டெல்டா பகுதிகளுக்கு அமைச்சர்கள் இல்லை, பஞ்சாயத்து ஓவர் !
தமிழகத்தின் 16வது சட்டமன்றத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 133 இடங்களில் வெற்றி பெற்று திமுக தற்போது ஆட்சி அமைத்துள்ளது.
புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் நேற்று வெளியானது முதலே டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்கள் முழுக்க விவாதிக்கப்பட்டது.
இதைப் பயன்படுத்திய நெட்டிசன்கள், திமுகவிற்கு அதிக இடங்களை அளித்த டெல்டாவை புறக்கணித்த முதல்வர் என்று மீம்ஸ்களை போட்டு தாக்கினர்.
இந்த நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முகஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் ‘ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன் !
காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி, என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
இதன் மூலம் முதலமைச்சர் தன்னையே தஞ்சை மண்ணின் திருவாரூரைச் சேர்ந்தவர் என்று கூறியிருப்பதன் மூலம் டெல்டாவை புறக்கணித்து விட்டார் மு க ஸ்டாலின் என்ற பேச்சு முடிவடைந்துள்ளது.