சீனியரை அடித்து மண்டியிட வைத்த ஜூனியர்கள் ! கல்லூரி எடுத்த நடவடிக்கை !
சீனியரை அடித்து மண்டியிட வைத்த ஜூனியர்கள் ! கல்லூரி எடுத்த நடவடிக்கை !
கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் , சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் கொடூரமாக தாக்கி உள்ளனர். பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டி சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, கைகளை உயர்த்த சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
சீனியர் மாணவர் இரத்தக் காயங்களுடன் வலியால் கதறியும், ஜூனியர் மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்து உள்ளனர். இந்த தாக்குதலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம், கல்லூரிகளில் மாணவர்கள் இடையே நிலவும் வன்முறை கலாச்சாரத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோவை நேரு கல்லூரியில் நடைபெற்ற மாணவர்கள் சஸ்பெண்ட் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விளக்கம்.
இச்சம்பவம் ராக்கிங் அல்ல முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர் தங்கி இருந்த அறையில் பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு சீனியர் PG மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது சம்பந்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர் ஆகியோரை அவர்களுடைய பெற்றோர் முன்னிலையில் கல்லூரி நிர்வாகம் நாளை (24.03.2025) விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் உறுதி அளித்து உள்ளார்கள் .