என்ன செய்தால், நியோமேக்ஸ் வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் ? அங்குசம் அலசல் !
NEOMAX | நியோமேக்ஸ் | நீதிமன்றம் வைத்த செக் ♟ வேகமெடுக்கும் வழக்கு !
நியோமேக்ஸ் மோசடி வழக்கில், கோடை விடுமுறையை பயன்படுத்தி நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களின் மதிப்பை நிர்ணயம் செய்துவிட வேண்டுமென்ற நோக்கில், மதிப்பீட்டுக்குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்திருந்தது. பல்வேறு காரணங்களால், நிலங்களை மதிப்பீடு செய்யும் பணி தொய்வடைந்தது. இதில் முக்கியமான காரணம், நியோமேக்ஸ் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பை வழங்காததுதான்.
வழக்கின் ஆரம்பகாலம் முதலாகவே, தங்களிடம் 5 கோடி சதுர அடி நிலங்கள் தயார் நிலையில் இருப்பதாக சொல்லி வந்தவர்கள், அந்த நிலங்கள் எந்த மாவட்டத்தில், எந்த வருவாய் கிராமத்தில், எந்த சர்வே எண்ணில் அமைந்திருக்கிறது? அது வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டவையா, இல்லையா? டிடிசிபி, ரெரா அனுமதி பெற்றவையா? என்பது போன்ற விவரங்களை தரமறுத்தது. இந்த பின்னணியிலிருந்துதான், நியோமேக்ஸ் நிறுவனம் நிலம் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் கட்டாயம் சமர்ப்பித்தாக வேண்டுமென்று அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இனி, நீதிமன்றத்திடமிருந்து நியோமேக்ஸ் நிறுவனம் சாக்கு போக்கு சொல்லி, தப்பிக்க வாய்ப்பில்லாத வகையில் பல்வேறு அதிரடிகளை காட்டியிருக்கிறார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி. இதன் பின்னணியை அலசுகிறது, இந்த வீடியோ.
முழுமையான வீடியோவை காண
NEOMAX | நியோமேக்ஸ் | இதுதான் பிரச்சினை… தேவை தனி கவனம் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. முதல்கட்டமாக, நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டியின் செயல்பாடுகளில் எழுந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு, அக்கமிட்டியை மறுசீரமைப்பு செய்து அதற்கும் சில அவகாசம் வழங்கியிருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
இந்நிலையில், நியோமேக்ஸ் விவகாரம் வழக்கானது தொடங்கி, தற்போது நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக விசாரணையை எதிர்கொண்டு வரும் வரையிலான கால கட்டத்தில் இந்த வழக்கு எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து பேசுகிறது, இந்த காணொளி.
மிக முக்கியமாக, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழக்கமாக விசாரிக்கும் மோசடி வழக்குகளை போல, நியோமேக்ஸ் போன்ற வழக்குகளை கையாண்டு விட முடியாது. இது ஏன் தனிக்கவனம் கொடுத்து விசாரிக்கப்பட வேண்டியிருக்கிறது, என்பதன் பின்னணி குறித்து அலசுகிறது, இந்த வீடியோ.
முழுமையான வீடியோவை காண
NEOMAX | நியோமேக்ஸ் | இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?
நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக, நடைபெற்று வரும் நியோமேக்ஸ் வழக்கு விசாரணையில், சில புகார்தாரர்களின் பெயர்களை இந்த தீர்வுத்திட்ட பட்டியலுடனே சேர்க்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது, காட்டமாகவே பதிலளித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, அவர்கள் வீட்டிலேயே அமர்ந்துகொண்டால் அவர்களது பிரச்சினை என்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சமயத்திலேயே, தமிழ் மற்றும் ஆங்கில தினசரியில் விளம்பரம் அறிவித்து புகாரை பெற வேண்டுமென்று சொல்லியிருந்தேன். அப்போதே புகார் கொடுத்திருக்கலாமே? என்றெல்லாம் கருத்து தெரிவித்தவர். இதுவரை புகார் கொடுக்காதவர்கள் இனி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என்பதாகவும்; அவ்வாறு புகார் அளிப்பவர்களின் பட்டியலை தனிப்பட்டியலாக தயாரித்து கொள்ள வேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பின்னணியில், ஏன் இதுவரை பலரும் புகாருக்கே செல்லாமல் இருக்கிறார்கள்? ஐ.டி. குறித்த அச்சம். இ.டி. வந்துவிடுமோ என்ற பயம். பெரும்பாலும் ரத்த சொந்தங்களின் வழியாகவே முதலீடு செய்திருப்பதால், அவர்களுக்கு எதிராக புகார் கொடுக்கலாமா? என்ற மனநிலை. நிறுவனத்தின் பேச்சை நம்பி காத்திருப்பது. புகார் கொடுத்துவிட்டால், நிறுவனம் பொறுப்பு ஏற்காது, கைவிட்டுவிடும் என்ற அச்சம். என பல்வேறு காரணங்கள் பின்னணியில் இருக்கின்றன.
அடுத்தடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் பிசகாத அளவுக்கு நீதிமன்றம் செக் வைத்து வரும் நிலையில், மிக முக்கியமாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்கள் ஒவ்வொன்றாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இனியும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி புகார் கொடுக்காமல் இருப்பது சாதகமா? பாதகமா? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் மெல்ல எழத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், புகார் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதான பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் குழப்பங்கள் – அதன் பின்னணி குறித்து அலசுகிறது, இந்த வீடியோ !
முழுமையான வீடியோவை காண
NEOMAX | நியோமேக்ஸ் | தனி டி.ஆர்.ஓ, தனி விசாரணை அதிகாரி ஏன் அவசியம் ?
நியோமேக்ஸ் மோசடி வழக்கு நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் தனிச்சிறப்பான அணுகுமுறை காரணமாக, வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. நீதியரசரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப, வழக்கின் போக்கும் நகரத் தொடங்கினால்தான் தீர்வு கிடைக்கும். ஆனால், நடைமுறை யதார்த்தமோ, பல்வேறு முட்டுக்கட்டைகளை கொண்டதாக அமைந்திருக்கிறது.
நியோமேக்ஸ் வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த டி.எஸ்.பி. மனிஷா மாற்றப்பட்டதையடுத்து, அதனிடத்தில் திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. இம்மானுவேல் ராஜ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தையும் அவர்தான் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். சிறப்பு விசாரணை அதிகாரியின் கீழ் இருந்த வழக்கு தற்போது, கூடுதல் பொறுப்பாக பக்கத்து மாவட்டத்துக் டி.எஸ்.பி.க்கு வழங்கப்பட்டிருப்பது இந்த வழக்கின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அடுத்து, வழக்கமான டி.ஆர்.ஓ. க்களால், இதுபோன்ற தனிச்சிறப்பான வழக்குகளையும் சேர்ந்து பார்ப்பது என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதாக அமைந்திருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த பணிநிலையில் செயலாற்றிவரும் டி.ஆர்.ஓ.க்கள் வழக்கமாகவே கூடுதல் பணிச்சுமைகளோடுதான் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், நியோமேக்ஸ் போன்ற விவகாரங்களையும் கவனிக்க வேண்டும் என்பது, அவர்களின் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட விவகாரமாகவே நீடிக்கிறது.
இந்த பின்னணியிலிருந்தே, இந்த வழக்கில் தனி டி.ஆர்.ஓ. மற்றும் தனி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட வேண்டியது ஏன் அவசியமாகிறது, என்பதை அலசுகிறது, இந்த வீடியோ.
முழுமையான வீடியோவை காண :
NEOMAX | நியோமேக்ஸ் | எல்லா வழக்குகளும் ஒரே நீதிபதியிடம்… தயவு காட்டுவாரா தலைமை நீதிபதி ?
நியோமேக்ஸ் மோசடி வழக்கில், குற்றஞ்சாட்டுக்கு ஆளாகி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று பின்னர் நிபந்தனை பிணையில் வெளியில் வந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களின் பிணையை ரத்து செய்ய வேண்டுமென்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதுதான் நீதியரசர் பரதசக்ரவர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக, அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தும் வருகிறார்.
நீதிமன்றத்தில் அவர்கள் வழங்கியிருந்த வாக்குறுதியை மீறிவிட்டார்கள். வழக்கின் போக்கை சிதைக்கிறார்கள். ஆகவே, அவர்களை சிறையில் மீண்டும் அடைக்க உத்தரவிடுகிறேன். என்பதாக இந்த வழக்கை ஒற்றை பாராவில் அவரால் முடித்து வைத்திருக்க முடியும். ஆனாலும், பாதிக்கப்பட்டவர்கள் வலியையும் வேதனையையும் உணர்ந்தவராக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை சட்டத்தின் துணை கொண்டு செய்து கொடுக்க வேண்டுமென்ற நோக்கில் இந்த வழக்கை சட்ட நுணுக்கத்தோடு கையாண்டு வருகிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி. அவரது தீர்ப்புகளை, அவரது அணுகுமுறைகளை நியோமேக்ஸ் நிறுவனமே மறுக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது என்பதுதான் இதில் குறிப்பிட தகுந்த விசயம்.
இந்நிலையில்தான், நியோமேக்ஸ் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிபதிகளின் முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. குறிப்பாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை அட்டாச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒவ்வொன்றிலும் நீதிமன்றம் குறிப்பிட்ட அவகாசம் வழங்கி அதற்குள் அந்த விவகாரத்தை முடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வருகிறது.
இந்த பின்னணியிலிருந்துதான், நியோமேக்ஸ் வழக்கை ஒரே நேர்கோட்டுப் பாதையில் முன்னோக்கி நகர்த்தி செல்ல ஏதுவாக, இந்த வழக்கில் முட்டுக்கட்டைகள், குழப்பங்கள், இழுபறிகள் இன்றி சீரான வேகத்தில் கொண்டு செல்ல வேண்டுமென்றால், நியோமேக்ஸ் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் நீதியரசர் பரதசக்வர்த்தி அல்லது ஒரே நீதிபதியிடம் விசாரணைக்கு வருவதுதான் பொருத்தமாக இருக்கும் . இது ஏன் அவசியமானது என்பது குறித்து அலசுகிறது, இந்த வீடியோ.