திருச்சி மாநகராட்சி தேர்தலும், காங்கிரஸ் கட்சி கடந்து வந்த பாதையும்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ஜனவரி 29 சனிக்கிழமை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ், கலை ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களை அமைச்சர் கே என் நேரு ஒதுக்கினார். ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி 5 இடங்கள் வேண்டும் என்று கோரியது, பிறகு நீண்ட இழுபறிக்குப் பிறகு அமைச்சர் கே என் நேரு காங்கிரஸ் கட்சிக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்குவதாக ஒப்புக்கொண்டார். அதேநேரம் 65, 2,63 ஆகிய 3 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வரை காங்கிரஸ் கட்சி தேர்தல் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்த நிலையில் நேற்று ஜனவரி 30 அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி, ஜெரோம் ஆரோக்கியராஜ், முன்னாள் மேயர் சுஜாதா உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் திடீர் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் தற்போதுள்ள மாவட்டத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் திமுகவிடம் இருந்து அதிக இடங்களை கேட்டுப் பெறுவது, நேற்று மாவட்ட தலைவர்கள் அமைச்சர் கே என் நேருவுடன் நடத்திய பேச்சுவார்த்தை செல்லாது, மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்பட்டிருந்த கூடிய பேச்சுவார்த்தை குழு தான் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் வார்டுகளை தேர்வு செய்ய வேண்டுமென்றும் முடிவு செய்திருக்கின்றனர்.

3

இதையடுத்து ஜனவரி 31 இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான திருநாவுக்கரசு திருச்சி வருகிறார். இவர் திமுகவின் முதன்மை செயலாளர் கே என் நேரு உடன் திருச்சியில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அதேநேரம் 2011 திருச்சி மாநகராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து பார்ப்போம். கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்ட ணியில் இருந்து காங்கிரஸ் விலகியது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் அப்போது 64 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி தனித்து வேட்பாளர்களை களம் இறக்கியது. போட்டியிட்ட 64 வார்டுகளில் 44 வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹேமா மட்டுமே 1,511 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 60 வார்டுகளின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

2011 – ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது. இதில் 65 வார்டுகளிலும் 3,75,981 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயா 1,61,458 ஓட்டு கள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க . வேட்பாளர் விஜயா ஜெயராஜ் 1,09,043 ஓட்டுகள் பெற்று 2 – ம் இடம் பிடித்தார். தனித்து களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜயா 15,387 ஓட்டுகள் பெற்று 5 – ம் இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

4

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.