நியோமேக்ஸ் வழக்கு ! சங்கத்தை நம்பாதே… அம்பலப்படுத்திய முதலீட்டாளர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், ஒரு பக்கம் நிலங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் சோர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் அணுகுமுறையில் காரம் குறைந்திருப்பதாக உணர்கிறார்கள். அரசு வழக்கறிஞர்களும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரும், நியோமேக்ஸ் நிறுவனமும் சொல்லும் காரணங்களை அப்படியே ஏற்று வழக்கை தள்ளிப்போட்டுக் கொண்டே செல்கிறார் என்பதாக அதிருப்தி கொள்கிறார்கள்.

மாறாக, முன்னணி இயக்குநர்களின் பெயிலை கேன்சல் செய்துவிட்டு சிறையில் அடைத்துவிட்டு வழக்கை விசாரிக்க வேண்டுமென்று ஆதங்கப்படுகிறார்கள். இப்படியே போனால், தீர்வு காண இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? என ஏக்கம் கொள்கிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இதற்கிடையில், தீர்வை நிலமாக பெற வேண்டுமா? பணமாக பெற வேண்டுமா? பணமாக பெற வேண்டுமென்போர்கள் முதிர்வுத்தொகையுடன் பெற வேண்டுமா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமா? எது எதற்கெல்லாம் வழக்கு தொடுக்கலாம்?  என்பது குறித்து தனிநபர்கள் தொடங்கி, வாட்சப் குழுக்கள், பல்வேறு சங்கங்களின் பெயர்களில் பட்டிமன்றங்களை நடத்திவருகிறார்கள். வாட்சப் குழுக்களில் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்கள். இத்தகைய விவாதங்கள் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் அதிருப்தியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கின்றன. நீதிமன்றத்தின் மீதும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் மீதும் நம்பிக்கையை குறைக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

இந்நிலையில், இதுபோன்ற விவாதங்களுக்கு ஊடாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் இத்தகைய சிக்கலை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து வாட்சப் குழு ஒன்றில் தனிப்பட்ட கருத்தை பதிவிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது இவரது கருத்தாழமிக்க உரை.

கேட்டுப் பாருங்கள் …

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.