லைக்காவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?
லைக்காவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?
“இம்சை அரசன்“ இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து வைகைப்புயல் வடிவே லுவால் ரொம்பவே இம்சைக்குள்ளானார் படத்தைக் தயாரிக்க ஆரம்பித்த டைரக்டர் ஷங்கர். (அந்த எஃபெக்ட் அஞ்சு வருசமா ‘இந்தியன்-2’வை எடுத்து… எடுத்து… லைக்கா சுபாஸ்கரனுக்கு இம்சைய கொடுக்கிறார் போல்) “இம்சையால் எனக்கு சில கோடிகள் நஷ்டம். அதை புயல் கிட்டயிருந்து வாங்கிக் கொடுங்க’ என தயாரிப்புக் கவுன்சிலில் பஞ்சாயத்தைக் கூட்டினார் ஷங்கர். பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் புயல் மசியாததால் ‘ரெட் கார்ட்’ போட்டது கவுன்சில் அந்த நேரத்தில் புயலுக்கு ‘கை கொடுத்து உதவினார்’லைக்கா’ சுபாஸ்கரன். அதற்கு உபகாரமாக லைக்கா தயாரிக்கும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் புயல். அதில் ஒன்று தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்.
ஆனால் படமோ படு தோல்வி. இப்போது சந்திரமுகி- 2′ வில் நடித்து விட்டார் புயல். இப்ப என்ன கதைன்னா, கந்துவட்டி கபாசூரன் மதுரை அன்புவிடம் விஷால் வாங்கிய 30 கோடி ரூபாய் கடனை லைக்கா பொறுப்பேற்றுக் கொண்டதாம். அதற்கு உபகாரமாக விஷால் நடிக்கும் படங்கள் அனைத்தின் ரிலீஸ் ரைட்சையும் லைக்காவுக்கு விஷால் கொடுத்துவிட வேண்டுமாம். ஆனால் உபகாரம் செய்தவருக்கே டிமிக்கி கொடுத்ததால் கோர்ட்டுக்குப் போனது லைக்கா. 15 கோடி ரூபாயை கோர்ட்டில் விஷால் டெபாசிட் செய்வதுடன், அவரின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
ஆனால் விஷாலோ, கோர்ட் ஆர்டரையே அலட்சியப் படுத்தியதால் இந்த 15ஆம் தேதி ரிலீசாக வேண்டிய, வினோத்குமார் தயாரிப்பில் விஷால் நடித்திருக்கும் “மார்க் ஆண்டனி” ரிலீசுக்கு ஸ்டே வாங்கியுள்ளது லைக்கா. இது 12- ஆம் தேதி வரை இருந்த நிலவரம். மேட்டர் இதான். ”மதுரை புறநகர்ப்பகுதியில் பண்ணை வீடு, கொடைக்கானலில் சில ஏக்கரில் ரிசார்ட், சென்னையில் பல கோடிகள் பெறுமானமுள்ள வீடுகள். இதெல்லாமே வைகைப் புயலுக்குச் சொந்தமானவை. அப்படிப்பட்ட கோடீஸ்வரன் கடனை சுபாஸ்கரன் ஏன் ஏத்துக்கணும்? இப்ப விஷால் கடனை ஏத்துக்கிட்டு கோர்ட்டுக்கு அலைகிறது லைக்கா. இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? லண்டனில் இருக்கும் சுபாஸ்கரனை, இங்கிருந்து யாரோ தவறாக கைடு பண்ணுகிறார்களோனு தோனுது.
சமீபத்துல வரிசையா வந்த விஷால் படங்கள் ஊத்திருச்சு. இதுல அவரு படத்தை ரைட்ஸ் வாங்குனா என்ன? ஸ்டே வாங்குனா என்ன? புயலுக்கும் விஷாலுக்கும். ஏத்துக்கிட்ட கடன் தொகையை 300 சினிமா தொழிலாளிகள் குடும்பத்துக்கு ரொக்கமா கொடுத்திருந்தா நிம்மதியா இருந்திருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் சுபாஸ்கரனுக்கு நன்றி விசு வாசத்துடன் இருந்திருப்பார்கள். இதுக்கு மேல் சொல்றதுக் ஒண்ணுமில்ல” டிரெண்டிங்… டிரெண்டிங். டிரெண்டிங்.
-மதுரை மாறன்