட்காரர்கள். ஒரு கோடு போட்டு கையெழுத்துப் போட்டுவிட்டால் அதை மீறவே முடியாது. இதனால் விஜய் சேதுபதியைச் சந்தித்து நிலைமையைச் சொல்லி, நீங்கள் தயாரிக்க வேண்டும் என்றேன். சில நிமிட யோசனைக்குப் பிறகு சம்மதித்தார். அதனால் இந்த சீரிஸ் விஜய் சேதுபதியால் தான் நல்லபடியாக முடிந்தது”.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

டைரக்டர் & எடிட்டர் பி.அஜித்குமார், “முதலில் இந்த வெப் சீரிஸில் எடிட்டராகத் தான் உள்ளே வந்தேன். அதன் பின் டைரக்டரானேன். இந்தப் படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜியோ ஹாட்ஸ்டாருடன் இணைந்து விஜய் சேதுபதியும் தயாரிப்பில் இறங்கினார். இதில் நடித்த கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே மிகவும் திறமைசாலிகள்”.

 மிலிந்த் சோமன், “தமிழ் வெப் சீரிஸில் முதன்முதலாக நடித்திருக்கேன். ஒரு ஹீரோவின் வெட்டப்பட்ட தலையிலிருந்து கதை ஆரம்பித்ததால் எனக்கு  இது மிகவும் பிடித்தது. என்னுடைய கேரக்டருக்கு டைரக்டர் மணிகண்டன் கொடுத்த விளக்கம் முழுமையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. என்னுடன் நடித்தவர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி”.

கதாசிரியர் ராஜ்குமார், “டைரக்டர் மணிகண்டனின் அப்பா வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இந்தக் கதை”.

விஜய் சேதுபதி, “இந்த வெப் சீரிஸை ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை நடந்திருக்கும் சம்பவங்களை வைத்தே மூன்று எபிசோடுகள் எடுக்கலாம். ஜியோ ஹாஸ்டாருக்கு நான் ஆதரவளித்ததாக பிரதீப் சொன்னார். ஆனால் அவர்கள் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். என்னை பிக்பாஸுக்குள் கொண்டு போனவர் பிரதீப் தான்.

vijaysethupathivijaysethupathiதமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் இதான். வாழ்க்கையில் நான் இன்று ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் மீது எனது நண்பர்கள், நலன் விரும்பிகள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் காரணம். இந்த விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கூட அவர்களால் உருவானது தான். என்னை அவர்கள் நம்பிய பிறகு தான் என்னையே நான் நம்பினேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறும்படத்தின் மூலம் எனக்கும் மணிகண்டனுக்குமிடையே நட்பு ஆரம்பித்தது. இப்ப வரை உற்சாகமாகத் தொடர்கிறது. இந்த வெப் சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.

—      ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.