தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு !
தேனி மாவட்டம் உப்பாரப்பட்டி டோல்கேட் அருகே தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் கடந்த ஜனவரி 1 தேதி முதல் 31 வரை போக்குவரத்து விழிப்புணர்வு ஒரு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு மாத விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது, தலைக்கவசம் அணிய வேண்டும், இரவு நேரம் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டுனர்களுக்கு தேனீர் வழங்கி புத்துணர்ச்சி வழங்கப்பட்டது.
வாகனங்களுக்கு ஒளிரும் பட்டை ஒட்டப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வந்த 35 பேருக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தப்பட்டது , அதிக பாரம் ஏற்றும் வாகனங்களுக்கு சிறப்பு சோதனை உட்பட பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மணிவண்ணன், அழகேசன், உத்தமபாளையம் பகுதி ஆய்வாளர் சுந்தர ராமன் உட்பட அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
— ஜெய்ஸ்ரீராம்.