புதிய மாவட்டச் செயலாளர் புதிய அனுபவம்…
புதிய மாவட்டச் செயலாளர் புதிய அனுபவம்…
இது எனக்கு மட்டுமல்ல திருச்சி மாவட்டம் மட்டுமல்ல தமிழக்கத்தில் உள்ள அனைத்து கழக உடன் பிறப்புகளுக்கும் ஒரு புதுமையைான அனுபவம்
வீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தார் , கழக பகுதி செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் குழுமி இருக்க ஏதோ சிந்தனையில் இருந்தார் , வந்தவர்களை கனிவுடன் பேசி அனுப்பினாரே தவிற சிந்தனையில் இருந்தார் என்பதை என்னால் உணர முடிந்தது.
திடீரென தன் கைபேசியை எடுத்து சில தகவல்களை சேகரித்தார் தனது உதவியாளர் மூலம் அப்போது காலை 9 மணி ,அன்று பகல் முழுவதும் ஏதோ சிந்தனை , விட்டிலிருந்து வெளியே வரவில்லை. இரவு 9 மணிக்கு தனது கைபேசி மூலம் தனது மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்களிடம் நாளை மாவட்ட அலுவலகம் வருமாறு கூறி இணைப்பை துண்டித்தவர் இரவு முழுவதும் தூங்கவில்லை.
காலை ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் வருகை , தனித்தனியாக ஆலோசனைகளையும் கருத்துகளை கேட்டு அறிந்தார். அனைவரின் முகத்திலும் உற்சாகம். இந்த பணியை எப்படி வெற்றிகரமாக செய்வது என்பதோடு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார் மாவட்ட செயலாளர்
அதற்கான புத்தகங்கள் கழக தலைவர் மாண்புமிகு தளபதியார், இளைஞரணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் படம் பேட்ட குறிப்பு நோட்டுகள், இரு வண்ண கொடிகள் என அனைத்தையும் இரண்டே நாட்களில் தனது அலுவலகத்தில் இருப்பு வைத்தார்அனைத்து அணி அமைப்பாளர்களுக்கும் அழைப்பு காலை 8 மணிக்கு அலுவலகம் வர இந்த நிகழ்வை தங்களின் மேற்பார்வைக்கு கொண்டு வரும் இந்த சாதாரண கழக உறுப்பினருக்கும் அழைப்பு அனைவரும் ஒன்றிணைந்தோம்
இந்த நிகழ்விற்கு அணி அமைப்பாளர்கள் எதற்கு என்று சிலருக்கு எண்ணம் வரும் ,அணி அமைப்பாளர்களை நடைமுறையில் பலர் பயன் படுத்துவதில்லை , ஏன்னா அவர்கள் இணை அணி என்பார்கள் , அதை தனது துணை அணியாக பயன்படுத்தி அவர்களுக்கும் இந்த நிகழ்வில் ஒரு அங்கீகாரத்தை பெற்று தர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு அனைவருடனும் புறப்பட்டார்.
எங்கே செல்கிறோம் என யாருக்கும் தெரியவில்லை , இந்த நிகழ்வின் கதாநாயகரின் வண்டி புறப்பட 160 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்தது மணப்பாறை நோக்கி ,,,
முதல் நாள் முதல் இடம் பிரம்மாண்டமான வரவேற்று , மேடைக்கு சென்றார் மாவட்ட செயலாளர் , ஆள் உயர மாலைகள் , சால்வைகள் , பூ செண்டுகள் என உற்சாகமாக வலம் வந்தனர் கழக நிர்வாகிகள் முதல் கொண்டு தொண்டர்கள் வரை மைக்கை பிடித்த ஒன்றிய செயலாளர் இந்த கூட்டத்தின் முக்கியதுவத்தை உணர்த்தினார் , கிளை கழக தேர்தல் ஆணையராக பணியாற்றிய முன்னால் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்புமிகு அண்ணன் கே என் சேகரன் உள்ளிட்ட பகுதி செயலாளர் ஒ நீலமேகம் உள்ளிட்ட ஆணையர்கள் இந்த நிகழ்வின் முக்கியதுவத்தை எடுத்துரைத்தனர்
என்ன முக்கியதுவம் என்று மைக்கை பிடித்த மாவட்ட செயலாளர் கழக பணிகளை எப்படி ஆற்ற வேண்டும் , என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை கழக செயலாளர்களிடம் கனிவுடன் கூறியதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை செயலாளர்களுக்கு சான்றிதழ்களையும் தலைவரின் படம் போட்ட குறிப்பு நோட்களையும் இருவண்ண கொடிகளையும் வழங்கினார்
உரை ஒரே மாதிரியாக அமையவில்லை , ஒவ்வொரு இடங்களிலும் வேறு வேறு விசயங்களை பற்றி மக்களிடம் பேசியது உடன் சென்றவர்களை பிரம்மிக்க வைத்தது , மாவட்ட செயலாளரின் காரை பின் தொடர்ந்து அனைத்து நாட்களுமே சுமார் 25 வண்டிகளுக்கு மேல் அணிவகுத்தன.
மொத்த நாட்கள் 8
மொத்த பயணம் 2400 கிமீ
நிகழ்வு நடைபெற்ற மொத்த கிளைகள் 1095
அனைத்து இடங்களிலும் கழக கொடி ஏற்றம்சென்ற இடங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்புகள் , ஜல்லிகட்டு காளைகளோடு சூரியூரில் வரவேற்பு ,,,,
ஒரு நிர்வாகி மாவட்ட செயலாளரை பார்க்க வரும் ஆர்வத்தில் வாங்கி வைத்த சால்வையை எடுத்து வரவில்லை , மீண்டும் ஆர்வம் மிகுதியால் பதஷ்டம் அடைய , நீங்க சால்வையை பிறகு போடுங்க இப்போ நான் போடுகிறேன் என கழக வேட்டி ஒன்றை அணிவித்தார்
அதே போன்று ஒரு ஒரு இடங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட சால்வைகளில் காட்டன் சால்வைகள் சிலவற்றை கூட்டம் முடித்து கிளம்பும் போது கூட்டத்திலோ அல்லது ஓரமாக தென்படும் முதியவர்களுக்கு தேடிச் சென்று போர்த்தி விட்டு நலம் விசாரித்தது மனித நேய பண்பாளராக பலரின் மனதில் இடம் பெற்றார்
பெரியவர்களை மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் , சிறுவர்களுக்கும் சாக்லேட்டுகளை வாங்கி தந்து உறவாடினார். சென்ற இடங்களில் எல்லாம் தாய்மார்களிடம் சிந்துத்து வாக்களிக்க கூறினார். யாரும் எதிர்பாராத வண்ணம் கிளை கழக நிர்வாகிகளிடம் கழக தலைவரை மக்கள் பணி ஆற்ற வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த முதல்வர் எனும் பொறுப்பை பெற்றுத் தர உறுதி மொழி ஏற்க வைத்தார்
செல்லும் இடங்களில் இடை இடையே கழக தோழர்களின் துக்க நிகழ்விற்கு செல்லாமல் இருந்தால் சந்தித்து ஆறுதல் கூறி துன்பத்தில் பங்கேற்றார்இதுவரை வரலாற்றிலேயே கிளை கழக நிர்வாகிகள் வெற்றி பெற்றால் இது போல் நேராக அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பாராட்டி பேசி வாழ்த்து தெரிவிப்பது எல்லாம் புதுமையான முயற்சி என்று நெகிழ்ந்தனர்
மொத்தத்தில் நிர்வாகிகள் மட்டுமல்ல பொது மக்களும் மகிழ்ச்சி.கிட்டதட்ட இந்த நிகழ்வு ஒரு பிரச்சார பயணமாகவே அமைந்தது என்று கூறினால் மிகையாகாது. அனைத்து இடங்களிலும் மாற்றுக் கட்சியினருக்கு கழக வேஷ்டி அணிவித்து வரவேற்றார். தினம் தினம் நடந்த நிகழ்வுகளை அப்லோடு செய்துள்ளோம்
பார்க்காதவர்களுக்காக சில படங்களை தங்களின் மேலான கவனத்திற்கு சமர்பிக்கின்றோம்.தனது உரையின் முடிவில் உழைப்பது நாமாக இருப்போம் உதிப்பது உதய சூரியனாக இருக்கட்டும் என்று முடித்தது உணர்வாக அமைந்தது.
புதிய மாவட்டச் செயலாளர்
புதிய அனுபவம்
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா இளைய அன்பிலார் மாண்புமிகு மகேஷ்பொய்யாமொழி
– முத்தமிழ் கருணாநிதி