ஸ்ரீரங்கம் கோயில் ஆவணத்தை திருட்டுத்தனமாக பெற்று அவதூறு செய்தி வெளியிட்டதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டிஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து, ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த மனுவில்…

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பணியாளர் ம. சீனிவாசன், கோயில் மகாஜனம் என்பவருக்கு பூஜை முறைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு  வழங்கப்பட்ட இவ்வலுவலக ந.க.எண். 4460/ 1432 /பி5-4 நாள்  20.04.2023  கடிதத்தை மேற்படி பணியாளரிடமிருந்து தவறான வழியில் தாங்கள்  பெற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசையும் திருக்கோயில் நிர்வாகத்தையும் அரசு அலுவலர்களான தற்போதைய இணைஆணையர்/ செயல் அலுவலர் செ. மாரிமுத்து மற்றும் முன்னாள் இணைஆணையர்/செயல் அலுவலர்கள் திருமதி.மா.கவிதா மற்றும் பொ. ஜெயராமன் ஆகியோர்களையும்  முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன் அவர்களையும் திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளரையும் மற்றும் நிர்வாக பிரிவு எழுத்தரையும் அவமதிக்கும் நோக்கில் பொய்யான கருத்துக்களையும் அவமரியாதையாகவும், அவதூறாகவும் தரமில்லாத சொற்களாலும் இகழ்ச்சியாகவும் கோப ஆவேசத்துடனும் பேசி சமூக வலைதளங்களில் சுமார் 25 நிமிட வீடியோ வெளியிட்டு

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ரங்கராஜன் நரசிம்மன்
ரங்கராஜன் நரசிம்மன்

https://www.youtube.com/watch?v=9soy79xG2sE&t=142s

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

name:- Our Temples Our Pride Our Right  https://www.youtube.com/@OurTemples/videos

சித்திரை 8, 5125 – 21.04.2023) பொதுமக்களின் பார்வைக்கு தமிழ்நாடு அரசைப் பற்றி கீழ்க்கண்டவாறு அவதூறான கருத்துக்களை பரப்பியுள்ளீர்கள்.

மேற்படி வீடியோ பதிவில்

அத்துமீறும் மாரிமுத்துவும், அறநிலையத்துறையும் என தலைப்பிட்டு தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

 

இந்து சமய அறநிலையத்துறையை கேடுகெட்ட துறை என கீழ்த்தரமாக பேசி வணிக நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் விமர்சனம் செய்தது.

 

திருக்கோயிலின் அறங்காவலர்களுக்கு எடுபிடியாக குமாஸ்தாவாக இருந்து செயல்பட வேண்டியதே இணை ஆணையர் / செயல் அலுவலர் கடமை என தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

 

இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து
இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து

ஸ்ரீரங்கத்தில் இருப்பவன் மாரிமுத்து இவனுக்கெல்லாம் மரியாதை இனிமேல் கொடுக்கப்போவதில்லை என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

இவனுக்கு சம்ப்ரதாய விசயங்களில் மூக்கை நுழைப்பதுதான் வேலை என்று தரக்குறைவாக இணை ஆணையர் /செயல் அலுவலரை விமர்சனம் செய்தது.

சட்ட விரோதமான இணை ஆணையர் / செயல் அலுவலர் மாரிமுத்து என்பவன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளான் என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

என்ன எழுதுகிறான் பாருங்கள் இவன் என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

பூஜை நடைமுறை குறித்து உனக்கென்ன கவலை என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி ஒரு கடிதம் எழுதுவான் என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

நீ பார்ப்பது குமாஸ்தா பணி என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

நீ மற்றும் உன்னுடைய வம்சம் பிறப்பதற்கு முன்னர் என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

உனக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

பூஜையில் தாமதம் என்று கேட்பதற்கு மாரிமுத்து நீ யாருடா என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

நீ எத்தனை நாளாக இந்த ஊரில் இருக்கிறாய் என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

மா.கவிதா
மா.கவிதா

திருக்கோயில் இடத்தில் இருந்து கொண்டு வாடகை கொடுக்காமல் குடி இருந்து வரும் நீ என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

இராமானுஜர் யார் என்று தெரியுமா உனக்கு விபரீதமாய் போய்க்கொண்டிருக்கிறாய் என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

பூஜை முறைகள் தாமதமாகி கொண்டிருக்கிறது நீ யாருடா இதை கேட்பதற்கு உனக்கென்ன இதுதான் வேலையா, ஒருநாள் கூட பெரிய அவசரம் பூஜை நடத்தாமல் வைத்திருக்கிறாய் நீ என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

பெருமாளுக்கு நடக்க வேண்டிய ஆறு கால பூஜைகள் நடக்கவிடாமல் கெடுத்தவன் நீ என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

ஸ்ரீரங்கம் கோவில்
ஸ்ரீரங்கம் கோவில்

பூஜை தாமதமாக நடப்பதை பற்றி கேட்பதற்கு உனக்கென்ன வக்கு இருக்கிறது, என்ன திமிர் உனக்கு என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விஐபி தரிசனம் என்று காசு வாங்கி கொண்டு உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கும் நீ அளவுக்கு மிஞ்சி கொண்டிருக்கும் நீ என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

யார் உத்தரவு உனக்கு வேண்டும்டா என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

உனக்கெல்லாம் இது எங்க புரியபோகுது சட்டம் படித்திருக்க நீ, வெட்கம் இல்லாமல் என்றும் சட்டம் படித்தியா நீ, மாரிமுத்து உன்னைத்தான் கேட்கிறேன் இதெல்லாம் உனக்கு புரியாதா என்றும் இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

நீயே உள்துறை கண்காணிப்பாளர் என்று ஒருவனை போடுவது பிரிவு எழுத்தர் யார் அவன் என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

நீயெல்லாம் இங்கு ஆர்டர் போடறதுக்கு ஆளில்லை பூனை மாதிரி நடித்து ஏமாற்றுகிறாயா என்றும் உனக்கு எக்ஸ்க்யூடிவ் ஆபிசர் என்ற உத்தரவு உள்ளதா என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

பரம்பரை ஸ்தலத்தார்களை விரட்டிவிட்டு நீ உட்கார்ந்து கொண்டு நாட்டாமை செய்கிறாயா என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

யாரையோ பற்றி யார்க்கிட்ட ஆவணம் கேட்கிற என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன்
முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன்

பல்லாண்டு பல்லாண்டு தெரியுமா உனக்கு ஆவணம் கேட்கிறாயா என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

சட்டவிரோதமாக உட்கார்ந்துகொண்டு நாட்டாமை செய்யும் வேலையை விட்டுவிடு என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

ஒழுங்குமரியாதையாக வரவு செலவு கணக்குகளை பார்த்து அறங்காவலர் இடும் உத்தரவுகளை குமாஸ்தாவாக இருந்து வேலை செய் என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

உன்னுடைய வேலை தகவல் அறியும் சட்டத்தின்படி பதில் அளிப்பது அதையும் ஒழுங்காக செய்ய துப்பில்லை என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

இதற்கெல்லாம் காரணம் இத்துறையின் அமைச்சர்கள் என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

திருப்பதியில் அட்டூழியம் செய்தால் அதை காப்பி அடிப்போம் என்று வெட்கம் இல்லாமல் சொல்கிறார்கள் என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

கட்டணமில்லாமல் வரும் நபர்களுக்கு மூன்றாம் இடம் வழங்கியும் அவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பிரேக் தரிசனம் என்பதை கொண்டுவருவதற்கு நீங்கள் யார் என்றும் கோயிலை வியாபார ஸ்தலமாக மாற்றுவதற்கு பிரேக் தரிசனம் என்றும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

திருக்கோயில் செயல் அலுவலர்களுக்கு தானே ஆச்சாரியன் என நினைத்துக்கொண்டு செயலாற்றுவதாக என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

பூஜை முறைகள் தாமதமாக நடப்பதற்கு காரணமானவன் நீ எனவும், கெடுத்தவன் நீ எனவும் இதனை கேட்பதற்கு உனக்கு என்ன வக்கிருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, என்று இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

இராமானுஜர் காலத்திய ஆணையையே பூஜையாக செய்து வருவதாகவும், நேற்று முளைத்த காளான் நீ உனக்கு என்ன தெரியும் என திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

நீயெல்லாம் இது குறித்து விளக்கம் கேட்க யார் என சமூக வலைதளங்களில் இணை ஆணையர் /செயல் அலுவலரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

விஜயரங்க சொக்கநாதர் சிலை பக்கம் போக விடமாட்டிகிறான் இந்த திருட்டு பசங்க என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

வேணுசீனிவாசன் என்பவன் கோயிலை நாசம் செய்துவிட்டான் என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

செயல் அலுவலர் மாரிமுத்து பதவி பறிக்கப்படும் மட்டும் தான் என்றும் இதற்கு முன்னர் செயல் அலுவலராக இருந்த கவிதா நிலை என்னவென்று உனக்கு தெரியும் என்றும்  தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

இவ்வாறு சமூக ஊடகங்களில் தமிழ்நாடு அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும், திருக்கோயில் நிர்வாகத்தையும், அரசு அலுவலர்களான தற்போதைய இணைஆணையர்/ செயல் அலுவலர் செ. மாரிமுத்து மற்றும் முன்னாள் இணைஆணையர்/செயல் அலுவலர்கள் திருமதி.மா.கவிதா மற்றும் பொ. ஜெயராமன் ஆகியோர்களையும்  முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன் அவர்களையும் திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளரையும் மற்றும் நிர்வாக பிரிவு எழுத்தரையும் அவமதிக்கும் நோக்கில் பொய்யான கருத்துக்களையும் அவமரியாதையாகவும், அவதூறாகவும் தரமில்லாத சொற்களாலும் சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் இகழ்ச்சி செய்யும் வீடியோ தாங்கள் வெளியிட்டிருப்பது குற்றச் செயலாகும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, தாங்கள் உடனடியாக இவ்வாறு பேசியது தவறு என்று குறிப்பிட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டு இனிமேல் இது போன்ற தவறுகள் செய்யமாட்டேன் என்று உறுதியளித்தும் மேற்படி தவறான வீடியோவை பார்த்த நபர்களை கண்டறிந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த விஷயத்தை தெரிவித்தும் அதன் விபரத்தை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் திருக்கோயில் அலுவலகத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கடிதங்களை திருட்டுத்தனமாகவும் தவறான வழியிலும் பெற்று தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் சட்ட முறைகளின்படி பெற்று சட்டப்பூர்வ வழிகளில் ஆலோசனைகள் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

உண்மையான பெருமாள் பக்தர் ஸ்ரீவைஷ்ணவர் இவ்வாறு தரக்குறைவான சொற்களை பயன்படுத்தி கோப ஆவேசத்துடன் பேசமாட்டார் என்றும் தங்களுக்கு நினைவூட்டப்படுகிறது. என்று நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

நோட்டிஸ்யை பெற்றுக்கொண்ட  ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பதில் அளிக்கும் வகையில்

https://www.youtube.com/watch?v=-tWJUFpe3BY&t=301s  மீண்டும் வீடியோ வெளியிட்டு உள்ளார்.  அடுத்து என்ன நடக்கிறது… என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.