தமிழ்நாட்டு அரசியலில் வடகிழக்கு பருவமழை, திமுக. !
வடகிழக்கு பருவமழையும் திமுகவும்…
காலையில் கடற்கரையில் கழக சீனியர் நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருந்தபோது:
“தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கும் உள்பகுதிகளுக்கும் அதிக மழையைத் தந்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது வடகிழக்கு பருவமழை தான். அடுத்த 48 மணி நேரத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் முன்னறிவிப்பு செய்துள்ளது.
ஒவ்வொரு முறையும் வடகிழக்கு பருவமழையால் புயல், வெள்ளம், சூறாவளி இவற்றை எதிர்கொள்வது தமிழ்நாட்டின் வழக்கம். அண்மைக்காலமாக மற்றொரு வழக்கம், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு பகுதிகளுக்கு உரிய நிவாரணம் தராமல் வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசு. புயல், வெள்ளம், வஞ்சகம் எல்லாவற்றையும் தாங்கும் வலிமை தமிழ்நாட்டிற்கு உண்டு. அதற்கேற்ற நிர்வாக கட்டமைப்பும் இங்குள்ளது.
பருவ மழைகக் காலத்தில் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொன்னாலும், எல்லாவற்றையும் தாண்டி கோடைக் காலத்தில் குடிநீர் பஞ்சம் இல்லாமல் தவிர்ப்பது வடகிழக்கு பருவமழையின் அளவுதான்.
தமிழ்நாட்டு அரசியலில் வடகிழக்கு பருவமழை, திமுக.
மற்றவையெல்லாம் புயல், வெள்ளம் என சீரழிவு சீன் காட்டி விட்டு போய்விடும்”
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.