தேசிய விருதுபெற்ற திருச்சி பஸ் டிரைவர்!

0

கடந்த 27 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கிய திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த பால்ராஜ் (56) என்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநருக்கு மத்திய அரசு சிறந்த ஓட்டுநருக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநரான தீரன் நகரைச் சேர்ந்த பால்ராஜ் கடந்த 27 ஆண்டுகளாக தீரன் நகர் – ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் விபத்து ஏதும் இன்றி வாகனத்தை இயக்கியுள்ளார். இதனைப் பாராட்டி அவருக்கு ஏப்ரல் 18-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் விழாவில் ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ‘சிறந்த ஓட்டுநருக்கான’ விருதை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, திருச்சியில் உள்ள போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகத்துக்கு நேற்று வந்த பால்ராஜுக்கு திருச்சி மண்டல பொது மேலாளர் சக்திவேல் பொன்னாடை அணிவித்து பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார்.

இதில், தொழில்நுட்ப உதவி மேலாளர் மகேந்திரன், துணை மேலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.