தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நந்தவனம் பவுண்டேசன் மூலம்
பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமையை அங்கிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் சாதனை மாணவர்கள் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா 10 -11-2024 அன்று திருச்சிராப்பள்ளி ராம் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சவுத் இந்தியா பில்டர்ஸ் அசோசியன் நிறுவனர் பொறியாளர் பா.இராமநிதி தலைமையில் நாடைபெற்ற நிகழ்வுக்கு நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப் அஃப் திருச்சி ஹெனிபீஸ் தலைவர் அனிதா டேவிட் வாழ்த்துரை வழங்கினார்.
மத்திய சேவை மற்றும் சுங்க வரித்துறை உதவி ஆணையர். க வெங்கட சுப்பிரமணியன், அமெரிக்கா சக்தி யோகாலையா இயக்குநர் திருமதி கவிதா இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தனர். . திருச்சி காவிரி கவித்தமிழ் முற்றம் செயலர் முனைவர் ஜா. சலேத் சிறப்புரையாற்றினார். இவர் பேசும்போது குழந்தைப் பருவத்தில் கற்றுத்தரக்கூடிய அல்லது சொல்லித்தரக்கூடிய
செய்திகளும் அனுபவங்களும் தான் ஒரு மனிதனை பிற்காலத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று பெற்றோர்களுக்கு வலியுறுத்தினார் , இன்றைய குழந்தைகள் மிகவும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் பெற்றோர்கள் தான் குழந்தைகளிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது குழந்தைகளின் நிறமைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
அதற்காகத்தான் இது போன்ற விழாக்களும் தேவைப்படுகிறது . எனவே குழந்தைகளைக் கொண்டாடி மகிழ்வோம் என்று குறிப்பிட்டுப் பேசினார். விழாவில் ச. சர்வஜித் (புதுச்சேரி) ச துஷ்யந்த் (தேவக்கோட்டை) மகிழ் லிங்கேஷ் (புதுச்சேரி) சி. அனிஷ் (வேளச்சேரி) எஸ். ஆர்யா (திருச்சி) க. ஆதன் (திருச்சி) சி. ஜான்வி ( வேளச்சேரி ) சு.ஆ. யாழினி (திருச்சி) ம அன்விகா (பொள்ளாச்சி ) நிரஞ்சன் ராஜ் (இராமநாதபுரம் ) ஆர் . தேவா சாய் பிரசாத் (புதுச்சேரி) ஆர். தேஜாஶ்ரீ (புதுச்சேரி) ஆ.தியா (திருச்சி) ந . ஹேஷ்மிதா (தென்காசி) ரேக முகூர்த்தனா (மயிலாடுதுறை) ஆகியோர் சாதனை மாணவர் விருது பெற்றனர் .
முன்னதாக இனிய நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா. தனபால் அனைவரையும் வரவேற்றார். எழுத்தாளர் அந்தோனிராஜ் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கிறார் நிறைவாக இளம்கவிஞர் சு.அ. யாழினி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
– ஆதன்.