கூழையனூர் – தீண்டாமையால் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத பட்டியலின மக்கள் !
கூழையனூர் கிராமத்தில் சாமி தரிசனம் செய்ய கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு, பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் போடி தாலுகா கூழையனூர் ஊராட்சியில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பட்டியல் இன மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

கூழையனூர் ஊராட்சியில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியல் இன மக்கள் 150 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் சார்பில் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியலின மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.