கரையான் அரித்த பலகையைப் போல் கழகத்தை ஆக்கிவிடாதீர்கள் – ஜெயலலிதா உதவியாளர் ஆதங்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் பதிவு, மரியாதைக்குரிய நவநீதகிருஷ்ணன் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை இப்போது தேவைதானா? இப்போது இந்த நடவடிக்கை ஆரோக்கியமானதா? அவர் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் கட்சியை விட்டு நீக்கி இருக்கலாமே? அதை விட்டுவிட்டு வழக்கறிஞர் பிரிவின் செயலாளர் பதவியில் இருந்து நீக்க என்ன காரணம்? அவர் பேசியது தவறுதான் மாற்றுக் கருத்தில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதிவியில் அவர் இருக்கும் போது அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்திருக்கலாமே! அதன் பிறகு நடவடிக்கை எடுத்திருக்கலாமே? நடவடிக்கையில் என்ன பாரபட்சம்? தொண்டர்களுக்கு ஒன்று? தலைவர்களுக்கு ஒன்றா? இதையெல்லாம் நான் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது.

மகளிரணி செயலாளர், மீனவர் பிரிவு செயலாளர், வர்த்தக பிரிவு செயலாளர் பதவியில் இருக்கும் போதே மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர். மாநில பொறுப்பில் உள்ளவர்கள் ஏன் கட்சி மாறுகிறார்கள் என்று ஆராய்ந்தீர்களா? இப்படி மாநிலச் செயலாளர்களே மனம் மாறினால் கட்சியின் நிலை என்ன? கட்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இப்படி போய்க் கொண்டிருப்பது கட்சிக்கு நல்லதா? இது என் கேள்வி அல்ல! தொண்டர்களின் கேள்வி!

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

கரையான் அரித்த பலகையைப் போல் கழகத்தை ஆக்கிவிடாதீர்கள். அன்பால் அரவணையுங்கள், ஆறுதலாய் பேசுங்கள். பொறுப்பு வழங்க மனம் இல்லை என்றாலும் உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள். அன்பாய் பேசினாலே யாரும் கழகத்தைவிட்டு செல்லமாட்டார்கள். உழைப்பவர்களிடம் பேசுவதால் ஒன்றும் உங்கள் தகுதி குறைந்துவிடாது, நீங்களும் தொண்டராக இருந்து உயர்ந்தவர்கள் தான். உள்ளாட்சித் தேர்தலில் கட்சியை விட்டு சென்று மீண்டும் இணைந்தவர் களுக்கு, இணைய ஆசை உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மற்றவர்களின் ஒப்புதலோடு வாய்ப்பு கொடுத்தால் கழகம் உள்ளாட்சித் தேர்தலில் உறுதிப்படும்.

தேர்தல் தோல்விக்கு பிறகு மாற்றங்களை செய்ய நீங்கள் நினைக்க வேண்டும். தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயல வேண்டும். தகுதி இல்லாதவர்களை மாற்றுவதன் மூலமே உங்களை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள முடியும். இதைக் சொல்வதால் என்னை நீங்கள் விமர்சனம் செய்யலாம். நான் சொல்வது கட்சியின் நலனுக்கே!

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பாருங்கள். மாற்றத்தை செய்து மாற முயற்சி செய்யுங்கள்.என்று குறிப்பிட்டுள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.