நியோமேக்ஸ் – பணமோசடி புகாரில் சிக்கிய திமுக பிரமுகர்”
நியோமேக்ஸ் -பணமோசடி புகாரில் சிக்கிய திமுக பிரமுகர்”
ஆறு இலட்சம் முதலீடு செய்தால் மாதா மாதம் ரூ12,000 வட்டி தருகிறோம். நான்காண்டு முடிவில் முதலீடு செய்த பணத்தை அப்படியே திரும்ப கொடுத்து விடுகிறோம்.” என்று சொல்லி நாற்பதுக்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்துவிட்டு சொன்னபடி பணத்தை திருப்பித்தராமல் நாமம் சாத்திவிட்டார்கள் என்று தேனி எஸ்.பி. ஆபிசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
புது டிசைனா இருந்தாலும், புகாரில் நியோமேக்ஸ் வாடை வீசுகிறதே என்று தோண்டினோம். தேனி மாவட்டம் கம்பம் நகரில் கடந்த 2020 முதலாக இயங்கிவரும் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற கடையின் உரிமையாளர் தேன்மலர் என்கிற சுனோதா மற்றும் அவரது கணவர் செல்வகுமார் ஆகியோர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுனோதா கம்பம் நகர திமுகவை சேர்ந்த துணை சேர்மனாக இருக்கிறார். அவரது கணவர் செல்வகுமார் திமுகவின் கம்பம் நகர தெற்கு செயலளராக இருந்துவருகிறார்.
மிக முக்கியமாக, கடந்த ஓராண்டுக்கு முன்புவரையில், செல்வக்குமார் நியோமேக்ஸ் நிறுவனத்தில் தேனி -கம்பம் பகுதியின் RH ”ரீஜினல் ஹெட்” ஆகவும் அந்நிறுவனத்தின் 22 இயக்குநர்களுள் ஒருவராகவும் இருந்து வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி உறுதியானது. நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் சூர்யா ரெடிமேட்ஸ், சூர்யா பேஷன் வேர்ல்டு, சூர்யா சூப்பர் மார்க்கெட் எல்லாமே. நியோமேக்ஸின் நிறுவனம் என்று சொல்லிதான் எங்களிடம் பணம் வசூலித்தார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். இப்புகாரையடுத்து தலைமறைவாகிவிட்ட செல்வகுமார் மற்றும் அவரது மனைவி சுனோதா ஆகியோரை அங்குசம் சார்பில் விளக்கம் அறிய தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை அவர்கள் இருவரும் ஏற்று பதிலளிக்கவில்லை.
Neo max மோசடி இல்லை… மோசடியாக உருவாக்கப்பட்டது… 15 ஆண்டு சரியாக செயல்பட்ட நிறுவனம் தற்போது எப்படி மோசடி நிறுவனமானது…