நியோமேக்ஸ் எம்.டி. பாலாவின் தேனொழுகும் பேச்சில் மயங்கித்தான் வீழ்ந்தோம் ! மீண்டும் அவரை நம்பி புதைகுழியில் வீழ வேண்டுமா ?
நியோமேக்ஸ் எம்.டி. பாலாவின் தேனொழுகும் பேச்சில் மயங்கித்தான் வீழ்ந்தோம் ! மீண்டும் அவரை நம்பி புதைகுழியில் வீழ வேண்டுமா ? நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், அவரவர்கள் அவரவர்களுக்குரிய வழிமுறைகளின்படி சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். எப்படியாவது இழந்த பணத்தை மீட்டு விட வேண்டுமென்ற முயற்சியில் முனைப்பாக இருக்கிறார்கள். அவற்றுள் சிலர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
அவ்வாறு தொடுக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றுதான், திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் தொடுத்த வழக்கு. நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முறைகேடான முறையில் விற்று வருகிறார்கள் என்று பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த சமயத்தில், ”நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும். அதனை அரசு கைப்பற்றி ஏலத்தில் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு செட்டில் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன் தொடுத்த வழக்கு அது. வழக்கு தொடுத்ததோடு சரி. அதன்பிறகு, முறையாக அந்த வழக்கை அவர் நடத்தவில்லை.
மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் எடுத்து பேசவில்லை என்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி, “மனுதாரர் மீது சந்தேகம் உள்ளது. மனு தாக்கல் செய்வீர்கள்; பின் வாபஸ் பெறுவீர்கள். மனுதாரருக்கு ஏன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது என கேள்வி” எழுப்பி வழக்கை ஜூலை-19 அன்று ஒத்தி வைத்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக முத்துக்குமரனை தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதற்கிடையில், ”இவர்கள் நீதிமன்றத்தையும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரையும் மிகவும் தந்திரமான முறையில் கையாண்டு வருகிறார்கள். அதற்கு நல்ல உதாரணம் இந்த வழக்கு. நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியனின் தேனொழுகும் பேச்சில் மயங்கித்தான் தற்போது வீழ்ந்து கிடக்கிறோம். மீண்டும் அவரது நயவஞ்சகத்திற்கு இரையாகிவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறார், சிவகாசி ராமமூர்த்தி.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, அவரது தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். அதில், “மோசடி குழும நிறுவனங்களின் தலைமை அலுவலக இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இப்பவும் இரு பாலினத்தை சேர்ந்த பலர் ஆதரவாக பேசுவது ஒன்றும் ஆச்சரியப்படும் விசயம் அல்ல. ஏனென்றால், நிறுவனம் வளர்ந்தது எந்த விதத்தில் என்பதை நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நன்கு அறிவர்.
நிறுவனத்தின் MD, நல்லவர் வல்லவர்.
அவர் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு செட்டில்மென்ட் செய்து கொடுக்க முயற்சி செய்கிறார். அவரை பேச்சு வார்த்தைக்கு வரவழைப்பதே பெரிய விசயம். இப்பொழுதுள்ள சூழ்நிலையில், அவரை அனுசரித்து போக வேண்டும். மற்ற முக்கிய நிர்வாகிகள் செட்டில்மென்ட் விசயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், இவரை விட்டால் வேறு ஆள் நமக்கு துணையாக இருக்கமாட்டார்கள் என்று கூறுபவர்கள் சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
எப்படியெல்லாம் பேச்சாற்றல் மூலமாக அப்பாவி மக்களை ஏமாற்றி, ஆசை வார்த்தைகளால் நிறுவனத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி பணம் வசூலித்த பின்பு அதை சட்டத்திற்கு புறம்பாக எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்; மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி மோசம் செய்யலாம் என நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலமாக இப்பொழுது பாதிக்கப்பட்ட பெரும்பாலோரை அப்பொழுது நேரடியாகவோ; அல்லது meeting மூலமாகவோ தன்னுடைய பேச்சாற்றல் திறமையால் மக்களை கவர்ந்து மோசடி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி; பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்து; இப்பொழுது அதை சொந்தம் கொண்டாடுபவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக சுயநலத்திற்காக திரும்பப் பெற்று தன் குடும்பத்தார்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சொத்தாக மாற்றுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த MD & chairman. அதில், வெற்றி காணும் பொழுது அதை வெளியிடுவதில்லை.
தோல்வி ஏற்படும் பொழுது நிறுவனத்திற்கு இணக்கமாக செயல்படுபவர்களிடம் அதன் விவரங்களை தெரியப்படுத்தி, ”உங்கள் குழு மூலமாக இதை இப்படி செய்யுங்கள்” என தூண்டி விட்டு, அதை செய்வதற்கு தேவையான வசதிகள் மற்றும் பணம் கொடுத்து அவர்களை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கூட்டு திருடர்கள்.
இதன் மூலம் மற்ற நிர்வாகிகள் மீது உள்ள பினாமி சொத்துக்களை அவர்களுடைய சுயநலத்திற்காக கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள் இந்த MD & chairman. இந்த மோசடி மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு இணக்கமானவர்கள் யாரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்படவில்லை; அவர்களின் சுய நலத்திற்காக செயல்படுகிறார்கள், என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மோசடியில் கை தேர்ந்த இவர்கள் அவர்களுக்கு இணக்கமானவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் என்பதை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளை வைத்து புரிந்து கொள்ள முடியும். MD எப்படியோ அப்படியே அவரைச் சார்ந்தவர்களையும் மாற்றி விடுவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இப்பொழுது சிக்மா வின் மார்க்கெட்டிங் மேனேஜரை (முத்துக்குமரன்) எடுத்துக் கொள்ளலாம். உயர்நீதி மன்றத்தில் attachment சம்பந்தமாக வழக்கு தொடுத்து நிறுவனத்தை அச்சுறுத்தி அதன் பின் அவரிடம் ஐக்கியம் ஆகிவிட்டது எல்லோரும் அறிந்த விசயம்.
நீதிமன்றத்தின் உத்தரவு படி MD நடந்து கொண்டாரா? நிறுவனம் மற்றும் பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களை தெரிவித்து அதன் அசல் ஆவணங்களை ஒப்படைத்து அதை முறையாக விற்பதற்கு துணையாக இருந்திருந்தால், பிரச்சினைகளை எப்பொழுதோ முடித்து வைத்திருக்கலாம். அதில் ஆர்வம் காட்ட வில்லை என்பதிலிருந்தாவது அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
MD க்கு மோசடியாக வசூல் செய்த பணத்திலிருந்து வாங்கப்பட்ட சொத்துக்கள் எங்கு? எவ்வளவு? எந்த ரூபத்தில் யார் யாரிடம்? இருக்கிறது என்பது தெரியும். நல்ல எண்ணம் கொண்டவர் எனில், அதை வெளியிட வேண்டும். அவற்றை மறைக்கிறார் என்றால், அவர் உள் நோக்கத்துடன் சுயநலத்திற்காக செயல்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
அவருக்கு இணக்கமானவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாபார ரீதியில் ஏனோ தானோ என செட்டில்மென்ட் செய்து கொடுத்து விட்டு மீதம் உள்ள பதுக்கி வைத்திருக்கும் பெரிய சொத்துக்களை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தரமான சொத்துக்கள் மீது வங்கி கடன்களை வாங்கி அதை சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள். நல்ல சொத்துக்கள் மீது பைனான்ஸியர்களிடம் கடன் வாங்கி அதையும் அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள். 2021 ஆம் ஆண்டு முதலே மக்களிடமிருந்து பல நூதன முறைகளில் மோசடி செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் தான் பணம் வசூல் செய்தார்கள். அதில் முக்கிய பங்கு வகித்தது இந்த MD என்பது பலருக்கும் தெரிந்தது தான்.
2023 ஆம் ஆண்டு காவல்துறை மூலமாக பிரச்சனைகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் நம்மிடம் பணம் கேட்க மாட்டார்கள் மற்றும் புகார் கொடுக்க மாட்டார்கள் அவர்களுடைய முதலீட்டை சிறிது காலம் கழித்து அதாவது வழக்கை இழுத்தடித்து அதன் பின் ஒன்றுக்கு பாதி என்ற விகிதத்தில் புகார் கொடுத்தவர்களுக்கு மட்டும் செட்டில்மென்ட் கொடுத்து விட்டு மீதி உள்ள பல ஆயிரம் கோடி சொத்துக்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டு செய்த சதி தான் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
மோசடி மன்னர்கள் மேலும் மேலும் மோசடி செய்வதற்குத் தான் முயற்சி செய்கிறார்களே தவிர நல்ல எண்ணங்களுடன் செயல்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறை நடவடிக்கை ஏற்படாமல் இருந்தால் முதலீடு செய்த பல லட்சம் பேருக்கும் திருப்பிக் கொடுக்க வேண்டியதிருக்கும்.
அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அதை கேட்டு தொந்தரவு செய்வார்கள் அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக சிலரை புகார் கொடுக்க தூண்டினார்கள் மற்றும் காவல் துறையிடம் சமரசப் பேச்சு என பல மாதங்களை காலம் கடத்தினார்கள். இறுதியில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வைத்து திட்டமிட்டபடி ஓடி ஒழிந்து கொண்டார்கள்.
இதுவரை அசையா சொத்துக்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் அதிக அளவு ரொக்கப் பணம் கைப்பற்றப்படவில்லை. காரணம் அதை முன் கூட்டியே திட்டமிட்டு ஒளித்து வைத்து விட்டார்கள்.
இப்பொழுது நடப்பதெல்லாம் மீண்டும் மக்களை நம்பவைத்து வழக்கை எளிதாக முடிக்க விடாமல் காலம் கடத்தும் செயலைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன் குறைந்தளவு உதவாத சொத்துக்களை மட்டும் கொடுத்து அதை சந்தை மதிப்பிற்கு விற்க முயற்சி செய்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு நம்மிடம் பணம் வாங்கும் பொழுது இந்த நிலங்களின் விலை என்னவாக இருந்தது என்பதை கணக்கில் கொள்வதில்லை. நம்மிடம் வாங்கிய பணத்திற்கு ஊக்கத்தொகை இல்லை என்பதும் அவர்களுடைய நிலங்களுக்கு மட்டும் இப்பொழுது உள்ள சந்தை மதிப்பு என்றால் அது நியாயமா? இதில் இப்பொழுது சிறிது மாற்றம் ஏற்பட காரணம் மக்கள் சில விசயங்களை புரிந்து கொண்டார்கள் என்பதற்காகத்தான்.
இப்பொழுது ஏதோ ஒன்றை சொல்லி வைப்போம் என்று செயல்படுகிறார்களே தவிர உண்மையாக அதிகாரப் பூர்வமாக ஒரே நேரத்தில் அனைவரும் பலன் பெரும் வகையில் செயல்படவில்லை என்பதை வைத்தே அவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
பல துணை நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் பெயரில் சொத்துக்கள் உள்ளன. அதனால் அதன் இயக்குனர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டுமே தவிர இப்பொழுது செய்வதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் உள்ளது.
எதை செய்ய இயலாதோ, அதை செய்ய முயற்சி செய்வது எதனால் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து அவற்றின் பெரும்பாலானவற்றை பதுக்கிய பின்பு கூட எஞ்சியவற்றை கூட சரியாக உரிய துறைகளிடம் முறையாக ஒப்படைத்துத் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களை புகழ்ந்து பேசுவது எதனால் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நிறுவனத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள சொத்துக்களை விற்றவர்கள் யார்? அதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது யார்? அவற்றை மீட்க நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் என்பதைப் பற்றி இந்த MD விளக்கம் கொடுக்க இயலுமா?
உள்ள சொத்துக்கள் அனைத்தும் மோசடியாக சம்பாதித்தது தானே அதனை உரியவர்களிடம் ஒப்படைக்காதது ஏன்?
பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பிச்சை போடுகிறாயா? ஒரு குழுவிற்கு மட்டும் செட்டில்மென்ட் என்றால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் ஆக தெரியவில்லையா? இல்லை, அவர்கள் உன்னுடன் வியாபார ரீதியில் ஒத்துழைக்காதது தான் காரணமா? ஒரு தரப்புடன் மட்டும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு அனைவருக்குமான செட்டில்மென்ட் பற்றி உன்னால் இயன்றதை செய் இல்லையெனில் நீ செய்வது ஏமாற்று வேலை என்பதை ஒப்புக்கொள்.
MD க்கு ஜால்ரா அடிப்பவர்களுடைய எண்ணங்கள் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொது நலனுடன் செயல்பட வேண்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். ஒரு தரப்பிற்கு மட்டும் துதி பாடுவது ஏற்புடையதல்ல என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
புகார் கொடுக்க விடாமல் திட்டமிட்டு பெரும்பாலோரிடமிருந்து அசல் ரசீதுகளை நிர்வாகிகள் மூலமாக முதிர்வு தொகை கொடுப்பதற்கு வேண்டும் என அப்பாவிகளிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளச் செய்தது இந்த MD தான்.
புகார் கொடுக்க முயல்பவர்கள் பலரை புகார் கொடுக்க விடாமல் பல வகைகளில் தடுப்பதும் இந்த MD தான். இனிமேல் ஏஜென்சி தொழில் செய்து அதில் சம்பாதித்து புகார் கொடுக்காத பல லட்சம் பேர்களுக்கு விரைவில் செட்டில்மென்ட் செய்து கொடுத்து விடுவோம் என ஆசை வார்த்தைகள் கூறி மேலும் மோசம் செய்து கொண்டிருப்பதும் இந்த MD தான். பினாமிகள் பெயர்களில் சொத்துக்களை சேகரித்து வைத்து அந்த கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்கு போராடிக் கொண்டிருப்பதும் இந்த MD தான். வெளி வேசம் போடுகிறவர்களிடம் நியாய தர்மம் எதிர்பார்க்க இயலாது.
தீவிரமான உண்மையான சட்ட போராட்டங்கள் மூலமாகத்தான் நல்ல தீர்வு கிடைக்குமே தவிர கயவர்களை நம்பி செயல்படுவது கால தாமதத்தை ஏற்படுத்தி விடும்.” என்கிறார், சிவகாசி ராமமூர்த்தி.
– அங்குசம் புலனாய்வுக் குழு.
திரு.ராமமூர்த்தி அவர்கள் உடன்பிறந்த சகோதரர் சீனிவாசன் தான் இந்த நிறுவனந்தின் கணக்கு புலி..
அவர்தான் சீட்டு கம்பெனியின் ஆணிவேர்.. ஸ்ரீனிவாசனுக்குதான் தெரியும் இந்த கம்பெனியில் சீட்டு நடத்தி எவ்வளவு பண்ணினான்ற்கள் என்று..
A மற்றும் B என்று இரண்டு விதமாக நடத்தினார் சீனிவாசன்..
எல்லாரும் கட்டிய சீட்டு பணம் எங்கே போனது..
இது அவர் அண்ணன் ராமமூர்த்திக்கு நல்லாவே தெரியும்… இந்த கம்பெனியின் முக்கியமான அங்கமே சீட்டு தான்.. சீனிவாசன் குடும்பமே சிட்டு கம்பெனியில் முக்கிய அங்கம் வகிதார்கள்..
சீட்டு கட்டியவர்களின் வீட்டு பத்திரம், செக் என பல ஆவணங்களை சீனிவாசன் குடும்தினார்கள் வைத்துள்ளார்கள்..
இன்னும் நிறைய உள்ளது..
சீட்டு கம்பெனி பணம் எங்கே போனது…