அருகில் இருக்கப்போகும் 4 அதிகாரிகள் ; எக்ஸ் ரே !
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு க ஸ்டாலின் 4 முதன்மை செயலாளர்களை நியமித்துள்ளார்.
உதயச்சந்திரன், உமாநாத், எம்எஸ் சண்முகம் ,அனு ஜார்ஜ் இந்த நான்குபேரும் நேர்மைக்கும், சிறந்த நிர்வாகத்திற்கும் பெயர் போன ஐஏஎஸ் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் முதல்வரின் ஃபென்டாஸ்டிக் 4களாக செயல்பட உள்ளனர்.
மேலும் உதயச்சந்திரன் திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர், பள்ளிக்கல்வித்துறை மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தன்னுடைய சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்.
உமாநாத் தமிழ்நாடு மருத்துவ கொள்முதலில் ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி பெயர் பெற்றவர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாவட்ட நிர்வாகத்தை திறம்பட கையாண்டவர் என்று அனைவராலும் புகழப்படுபவர்.
அனு ஜார்ஜ் இவர் கலைஞரின் இறுதிச் சடங்கின் போது அமுதா ஐஏஎஸ் உடன் இணைந்து முன்னாள் முதல்வர் கலைஞரின் இறுதி காரியங்களில் பணியாற்றியவர். மேலும் தொழில் துறை கமிஷனராகவும் செயல் அற்றிய அனுபவம் கொண்டவர்.
எம்எஸ் சண்முகம் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். பாரத் டெண்டர் பிரச்சனையின் போது நேர்மையாக செயல்பட்டதால் அருங்காட்சியக ஆணையராக மாற்றப்பட்டார்.