கர்நாடகா மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

கர்நாடகா மீது பொருளாதார தடை
விதிக்கக் கோரி
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

4

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் மணிமொழியான், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹ{மாயூன் கபீர், மணி செந்தில், தமிழ்த் தேசிய பேரியக்கம் மாவட்டச் செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழக கார்த்திகேயன், ஆழ்துளைக் கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹவில்தரை நீக்கிவிட்டு நடுநிலையுள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும். குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்களைக் காக்க உடனடியாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

5
Leave A Reply

Your email address will not be published.