சுயமரியாதை உள்ளதால் அரசுப் பணியைத் துறந்தேன் – கல்வியாளர் DR.SSR

0

04 .05 .2018 ஆறு வருடங்கள் ஆயிற்று இன்றுடன் … நிறைவான பொழுதுகள் – மூத்த_கல்வியாளருடன்_ஒரு_சந்திப்பு – சுயமரியாதை உள்ளதால் அரசுப் பணியைத் துறந்தேன் என்கிறார் கல்வியாளர் DR SSR  அவர்கள் ..

வணக்கம் ப்பா நல்லா இருக்கிங்களா ?

https://businesstrichy.com/the-royal-mahal/

ம் … நல்லா இருக்கேன் , முதுமையிலும் தீர்க்கமான தெளிந்த சிந்தனை ,
DR SS R அவர்கள் அங்கே வந்த தனது துணைவியாரிடம் , இவர் உமாமகேஸ்வரி ஆசிரியர் , என்னைப் பார்க்க வந்திருக்கிறார் எனக் கூற ,

அப்படியா .. எந்த ஊரு மா ? என்கிறார் சீதாமா ….

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

நான் ஈரோடுங்கம்மா … பெருந்துறைப் பள்ளியில் டீச்சரா இருந்தேன் ….. ஆனா கடந்த 5 வருஷமா சென்னையில் தான் இருக்கேன் … இது நான்.

கோயம்புத்தூர் ஈரோடுன்னு நம்ம ஊர் மனுஷாளப் பார்த்தாவே எனக்கு ரொம்ப சந்தோஷம் மா , ஏதோ சொந்தக்காரங்கள பார்த்த மாதிரி …. இது சீதாம்மா .

எனக்கும் உங்களயெல்லாம் பார்ப்பது ரொம்பப் பிடிச்சிருக்குங்கமா …. இது நான் … அப்படியே சீதாம்மா நகர்ந்து அவர்களது வேலையில் ஈடுபட ,

நான் …SSR அவர்களிடம் திரும்ப , சாய்வு நாற்காலியில் தன்னை இருத்தி , பழைய நினைவுகளை அசை போடுகிறார் .

” நானும் பெருந்துறையில் 6 வருஷம் வேல செய்தேன். நான் ஆசிரியராக இருந்தப்போ ஆண் , பெண் இரண்டு பேருமே படிப்பாங்க , பொண்ணுங்க 12 கிலோ மீட்டர் நடந்தே வந்து படிப்பாங்க , சிலேட்டர் புரம் தாண்டி ரொம்ப தொலவில இருந்து வருவாங்க ,அப்போ ஆண் – பெண் எல்லோருக்குமே மதிய உணவு வெறும் கிணத்துத் தண்ணிதான் ” என்று கூறி நம்மைப் பதைபதைக்க வைக்கிறார் SSR .

நீங்க எந்தெந்த ஊரில் வேலை செய்தீங்கப்பா ? இது நான் ..

நான் பெருந்துறை , பல்லடம் , பவானி , அவினாசி இங்கல்லாம் 1966 வரைக்கும் வேலை செய்தேன். 16 வருஷங்கள் தான் அரசுப் பணி அப்புறம் தனியார் பள்ளிக்குப் போய்ட்டேன் … ஏன் ? எனக் கேட்ட எனக்கு ….

கல்வித்துறையில் மரியாதை இல்லைங்க , ஆரம்ப காலத்துல மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்தன பள்ளிகள் , பிறகு கல்வித்துறை தனியாக இயக்குநர் கீழ் உயர்நிலைப் பள்ளிகளும் , தொடக்கக் கல்வித் துறை ஊராட்சி அமைப்பிலும் பஞ்சாயத்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான் தலைமை ஆசிரியராக இருந்தேன். மாவட்ட கல்வி அதிகாரி இப்போ CEO மாதிரி DIE (Divisional Inspector of Education ) ஒரு முறை மரியாதை இல்லாமல் நடத்தினார். நான் எனது பள்ளி ஆசிரியர்களை யாரும் அவமானப்படுத்த விட மாட்டேன். எது வந்தாலும் எனது பள்ளி சார்ந்து நான் தான் பொறுப்பு … அப்படியிருக்க ,

ஒரு முறை கல்வி அதிகாரியை சந்திக்கச் சென்ற பொழுது நாற்காலியில் என்னை உட்காரச் சொல்லவில்லை , நான் அதற்குக் காத்திராமல் உட்கார்ந்து விட்டேன். நான் உன்னை உட்காரச் சொல்லவில்லை என அவர் கூற , நீங்க உட்காரச் சொல்லாம இருப்பது உங்க பண்பாடு , ஆனால் அது எனது உரிமை எனக் கூறி அமர்ந்தேன். அவரால் ஒன்றும் பேச இயலவில்லை.

ஒருமையில் நீ , வா , போ என ஆசிரியர்களை அழைப்பதும் , இப்படி இருந்த சூழலில் …. மரியாதை இல்லாத இடத்தில் இனி நாம் வேல செய்யக் கூடாது என எண்ணி எனது அரசுப் பணியைத் துறந்து வெளியேறினேன் என்கிறார் இந்த சுயமரியாதைப் பெரியவர். எவ்வளவு உறுதி பாருங்களேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஊர்ப் பணிகளைச் செய்வோம்
**********

அப்போதெல்லாம் 7 ஊர்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சேர்த்துக் கொண்டு சனி , ஞாயிறுகளில் ரோடு போடுவோம் , கட்டடம் கட்டித் தந்து இருக்கோம் பல பள்ளிகளுக்கு என்றவரிடம் …

தார் ரோடுங்களா என நான் புரியாமல் கேட்க ….

மண் ரோடு தானுங்க , அப்பவெல்லாம் ஏது தார் ரோடு ? மண் சாலையே இல்லாம மக்கள் கஷ்டப்பட்டு வாங்க , மம்முட்டி எடுத்துட்டு போய் மாணவர்கள வச்சு , வாராவாரம் ரோடு போடுவோம் , ஒரு முறை புதுப்பாளையம் ஊரில் ரோடு போட்டப் போ , அந்த வழியாப் போன Sub register officer உடைய ஜீப் மண் புழுதியப் பார்த்திட்டு ஏதோ கலவரம்னு நெனச்சுக்கிட்டு இறங்கிப் பார்க்க , பையன்களெல்லாம் மம்முட்டி வச்சு ரோடு போடறதப் பார்த்ததும் …. தானும் மம்முட்டிய வாங்கி மண்ணை வெட்டி வேல செய்துள்ளார்.

அப்படியே அவர் மம்முட்டிய கைல பிடிச்சுட்டு பாட்டு ஒன்னப் பாடிட்டே சாலையின் இந்தப் பக்கம் என்னை நோக்கி வர , பையன்கள் பின்னால் வர … ஒரே மகிழ்ச்சி , அப்புறம் ஊர் மக்கள் கிட்ட போய் , உங்களுக்காக சாலை போடறாங்க , அவங்களுக்கு சாப்பாடு ஏதாவது செய்து தரணும்ல … அப்படின்னு சொல்லி , 350 மாணவர்களுக்கும் ஊர் மக்களை உப்புமா செய்ய வைத்து மாணவர்களை சாப்பிட வச்சு அனுப்பினாங்கங்க , என்றார் சிரித்துக் கொண்டே பழைய அனுபவங்களை தன்னுள் அசை போட்டபடி …

ரோடு போட்டிங்க ….சரி , கட்டிடம் எப்படிக் கட்டிக் கொடுத்தீங்க ? செங்கல் , மண் , சிமெண்ட் இதெல்லாம் எப்படி ?அரசு ஏதும் கட்டிடம் கட்டித் தராதா ? என நான் எனது சந்தேகத்தை முன் வைக்க ,…

அரசு எங்கிங்க தந்துச்சு ? அது ஒன்னும் பண்ணல , நாங்க அந்த மக்களுக்கு அவங்க பயன்படுத்த ரோடு போட்டுத் தரோம்ல , அதனால் கட்டடம் கட்ட எல்லாப் பொருளும் ஜனங்களே தந்தாங்க , அவங்க பிள்ளைங்களுக்கு தானே …. ஆகவே தந்தாங்க , பல ஊர்கள்ல … பள்ளிக் கூடத்துல கட்டடம் கட்டி இருக்கோம்னு சொல்லி ,பெருமிதம் கொண்டார்.

(அரசு தரும் நிதியை வைத்தே, அதுவும் எல்லா வசதியும் உள்ள இந்தக் கால கட்டத்தில் கட்டடம் கட்டி முடிக்கப் போராடும் தலைமை ஆசிரியர்கள் உள்ள நிலையில் , மேலும் அப்படிக் கட்டடம் கட்டி முடித்து விட்டால் ( ஒரு பள்ளிக்கு ) கொண்டாடும் நாம் எங்கே ? இவர் எங்கே ? )

இப்படி எல்லாம் எல்லா சனி ஞாயிறும் வெளியில் போய் பள்ளிக்காக வேலை செய்தால் நீங்க சப்போர்ட் பண்ணுவீங்களாம்மா ? என சீதாம்மாவிடம் நான் கேட்க ,
சிரித்துக் கொண்டே சொல்கிறது அந்த வெள்ளந்தி முகம் … நான் எதுவுமே சொல்ல மறுப்பு சொல்ல மாட்டேன் … நல்லது தானே செய்தாங்க .. (இளைய தலைமுறையே கற்றுக் கொள்ளுங்கள் )

ஒரு தலைமையாசிரியராக எனக்கான அதிகாரம்
*****************
ஒரு முறை எனது பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாயிடுச்சு , ஆனா , வாத்தியாருங்க பத்தல, அந்த ஊரில் டிகிரி படிச்சுட்டு ஒருத்தர் விவசாயம் செய்வது எனக்குத் தெரியும். அவரக் கூப்பிட்டு , ஏம்ப்பா பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைங்களுக்கு சொல்லித் தர வாத்தியார் இல்ல , நீங்க வேலைக்கு வந்துடுங்க என்றேன். அதுக்கு அவரு , ஏனுங்கய்யா , பருத்தி போட்டு லட்ச ரூபா சம்பாதிக்கிறேன் , இது என்ன 100 ரூபா உத்யோகம் …அப்படீன்னார் .

நான் சொன்னேன் … இது சம்பளத்துக்காக இல்லீங்க , சமுதாயத்துக்காக வாங்க… அப்படின்னு சொன்னேனுங்க , அவரும் சரின்னுட்டார் , நானே அப்பாயின்ட்மென்ட் போட்டுட்டேனுங்க.

ஃபைல் எழுதி வச்சுட்டேன் , அதாவது பள்ளி திறந்து செயல்படும் நாளில் மாணவனுக்கு கல்வி தர ஆசிரியர் இல்லாத சூழல் என்பது மிகப் பெரிய பாவமும் குற்றமும் (sin & Crime) , ஆகவே தலைமை ஆசிரியராகிய நான் எனது பள்ளி மாணவருக்கு புதிய ஆசிரியரை நியமிக்கிறேன்னு எழுதிக் கையெழுத்து போட்டுட்டேனுங்க , ஆனா கலெக்டர் இதனால ரொம்ப கோபமாய்ட்டாருங்க , ஏன்னா அவரு தான பொறுப்பு , என்னைய ஒரு வார்த்தை கேட்காம செய்துட்டீங்களேன்னு கோபப்பட்டாரு , அதோடு இல்லாம , ஊரில் பயணியர் மாளிகைல வந்து தங்கிட்டு , காலைல 7.30 மணிக்கெல்லாம் கூப்பிட்டு அனுப்பிச்சுட்டாரு. அந்த ஹெட்மாஸ்ட்ர வரச் சொல்லுங்கன்னு …

நானும் போய்ட்டேனுங்க , உட்காரச் சொன்னார் .. உட்கார்ந்தேன். , ரொம்ப சத்தம் போட்டார் , என்னயக் கேட்காம எப்படி நீங்க வாத்யார நியமிக்கலாம் ? அதோட Sin & Crime னு வேற எழுதி வச்சுருக்கீங்க என்று கலெக்டர் கேட்க , நான் உங்களப் பத்தி எழுதலயே , கல்வித் துறைக்கு தானே எழுதினேன்னு தைரியமா சொன்னேனுங்க , அப்புறமும், நான் என்ன பண்றேன்னு பாருங்க , உங்கள வேற ஊருக்கு மாத்தப் போறேன்னார். சரி , அதனாலென்ன எங்க போட்டாலும் இது அரசுப் பணி , நான் போய் வேல செய்வேன்னு சொல்லிட்டு வந்துட்டேங்க , வெளில நான் நடந்து வரும் போது என்னைப் பார்த்தத் தோட்டக்காரர் , பெரியய்யா (கலெக்ட்டரை அப்படியே அழைக்கும் பழக்கம் அன்று இருந்தது )...

இந்த வாத்யாரு ஹெச் சம்மா நம்ம ஊருக்கு வந்த பிறகு தான் பிள்ளைங்க நல்லாப் படிக்கிறாங்க , ரொம்ப நல்லவருன்னு அவர் கிட்ட என்னப் பத்தி சொல்ல , அந்த சமயத்தில் ஊர் பிரஸிடென்ட் நம்ம ஊர் வாத்தியார் , நிறைய உதவி பண்றாருங்க எனவும் கூற , கலெக்டர் அப்புறம் புரிஞ்சுகிட்டு என்னய மாற்றம் எதுவும் செய்யலங்க … என்றார். (எவ்வளவு மரியாதை இருந்துள்ளது அந்நாட்களில் ….)

தொடரும்
உமா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.