நியோமேக்ஸ் : மூன்று மாத குழப்பத்திற்கு விடை சொன்ன நீதிமன்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இனிய ரமலான் வாழ்த்துகள்

மூன்று மாதமாக நிலவி வந்த பல்வேறு வகையிலான குழப்பங்களுக்கு விடையளிக்கும் விதமாக, நியோமேக்ஸ் வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு கடந்த அக்-19 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நியோமேக்ஸ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மீண்டும் புகார் அளிப்பத்தற்கு அவகாசம் வழங்கியும், அதனடிப்படையில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

அவர் வழங்கியிருந்த அவகாசத்தின் அடிப்படையில், டிச-18 அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்பதாக அறிவித்திருந்த நிலையில், மேற்படி வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்த சமயத்தில், அதுவரை வழக்கை விசாரித்து வந்த நீதியரசர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கமான மாறுதலில் சென்றிருந்தார். அவருக்குப்பதிலாக, நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், நீதியரசர் பரதசக்ரவர்த்தி பல்வேறு அம்சங்களில் விரிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். மீண்டும், இந்த வழக்கை அவரே விசாரிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்பதாக தீர்ப்பளித்திருந்தார். தலைமை நீதிபதிக்கும் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில்தான், தலைமை நீதிபதியின் பரிந்துரை என்ற கட்டத்திலேயே, இந்த வழக்கானது சுமார் மூன்று மாத காலமாக கிடப்பில் கிடந்தது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்த பின்புலத்திலிருந்துதான், மேற்படி வழக்கானது மீண்டும் நீதியரசர் முன்பாகவே விசாரணை தொடரும் என்பதாக தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கியதையடுத்து, மார்ச்-25 அன்று நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக வழக்கு பட்டியலிடப்பட்டது. மார்ச்-24 ஆம் தேதி இரவு 8 மணி வாக்கில்தான், இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களுக்கே இது குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக, கிளம்பி சென்னைக்கு செல்ல முடியாத சூழலை எதிர்கொண்டார்கள்.

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

தலைமை நீதிபதியின் உத்தரவையடுத்து, நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக நீதிமன்ற எண் 33 இல், விசாரணைக்கு வந்தது. பிரதான வழக்கான டி.ஜெயின்குமார் (15498/2024 ) தொடங்கி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம், ராமநாதபுரம் மாவட்டம் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம், இடையீட்டு மனுதாரர்களான ராமமூர்த்தி மற்றும் எஸ்.நடராஜன் உள்ளிட்டு 21 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இதில் பல்வேறு வழக்குகளில், ஒரே வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் இடையீட்டு மனுதாரர்களாக இணைந்திருந்தார்கள்.

முதல்நாள் இரவு அறிவிப்பு வெளியாக அடுத்தநாள் வழக்கு விசாரணைக்கு வந்திருப்பதை சில வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினார்கள். வழக்கில் வாதங்களை முன்வைப்பதற்கு போதிய அவகாசம் வேண்டுமென கோரினார்கள். தனது முந்தைய விரிவான தீர்ப்பின் அடிப்படையில் என்ன, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க நியோமேக்ஸ் மற்றும் அரசு தரப்பிலும் அவகாசம் கோரியிருந்தார்கள். டிசம்பரிலேயே இறுதி அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டிய வழக்கில், இன்னும் ஏன் அவகாசம் கேட்கிறீர்கள்? என்பதாக கேள்வி எழுப்பினார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி. நிறைவாக, ஏப்ரல்-02 ஆம் தேதியன்று மீண்டும் வழக்கை விசாரிப்பதாக, தேதி குறிப்பிட்டு ஒத்தி வைத்திருக்கிறார், நீதியரசர்.

மேலும், பிணை ரத்து தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றும்; ஒரே தரப்பினர் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், அவற்றுள் ஒரு பகுதிதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது, அதிலும் சில வழக்குகள் விடுபட்டிருக்கிறது என்பதையும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர். தொழில்நுட்பக்குறைபாடு என்பதாக நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து, அத்தகைய வழக்குகளையும் இந்த பட்டியலில் சேர்க்குமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

அடுத்து, சென்னையில் இருந்தபடியே இந்த வழக்கை நீதியரசர் பரதசக்ரவர்த்தி விசாரிக்க இருக்கிறார் என்பதால், மதுரையில் இருந்தபடியே வழக்கறிஞர்களும் வழக்கை தொடுத்தவர்களும் வழக்கை பின்தொடர ஏதுவாக, தனி நீதிமன்ற அறை ஒதுக்கீடு செய்யப்படும் என்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

”பெயிலை கேன்சல் செய்வதற்கு ஒரு நிமிடம் ஆகிவிடாது. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்துதான் கவனம் செலுத்த விரும்புகிறேன்.” என்பதாக, இந்த வழக்கில் தனது நிலைப்பாட்டை பதிவு செய்திருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.

தற்போது, நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக விசாரணையில் இருந்துவரும் இதே வழக்கில்தான், நீதியரசர் தண்டபாணி அவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்பதாக விரிவான உத்தரவை பிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரும், ”நியோமேக்ஸ் கம்பெனி காரர்களை ஜெயிலில் பிடித்துப் போட்டுவிட்டால், நிவாரணம் கிடைத்துவிடுமா?” என்பதாகவும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மிக முக்கியமாக, நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணத்தை வழங்க வேண்டுமென்ற நோக்கில், இந்த வழக்கை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற வாத – பிரதிவாதங்கள், பாதிக்கப்பட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு ஆறுதலை வழங்கியிருக்கிறது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

புகார் கொடுப்பதற்கான அவகாசம் வழங்கியதில் இருந்த சிக்கல் மற்றும் சிலரது புகாரை ஏற்காமல் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் திருப்பியனுப்பிய விவகாரம் குறித்தும் வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியிடம் சுட்டிக்காட்ட, அவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி பதிலளித்திருப்பதும், முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

 

—      அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.