நியோமேக்ஸ் நிர்வாகிகள் அனைத்து முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிம் கோடி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமின் கோரிய வழக்கு

நியோ மேக்ஸ் இயக்குனர் பாஜக பிரமுகர் வீர சக்தி உள்ளிட்ட அனைவரது முன்ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருந்து அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பாக பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது வெளிநாடுகளில் நிறுவனம் முதலீடு செய்யப்பட்டுள்ளது காவலில் எடுத்து விசாரணை செய்தால் மட்டுமே முதலீடு செய்த மக்களின் பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு உள்ளது என அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி இளங்கோவன் உத்தரவு வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு மதுரையை தலைமையகமாக கொண்டு ‘நியோமேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக பாஜக பிரமுகர் வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர்.

தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டுல் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி ரூ.10 லட்சம் மூலம் பல கோடிக்கு முதலீடுகளை பலர் செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நியோமேக்ஸ் ப்ராபரிட்டிஸ் இயக்குனர்களான பாலசுப்ரமணியன், பழனிசாமி, அசோக் மேத்தா, சார்லஸ் கிளோமேக்ஸ் , தியாகராஜன் கமலகண்ணன் நாராயணசாமி மணிவண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மனு செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி இந்த வழக்கில் குறிப்பாக பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது வெளிநாடுகளில் இந்த நிறுவனம் முதலீடு செய்யப்பட்டுள்ளது அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது காவலில் எடுத்து விசாரணை செய்தால் மட்டுமே முதலீடு செய்த மக்களின் பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு உள்ளது என அரசு தரப்பில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளதால் அனைவரின் முன் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார் இயக்குநர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே பணத்தை மீட்க வாய்ப்புள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– ஷாகுல்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.