நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 5A செட்டில்மென்ட் – வேலைக்கு ஆகுமா? ஆகாதா? விரிவான விளக்கம் ! –
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 5A செட்டில்மென்ட் – வேலைக்கு ஆகுமா? ஆகாதா? விரிவான விளக்கம் ! – நியோமேக்ஸ் மோசடி வழக்கில், கண்ணுக்கெட்டிய தொலைவில் தீர்வை காண முடியாத அளவுக்கும் சட்டசிக்கல்களும், குழப்பங்களுமே நீடித்து வருகின்றன. ஒரு பக்கம் தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் TNPID act – 5A சட்டவிதியின்படி நிலமாகவே பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை முழுமூச்சாக மேற்கொண்டு வருவதாக தகவல்களை பரப்பி வருகிறார்கள். ”இதுவரை புகார் கொடுக்காதவர்கள் அவசரப்பட்டு புகார் கொடுத்துவிடாதீர்கள்” என்று நிலைகொள்ளாது ஓடிவரும் தேர்ச்சக்கரங்களுக்கிடையே கட்டையை போடுவது போல பதிவுகளைப் போட்டு வருகிறார், மூத்த குடிமக்கள் சங்கத்தை சேர்ந்த தியாகு சுந்தர்ராஜன்.
இவற்றுக்கு மத்தியில், 5A செட்டில்மென்ட் என்பதே மோசடி என்றும் இதுபோன்ற குறுக்கு வழிகளில் அல்லாமல், சட்டரீதியான முன்னெடுப்புகளால் மட்டுமே காலதாமதம் ஆனாலும் முறையான தீர்வை பெறமுடியும் என்பதாக சிவகாசியை சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களுக்குள் “நியோமேக்ஸ் சட்டப்போராட்டக்குழு” என்பதாக ஒருங்கிணைப்புக்குழுவை உருவாக்கிக்கொண்டு முன்னெடுத்து வருகின்றனர்.

நியோமேக்ஸ் முதலீட்டாளர்களிடையே தற்போது நிலவிவரும் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், கேள்வி – பதில் பாணியில் விரிவான விளக்கமாக தொகுத்தளித்திருக்கிறார், நியோமேக்ஸ் சட்டப்போராட்டக்குழுவைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி.
1. கேள்வி : TNPID act படி 5A செட்டில்மென்ட் என்றால் என்ன? அதை யார் முன்னிலையில் யாரெல்லாம் செய்து கொள்ளலாம்?
பதில் : குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்படி நியமிக்கப்பட்ட அதிகாரி முன்பு ( நியோ மேக்ஸ் வழக்கு விசயத்தில்- மதுரை – மாவட்ட வருவாய் அலுவலர் ) சமரச தீர்வு ஏற்படுத்திக் கொள்வதற்கு, பொருளாதார குற்றங்கள் சார்ந்த சிறப்பு சட்டத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் ஒரு சட்ட விதி.
2. கேள்வி : இதை யார், யாரிடம் சென்று சமரச தீர்வு ஏற்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும்?
பதில் : மோசடியில் ஈடுபட்டு, குற்ற வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும் நிறுவனம், அந்த குற்ற நடவடிக்கைகளில் இருந்து விரைவில் விடுபட்டுக் கொள்வதற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தனது இறுதி புலனாய்வு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு என்றால் ( குற்றவியல் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ) உரிய competent authority (DRO) யை அணுகி அனுமதி பெற வேண்டும்.
3. கேள்வி : நிலம் கொடுத்து தீர்வு காண்பதற்கு இந்த விதியில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளதா?
பதில் : பணமாக எப்படி செட்டில்மென்ட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலமாக கொடுக்க விருப்பம் இருந்தால் அதற்கான திட்டம் பற்றிய விரிவான விவரங்களை உயர்நீதி நீதி மன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும். ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதால் அதற்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு.
4. கேள்வி: பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்று தனி நபர், குழு, சங்கம் அல்லது அது போன்ற வேறு எந்த அமைப்பும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அழைத்து சமரச தீர்வு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உரிய அனுமதி இல்லாமல் மனு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கலாமா?
பதில்: இவ்வாறான விசயங்களை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அதாவது மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை தவிற வேறு யார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள இயலாது என மாண்புமிகு உயர்நீதி மன்றம் ஏற்கெனவே தீர்ப்பு கொடுத்துள்ளது. முன்பு இது போன்று செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு நீதி மன்றம் தடை விதித்துள்ளது. ஆகையால் சங்கம் என்ற போர்வையில் நிறுவனத்துடன் இணைந்து யார் இத்தகைய பணியை செய்தாலும் அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து பணமாக தீர்வு காண்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் காலத்தை தாமதப்படுத்துவதற்கு துணை போக வேண்டாம்.

5. கேள்வி: சாதாரணமாக சட்டப்படி எப்படி தீர்வு காணப்படும்?
பதில்: முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடன் மோசடி செய்தவர்களின் அனைத்து சொத்துக்களை (பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமானது) முறையாக கைப்பற்றி, உரிய அரசாணை பெற்று, முறையாக ஏலம் மூலமாக விற்று பணமாக்கி அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை மற்றும் மோசடி செய்தவர்களின் சொத்துக்களை விற்று & கைப்பற்றப்பட்ட பணம் ஆகியவை எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிட்டு விகிதாச்சார அடிப்படையில் பங்கிட்டு வங்கி மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்படும்.
6. கேள்வி: நியோமேக்ஸ் விசயத்தில் முறைப்படி தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?
பதில்: பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் தங்கள் வேலைகளை முறைப்படி செய்து கொண்டிருக்கின்றன. அதில் எந்த வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
7. கேள்வி: நியோமேக்ஸ் நிறுவனம் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு தருகிறதா?
பதில்: இல்லை. சட்டப்படி செயல்படுத்த வேண்டிய நடைமுறைகளை செயல்படுத்த விடாமல், நேரடியாகவும் மறைமுகமாகவும் இடையூறுகளை ஏற்படுத்தி கால தாமதம் ஆக்குவதற்கு நிறுவனத்தால் இயன்ற அத்தனை சட்ட விரோத செயல்களையும் வெளிப்படையாக செய்து கொண்டிருக்கிறது.
8. கேள்வி: மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் அனைத்தும் சரியாக மற்றும் கால தாமதம் இன்றி அமல்படுத்தப்படுகிறதா?
பதில்: இல்லை. கால தாமதம் ஆகிறது. நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகளின் அனைத்து சொத்துக்களையும் நிறுவனம் தானாக EOW விடம் ஒப்படைக்கவில்லை. சொத்துக்களை விற்று பணமாக்குவதற்கும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நிறுவனத்தார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு பயன்படுத்த வேண்டிய சொத்துக்களை விற்று புதிய தொழில்களை அமோகமாக செய்து கொண்டு சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதலீட்டாளர்களின் உண்மையான விவரங்கள் மற்றும் நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து டெபாசிட்டாக பெறப்பட்ட தொகையின் விவரங்களை EOW விடம் ஒப்படைக்கவில்லை. சாட்சிகளை கலைப்பது வெளிப்படையாக செயல்படுத்தப்படுகிறது.

9. கேள்வி: நிறுவனத்தின் சட்ட விதி மீறல்கள் கட்டுப்படுத்தப்படுகிறதா?
பதில்: இல்லை. மறைமுக அதிகார வர்க்கம் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுகிறது. அதனால் நிறுவனம் செய்யும் அனைத்து சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த இயலாமலும், நீதி மன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த இயலாமலும் சம்பந்தப்பட்டவர்கள் அன்றாட சாதாரண வேலைகளை மட்டும் ஏனோ தானோ என்று செய்து காலத்தை கடத்துகின்றனர்.
10. கேள்வி: விரைவில் தீர்வு கொடுக்க கூடாது என்று திட்டமிட்டு செயல்படும் நிறுவனத்திற்கு சாதகமாக காவல்துறையில் புகார் கொடுத்த சிலர் செயல்படுகின்றனரா?
பதில்: ஆம். 5A செட்டில்மென்ட் செய்து கொடுக்கிறோம் என்று ஒரு பிரிவினர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அதிக விலையில் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று கொடுக்கும் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். அவர்களை பெருமளவு நம்பி இருந்த பல நூறு பேர் அவர்களின் தில்லாலங்கடி வேலைகளை புரிந்து கொண்டு நடக்கும் சட்ட விரோத செயல்களை அம்பலப்படுத்தி விட்டதால் வியாபாரம் போனியாகவில்லை என்ற விரக்தியில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்த சிலர், அந்த அமைப்பிற்கு இப்படி செட்டில்மென்ட் செய்து கொடுக்க எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை என நன்கு அறிந்தும் ஏதோ ஒரு வழி பிறக்காதா என்ற ஆதங்கத்தில் அவர்களுக்கு துணை போகின்றனர்.
11. கேள்வி: காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு, தீர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு, எப்பொழுது தீர்வு கிடைக்கும்?
பதில்: உயர்நீதி மன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்டவர்கள் சரியாக செயல்படுத்தினால் 2026 ஆம் ஆண்டில் தீர்வு கிடைக்கும்.
12. கேள்வி: விரைவில் தீர்வு காண்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில்: மாண்புமிகு உயர்நீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்து, நிறுவனத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். EOW விற்கு நிறுவனம் ஒத்துழைப்பு கொடுத்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். நிறுவனத்தின் ஒத்துழைப்பை பொறுத்து தான் தீர்வு கிடைக்கும் காலத்தை நிர்ணயிக்க இயலும். இல்லை என்றால் குற்றம் செய்த நிறுவனத்தார்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிய பின் தான் அதிகாரிகளால் அவர்களுடைய பணியை திறம்பட செய்ய இயலும்.
குற்றம் செய்தவர்களின் ஜாமீனை ரத்து செய்யாத வரை இந்த வழக்கு ஒரு முடிவிற்கு வராது என்பது தான் இப்பொழுது இருக்கும் நிலவரம். அவர்கள் வெளியில் இருந்தால் நியாயமாக நடக்க வேண்டிய தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி, 5A செட்டில்மென்ட் என்ற முறையில் நிலமாக தீர்வு, என ஆகாத விசயங்களை செய்வது போல் காட்டி காலத்தை கடத்தி விடுவார்கள்.
சுயநலத்திற்காக அவர்களுக்கு துணை போக பலர் இருப்பதால் யாருக்கும் செட்டில்மென்ட் விரைவில் கிடைக்க வாய்ப்பு இல்லை. 5A செட்டில்மென்ட் என்று சொல்லி சொல்லியே காலத்தை கடத்துகிறார்கள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சட்ட விரோதமான இந்த ஆகாத வெட்டி வேலையை உடனடியாக நிறுத்தினால் தான் நியாயமான தீர்வை நோக்கி நாம் பயணிக்க இயலும். அதனால் இந்த முறையற்ற 5A செட்டில்மென்ட்டை நிறுத்துவதற்கான வழிமுறைகளை நீதி மன்றம் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுவரை எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்பதை யாராலும் நிர்ணயிக்க இயலாது.

சட்ட பூர்வமான செயல்களுக்கு மட்டுமே ஆதரவு. சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுத்தப்படும் அனைத்து செயல்களுக்கும் எதிரான சட்டப் போராட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ளவர்கள் தனி தனியாக குழு அமைத்து தேவையான வழக்குகளை தொடுக்க வேண்டும். இல்லை என்றால் நிறுவனத்தை நம் வழிக்கு கொண்டு வர இயலாது. மற்றும் அதிகாரிகள் தங்களுடைய பணியை இயல்பாக செய்ய இயலாத நிலை ஏற்படும். முன்பு 5A செட்டில்மென்ட் மீது நம்பிக்கை இருந்தவர்களுக்கு இப்பொழுது நடப்பது என்ன என்ற உண்மை புரிந்து விட்டதால், இனியாவது நல்ல விசயங்களுக்கு மட்டுமே ஆதரவாக இருங்கள் இல்லை என்றால் கால தாமதம் ஆவதற்கு துணை போனவர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும்.
13. கேள்வி: உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தால் தீர்வு காண்பதற்கு கால தாமதம் ஆகுமா?
பதில்: இல்லை. ஏற்கெனவே தீர்வு காண்பதற்குரிய விதிமுறைகள் மற்றும் காலஅளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் செயல்பட்டால் கூட தீர்வு கிடைப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். வழக்கு தாமதமாவதற்கு முக்கிய காரணம் நிறுவனத்தின் ஒத்துழைப்பு இல்லை என்பது தான். நிறுவனம் தன்னிடம் இருக்கும் சொத்துக்களின் அசல் ஆவணங்களை சமர்ப்பித்து அது விற்று செட்டில்மென்ட்டிற்கு பயன்படுத்த ஒத்துழைத்தால் வழக்கு விரைவில் முடிவிற்கு வந்து விடும்.
14. கேள்வி: நிறுவனம் ஏன் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறது?
பதில்: விரைவாக தீர்வு கொடுக்க வேண்டும் என்றால், DRO அவர்கள் முன்னிலையில் 5A செட்டில்மென்ட் விதிப்படி முறையாக பணம் மூலமாகத்தான் தீர்வு கொடுக்க முடியும். அதற்கு நிறுவனம் போதுமான சொத்துக்களை தானாக முன்வந்து சமர்ப்பித்து அதை விற்பதற்கு துணையாக இருக்க வேண்டும். அதற்கு நிறைய சொத்துக்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நிதி நிறுவனம் போல் செயல்பட்டது உறுதியாகிவிடும்.
அதனால் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் சாதாரனமான முறையில் தீர்வு என்றால், காவல்துறை நிறுவனத்தின் சொத்துக்களை கைப்பற்றி அதை DRO அவர்கள் ஏலம் விட்டு விற்று பணமாக மாற்றி தீர்வு கொடுக்க வேண்டும். அதற்கும் நிறுவனம் தன்னிடம் உள்ள நிறைய சொத்துக்களை இழக்க நேரிடும். நிறுவனத்திடம் இருக்கும் முதலீட்டாளர்களின் பெரும்பாலான தரமான சொத்துக்களை நிறுவனம் தீர்வு காண்பதற்கு கொடுக்க மறுக்கிறது. அதை அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது.

15. கேள்வி: பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய போராட்டங்கள் செய்தால் விரைவில் தீர்வு காணலாம்?
பதில்: மாண்புமிகு உயர்நீதி மன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தவறிய நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, தன் வசம் உள்ள சொத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக விற்ற சொத்துக்களால் கிடைக்கப் பெற்ற உண்மையான தொகையை உடனடியாக EOW விடம் ஒப்படைக்க செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம.
அதே சமயத்தில் காவல்துறை நிறுவனத்தின் சொத்துக்களை இதுவரை முறையாக கைப்பற்றாததை கண்டித்து உறிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு செயல்களை செய்யலாம். விதி முறைகளுக்கு மாறாக நிலமாக 5A செட்டில்மென்ட் என்று பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு செயல்களை செய்யலாம்.
நிறுவனத்தார்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தலை மறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரியும் கவன ஈர்ப்பு செயல்களை செய்யலாம். முதல் தகவல் அறிக்கை படி குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம்.
பல துணை நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தலாம். ஜாமீனில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் பற்றி மறு பரிசீலனை செய்து கடுமையான விதிகளை அமல்படுத்த வழக்கு தொடுக்கலாம். நிறுவனத்தார்களின் பினாமி சொத்துக்களை கண்டறிந்து அவற்றை கைப்பற்ற சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தலாம்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
ராமமூர்த்தி மூத்திரத்த குடிக்கிற *angusam* நாயி
இப்படி ஒரு விமர்சனம் அவசியம் இல்லை என்று நினைக்கிறோம்..
Unakku Kidaytha 400 aaker engada.