நியோமேக்ஸ் – பாதிக்கப்பட்டவர்கள் வழியே கசியும் உண்மைகள் (தொடர் – 1)
நியோமேக்ஸ்
தேனி – போடிநாயக்கனூர் வட்டார நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பாபு ராமநாதன் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த பகுதியில் மிகவும் விரிவாக குறிப்பாக ஏலக்காய் தோட்ட வியாபாரிகளை குறிவைத்து பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK
நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக, Astonis என்ற பெயரில் அட்ரசே இல்லாத நிறுவனத்தையும் தொடங்கி வேட்டையை நடத்தியிருக்கிறார்கள்.
போடி மெட்டில் உள்ள ஏலக்காய் தோட்டம் ஒன்றில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரது அண்ணன் ஜூபிடர் செல்வனை விசாரித்தால் அவரைப்பற்றிய அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited
2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க
தேனி – போடிநாயக்கனூர் வட்டாரத்தில் தனி சாம்ராஜ்யத்தையே பாபு ராமநாதன் நடத்தியிருப்பதாக சொல்கிறார்கள். நியோமேக்ஸ் பெயரை சொல்லி வசூலித்த பணத்தை முழுமையாக மேலிடத்திற்கு கொடுக்காமல், அதில் ஒரு பகுதியை மறைத்து அவரது அண்ணன் ஜூபிடர் செல்வனை வைத்து தனி டிராக் ஒன்றை ஓட்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சமீபத்தில் சரண்டர் ஆன, கம்பம் செல்வகுமாருடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபட்டதோடு, சூர்யா என்ற பெயரில் தொடங்கப்பட்ட துணிக்கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போன்றவற்றிலும் கணிசமான முதலீடுகளை செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
நியோமேக்ஸ் பெயரை சொல்லி சம்பாதித்த பணத்தில், மனைவி மகேஸ்வரி, அண்ணன் ஜூபிடர் செல்வன், மற்றும் மனைவியின் சகோதரர்கள் பெயரில் பினாமியாக நிறைய சொத்துக்களை குவித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
போடியில் மாமனார் பெயரில் 1.5 கோடிக்கு புதிய வீடு; போடி கிரீன் ராயல் ரெசார்ட்டில் -ல் மனைவி பெயரில் 20 சென்ட் பிளாட் ; சூர்யா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் 3 இலட்சம் பங்கு; சூர்யா ஹோட்டலில் 10 இலட்சம் பங்கு; சூர்யா துணிக் கடையில் 6 இலட்சம் பங்கு; மனைவி மகேஸ்வரி பெயரில் 20 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் ஏலக்காய் தோட்டம்; கம்பத்தில் 30 கோடி மதிப்பில் நியோமேக்ஸுக்கு சொந்தமான அப்பாச்சி பண்ணை இடம் மற்றும் சூர்யா டிரான்ஸ்போர்ட் இடம் பாபு ராமநாதன் பெயரில்; போடியில் இரண்டு ரிசார்ட்ஸ்; குற்றாலத்தில் ஒரு ரிசார்ட்ஸ்; போடி மெட்டு அடிவாரத்தில் மகன் பெயரில் 20 ஏக்கரில் தென்னந்தோப்பு; போடி சுற்றுவட்டாரத்தில் 20 ஏக்கர் மாந்தோப்பு .. என பினாமி பெயரில் உள்ள சொத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
– அங்குசம் செய்தி பிரிவு.
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending