நியோமேக்ஸ் மோசடி – வாயில் சுடும் புதிய வடை !
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் அங்குசம் இதழ் வழியே முதன்முதலாக நியோமேக்ஸ் மோசடி விவகாரம், வெளிச்சத்துக்கு வந்தது. ஏறத்தாழ ஓராண்டை நெருங்கிவிட்ட நிலையிலும் தற்போது வரையில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 வழக்குகளாவது மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் பதிவாகி வருகிறது. ஏப்-23 ஆம் தேதி நிலவரப்படி 1666 வழக்குகள் பதிவாகியிருக்கிறது.
மற்றொருபுறம், கைது நடவடிக்கைகளும் ஓய்ந்தபாடில்லை. கடைசியாக கடந்த ஏப்ரல் 25 அன்று நியோமேக்ஸ் துணை நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்களான சார்லஸ், இளையராஜா, ராஜ்குமார், சஞ்சீவ்குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் அதிகமான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, இதுவரை 30-க்கும் அதிகாமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடக்கத்தில் கைதானவர்கள் தற்போது, முன்ஜாமின் பெற்று வெளியிலும் வந்துவிட்டனர்.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் தரப்பிலும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலும் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள்; அட்வகேட் கமிஷனார்களை நியமித்து டான்பிட் நீதிமன்ற உத்தரவு; நீதிமன்ற கமிஷனார்களின் அறிக்கை தாக்கல்; அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு; ஒவ்வொரு வழக்கிலும் பல்வேறு இடையீட்டு மனுக்கள் என அலற்சியை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்த வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறது, நியோமேக்ஸ் விவகாரம்.
ஜாமீன் பெற்று வெளியில் சுதந்திரமாக உலவும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள், நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பினாமி பெயரில் உள்ள இடங்களையெல்லாம் விற்று 300 கோடி ரூபாய் அளவுக்கு காசாக்கிவிட்டார்கள் என்றும்; சொத்துக்களை விற்றது ஏற்கெனவே பினாமி பெயரில் பதுக்கி வைத்ததையெல்லாம் மீண்டும் முதலீடாக்கி, பினாமி பெயரில் புதிய பிசினசையே தொடங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
சிக்மா ப்ராஜெக்ட்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிகழ்வில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களான பாலசுப்ரமணியன், வீரசக்தி, கமலக்கண்ணன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பலரும் அவ்விழாவில் பங்கேற்று உரையாற்றியதாகவும் சொல்கிறார்கள். சிக்மா ப்ராஜெக்ட்ஸே நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனம்தான் என்றும் சொல்கிறார்கள்.
நல்ல நேரம் நெருங்கிவிட்டது; விரைவில் அனைவரது பிரச்சினையும் தீரப்போகிறது; வயதான மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணம் செட்டில் செய்யப் போகிறோம்; முதலில் கட்டிய பணத்தை கொடுத்துவிடுவோம்; மூன்றாண்டு முடிவில், பெனிபிட் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதாக திண்ணைப்பிரச்சாரம் பாணியில் அடுத்தடுத்து ஆடியோக்களை சுற்றுக்கு விட்டிருக்கிறது, நியோமேக்ஸ் நிறுவனம்.
இதெல்லாம் வாயில் வடை சுடும் வேலை. நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பினாமி பெயரில் உள்ள இடங்களையெல்லாம் அடையாளம் கண்டு வருகிறோம். மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிறகு, நியோமேக்ஸ்க்கு சொந்தமான சொத்துக்களை விற்றிருப்பதற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகிறோம்.
இந்த விவகாரத்தில், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் கலந்தாலோசிக்கும் வகையில் விரைவில் மதுரையில் சங்கமிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில்.
– அங்குசம் புலனாய்வு குழு.
பணத்திற்கு விபச்சாரம் செய்யும் பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார ஊடகம் அங்குசம்