பிராடுத்தனம் … நம்பிக்கை மோசடி … குறுக்கு புத்தியே நியோமேக்ஸின் மூலதனம் !
நியோமேக்ஸ் பிராடுத்தனம்… நம்பிக்கை மோசடி… குறுக்கு புத்தியே நியோமேக்ஸின் மூலதனம் ! அங்குசம் !
நியோமேக்ஸ் தொடர்பாக, கடந்த காலங்களில் அங்குசம் இதழில் எழுதியவை மற்றும் அங்குசம் யூட்யூப் சேனலில் பேசியவைகளின் தொகுப்புகளை மீள் பிரசுரம் செய்து வருகிறோம். பழைய செய்திதான் ஆனாலும், இன்றைய காலத்திற்கு தேவையான செய்தி என்ற வகையிலும் புதிய வாசகர்களுக்கும் அந்த தகவல் சென்று சேர வேண்டுமென்ற நோக்கிலும் இதனை வெளியிடுகிறோம்.
2023, அக்டோபர் 4 அன்று பதிவான இந்த செய்திக் கட்டுரையில், நியோமேக்ஸ் நிறுவனம் எப்படியெல்லாம் தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை பதிவு செய்திருப்பதோடு, எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

”நியோமேக்ஸ் என்ற நிறுவனம் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்ட பத்மநாபன் ஆகட்டும்; தனது நிர்வாகத்திறமையால் முக்கியமாக வசீகரமான பேச்சுத்திறமையால் பலரையும் வளைத்துப்போட்ட பாலசுப்ரமணியன் ஆகட்டும், மற்றும் அதன் முன்னணி இயக்குநர் களாகட்டும் தலைமைப் பொறுப்பில் உள்ள பெரும்பாலோனோர் அரசு பொதுத்துறை நிறுவனமான, எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்; மேலாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருந்தவர்கள்; மெத்தப் படித்தவர்கள்.
குறைந்தபட்சம் ஏலச்சீட்டு நடத்துவதற்குக்கூட ஏகப் பட்ட விதிமுறைகள் கெடு பிடிகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது என்பதை அறியாத அரைவேக்காடுகள் அல்ல அவர்கள். பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலிப்ப தென்றால் செபியின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்பதையும் அவர்கள் அறியாதவர்கள் அல்ல. மாறாக, தங்களது குறுக்குப்புத்தியை பயன்படுத்தி, அரசின் விதிமுறைகளை எப்படியெல்லாம் மீறலாம்; எப்படியெல்லாம் பிராடுத்தனம் பன்னலாம் என்பதையெல்லாம் ரூம் போட்டு யோசிச்சிருப்பார்கள் போல! …”
முழுமையான கட்டுரையை வாசிக்க
முட்டுச்சந்தில் சிக்கித்தவிக்கும் நியோமேக்ஸ்!