அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பாம்பு கொத்தும்! பாம்பை வைத்து படம் எடுத்தால் வசூல் கொட்டும்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள ‘நாகபந்தம்’ என்ற படம் தெலுங்கு , தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஜூலை. 03- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
நாகபந்தத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன். 23- ஆம் தேதி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்னம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசியவர்கள்..

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

கலைப்புலி எஸ். தாணு
“தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கிருக்குமா நீண்டகால நட்பின் காரணமாகவே என் வேலைகளை ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட ‘அமுதவல்லி’படத்தின் விளம்பரத்தில், ஒரு நாகப்பாம்பு, ஒரு குழந்தை படத்தைப் போட்டு ‘பாம்பு குழந்தையை கொஞ்ச வருகிறதா ? கொத்த வருகிறதா ?’ என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த விளம்பரம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

‘நாகபந்தம்’நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மீகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான ‘நீயா?’ உட்பட பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

அந்த வகையில், ‘நாகபந்தம்’ படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”.
ஏ.எம். ரத்னம்

“நாகம், நாகக் கன்னிகை, நாகபந்தம் போன்ற தலைப்புகளுக்கே ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. அதேபோல் இந்த ‘நாகபந்தம்’ படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இயக்குநர் அபிஷேக் நாமா இந்தப் படத்திற்கு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டத்தை வழங்கியிருக்கிறார். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது”.

நடிகர் அஜய் ரத்னம்

“நாகத்தை மையமாகக் கொண்ட கதைகள் மற்றும் படங்கள் எப்போதும் மக்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுள்ளன. சிவபெருமானுடன் தொடர்புடைய நாகம் என்றாலே மக்களிடம் ஒரு தனி ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அந்த வகையில் ‘நாகபந்தம்’ படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”

நடிகர் ஜான் கொக்கேன்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

“ புராணக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களை நாம் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில், உலகத் தரத்தில், பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள புராணப் பின்னணியிலான படமாக ‘நாகபந்தம்’ அமைந்துள்ளது. மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டம் கொண்ட படம்”.

‘நாகபந்தம்’விநியோகஸ்தர் சிவ பிரசாத்

‘நாகபந்தம்’ திரைப்படம் உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியையும், மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தையும் தரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் எங்கள் குழுவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், அன்பும் நிறைந்திருக்கிறது”.
ஹீரோயின் நபா நடேஷ்

“இது சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், த்ரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம். படத்தின் கதையும், இதற்கு உருவாக்கப்பட்ட உலகமும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும்”
ஹீரோ விராட் கர்ணா
“இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.

இப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன்.
சென்னை மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்”.

‘நாகபந்தம்’தமிழக விநியோகஸ்தர் முருகன்

“இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி”

இப்படத்தில் நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: எஸ்.செளந்தர் ராஜன் இசைய: அபே வசனம்: கல்யாண் சக்ரவர்த்தி சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பு: சந்தோஷ் காமிரெட்டி, கலை இயக்குநர்: அசோக் குமார் , தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா கெம்பாக்டே ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். பிஆர்ஓ: யுவராஜ்.

கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘நாகபந்தம்’.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.