நான் செல்ல விரும்பும் சுற்றுலாத்தலம் – கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி !
அநுராகம் கலைஞன் பதிப்பகம் மற்றும் அக்ஷயா டிராவல்ஸ் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
நான் செல்ல விரும்பும் சுற்றுலாத்தலம் என்ற தலைப்பில் மாணவர்கள் கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட 250 மாணவர்களுக்கு சுற்றுலா – பண்பாட்டு துறையில் பயிற்சி வழங்கப்படும் என்றும், சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மாதம் உதவித் தொகை மாதம் ரூ.7500* (stipend) வழங்கப்படும் என்றும் பயிற்சிக்காக உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்ல வாய்ப்பு வழங்கப்படும் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான நெறிமுறைகள்:
- நுழைவுக் கட்டணம் இல்லை.
- முதல் பக்கத்தில் உங்கள் பெயர், படிக்கும் பட்டம், ஆண்டு, கல்லூரி, உங்கள் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் குறிப்பிட வேண்டும். (இல்லாதவை போட்டிக்கு ஏற்றுக்கொள்ள இயலாது.)
- நீங்கள் ஏன் செல்ல விரும்புகிறீர்கள் (தமிழகத்தில், இந்தியாவில், பிற நாட்டில் ஏதேனும் ஒன்று) என்பதை A4 தாளில் இரண்டு முதல் 4 பக்கங்கள் வரை எழுதலாம்.
- கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 1000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- கல்லூரி, பல்கலைக்கழக, பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
- தமிழில் கட்டுரைகள் 31.12.2024ஆம் தேதிக்குள் MS Word யூனிகோடு லதா பான்ட்டில் anuragamstudents79@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- கட்டுரையை கையெழுத்துப் பிரதி மூலம் அனுப்புகிறவர்கள் தபால் மூலம் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பலாம்.
- முடிவுகள் 31.03.2025 அன்று உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
- நடுவர்களின் முடிவே இறுதியானது.
(* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
இப்போட்டியில் பங்கேற்பது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு :
அநுராகம், 9. சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை-600 017.
இணையம் : www.anuragam.in மின்னஞ்சல் : anuragamstudents79@gmail.com
முனைவர் அபிதா சபாபதி – 96770 37474
முனைவர் அரங்க பாரி – 98422 81957
முனைவர் வி. ஹேமந்த் குமார் – 98842 49862
முனைவர் பா. இரவிக்குமார் – 93457 27513
முனைவர் ஜா. இராஜா – 79046 59899
முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி – 9865836580