நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்வு எப்போது?பொதுமக்கள் கோரிக்கை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் உள்ள நார்த்தாம்பூண்டி கிராமம் உள்ளது. ஊராட்சி மன்ற வங்கி கணக்கில் 75 லட்சம் ரூபாய் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஊரில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன எந்த அடிப்படை வசதிகளும் ஊராட்சி மன்றத்தின் மூலமாக எதுவும் செய்யவில்லை இது உங்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். நார்த்தாம்பூண்டி சி ஆண்டாப்பட்டு அம்பேத்கார் நகர் புதிய நெல்லை மேடு பழைய நெல்லிமேடு  சுற்று வட்டார மக்கள் நான்காயிரம் குடும்பங்கள் உள்ளன.

இனிய ரமலான் வாழ்த்துகள்

நார்த்தாம்பூண்டி உள்ள ஊரில் மொத்தம் 256 தெரு மின் விளக்குகள் போடப்பட்டுள்ளது. நார்த்தாம் பூண்டி வார்டு எண் ஒன்று யாதவ தெருவில் மின்விளக்கு 3 மாதங்கள் தற்போது உள்ள மாதங்கள் வரை எரியவில்லை. இந்த தெருவில் வயதானவர்கள், உடல்நிலை குறைபாடு உள்ளவர்கள் இருக்கிறார்கள். கண் பார்வை அற்றவர்களும் உள்ளார்கள் ஆனால் சிறிய குண்டு பல்பு போடப்பட்டுள்ளன. ஆனால் அதுவும் எறியவில்லை. மின் விளக்கை புதிதாக மாற்றி சரி செய்ய வேண்டும்.

ஊராட்சி மன்ற அலுவலக பணியாளர் அவர்களிடம் கூறினார் அவரும் பலதட சொல்லில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாதவர் தெரு கோபால விநாயகர் கோயில் பக்கத்தில் உள்ள வார்டு 1 குழாய் கசிந்து வருகிறது. இந்த ஊரில் பொது நீர் குழாய் இடம் மோசமாக உள்ளது. இதை சரி செய்வதற்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நார்த்தாமுண்டியில் ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பக்கத்தில் தெருவிளக்கு கம்பம் உடைந்து பல நாட்கள் ஆகின ஆனால் அந்த அந்த இடம் மூன்று பக்கமும் வழி உள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தில் தினந்தோறும் இரவு இருட்டாக தான் உள்ளது. நார்த்தாம்பூண்டியில் மெயின் ரோட்டில் உள்ளது இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை.

ஊரில் அனைத்து தெருக்களிலும் ரோடுகளை சுத்தம் செய்யப்படுவது இல்லை.  தூய்மை பணியாளர்கள் உள்ளார்கள் அவர்கள் எந்த வேலைகளையும் செய்யவில்லை சில தெருக்களுக்கு வருவதும் இல்லை.

பெயருக்கு ஊரில் உள்ள வீடுகளில் கையெழுத்து வாங்கிவிட்டு எந்த வேலைகளும் சுத்தமும் செய்வதில்லை. நாவிதர் தெருவில் தெருமுனையில் கிணறு உள்ளது. அந்த கிணறு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை.

வரட்சி காலத்தில் ஊருக்கே தண்ணீர் தந்த கிணறு  ராம்பாலிய தெரு உள்ள கிணறு எந்தவிதமும் சரி செய்ய உள்ள அனைத்து விதமான தூசு துன்பம் குச்சி அழுக்கும் படிந்துள்ளது அதை சுத்தம்  செய்யவில்லை.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

சி ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கிணறு எந்தவிதமும் சரி செய்ய உள்ள அனைத்து விதமான தூசு துன்பம் குச்சி மழுக்கும் படிந்துள்ளது அதை சுத்தம் எதுவும் செய்யவில்லை. சிவன் கோயில் எதிரில் தண்ணீரும் சேருகளும் ரோடு மிக மோசமான நிலையில் உள்ளது அதை சரி செய்ய வேண்டும்.

நார்த்தாம்பூண்டி ஊராட்சி மன்றத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடம் மிக மோசமாக உள்ளது.  சி ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள தெருக்களின் அனைத்து தெருகளிலும் ஒன்ற அடி அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது கழிவு நீர் போகும் கால்வாய் சுத்தம் செய்யாமல் கொசுக்களும் ஏராளமான பூச்சிகளும் உள்ளதால் பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஆபாயம் உள்ளது.

அதேபோல் தாழ்த்தப்பட்ட சமூகம் காமராஜர் நகர் போன்ற அதன் சுற்றுவட்டார ரோடு மெயின் ரோடுகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த கால்வாய்  சரி செய்யவில்லை.  கைலாசநாதர் திருக்கோயில் பழனி சுற்றுவட்டார பக்கத்தில் சுத்தம் செய்யாமல் சேரு உள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகம் பகுதியில் குடிநீர் குழாய்கள் இதுவரை இணைக்கவில்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள்  ஊர் பொது மக்களுக்கு எந்தவித மருத்துவமும் சரியாக செய்வதில்லை என புகார்கள் தெரிவிக்கிறார்கள். மருத்துவர்கள் பொதுமக்கள் இடம் சரியான முறையில் அவர்களை நடத்துவதும் இல்லை, சரியான முறையில் கவனிப்பதும் இல்லை என புகார் தொிவித்துள்ளனா்.

நார்த்தாம்பூண்டி உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மதுபானக்கடை உள்ளததால் மாணவர்கள் , பொதுமக்கள் மதுபான கடையை முழுமையாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நார்த்தாம்பூண்டியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 450 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனா். இப்பள்ளியில்  மாணவர்களுக்கு கழிவறைகள்  இல்லாமல் உள்ளது .

தமிழ்நாடு அரசு மற்றும் தொகுதி அமைச்சரவர்களுக்கும் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் இந்த  கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனா்.

நமது திராவிட முன்னேற்ற கழக அரசு இந்த பிரச்சனைகளை முழுமையாக தீர்க்கும் என நம்புகிறோம்.

 

—   நார்த்தாமுண்டி கிராம மக்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.