ஸ்ரீரங்கம் கோயிலில் அரசு ஆவணங்களை வெளி நபர்களுக்கு முறைகேடான வழியில் கொடுத்த கோயில் ஊழியர் சஸ்பெண்ட் – இணை ஆணையர் அதிரடி !

0

ஸ்ரீரங்கம் கோயிலில் அரசு ஆவணங்களை வெளி நபர்களுக்கு முறைகேடான வழியில் கொடுத்த கோயில் ஊழியர் சஸ்பெண்ட் – இணை ஆணையர் மாரிமுத்து அதிரடி…அதிரடி !

ஸ்ரீரங்கம் கோவிலில் கோயில் மகாஜனம் என்னும் பதவியில் சீனிவாசன் என்கிற நபர் இருக்கிறார் தினமும் காலை பெருமாள் சன்னதியில் பஞ்சாங்கம் வாசிக்கும் வேதவியாசராஜர் என்பவர் வழக்கத்தை மீறி அதிக நேரம் எடுத்துக் கொண்டு (ஏழு நிமிடங்கள் மட்டும்மே பஞ்சாங்கம் வாசிக்க வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் புகழேந்திரன் இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் உத்திரவிட்டுள்ளார்).

மகாஜனம் பணியாளர் சீனிவாசன்
மகாஜனம் பணியாளர் சீனிவாசன்

பஞ்சாங்கம் வாசிப்பதாகவும் இதனால் காலை நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதாகவும் இதன் காரணமாக அதிகாலையில் சாப்பிடாமல் வரும் பக்தர்கள், சர்க்கரை நோயாளிகள் மிகவும் சிரமபடுவதாகவும் சில வயதான பக்தர்கள் மயக்கமடைவதாகவும் கோயில் நிர்வாகத்திற்க்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது , இது குறித்து கோயில் இணை ஆணையர் மகாஜனம் பணியாளர் சீனிவாசன் மற்றும் மேலும் 4 கோயில் ஊழியர்களுக்கு பஞ்சாங்கம் படிப்பது சம்பந்தம்மாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நோட்டீசை கோயில் மகாஜனம் சீனிவாசன் ரெங்கராஜன் நரசிம்மர் என்பவருக்கு முறைகேடாக தமிழக அரசுக்கு துரோகம் செய்யும் வகையில் கொடுத்துள்ளார் இதை வைத்துக்கொண்டு ரெங்கராஜன் நரசிம்மன் தமிழ்நாடு அரசையும் , கோயில் இணை ஆணையர் அவர்களையும் அருவருகத்தக்க வகையில் ஒருமையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவுக்கு பதில் கொடுக்க வகையில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து நேற்று ரெங்கராஜ நரசிம்மனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது . இதற்கிடையில் ரெங்கராஜ நரசிம்மனுக்கு முறைகேடான வழியில் அரசுக்கு நம்பிக்கை துரோகம் ஏற்படும் வகையில் அந்த கடிதத்தை வெளி நபர்களுக்கு வழங்கியதால் கோயில் மகாஜனம் சீனிவாசனை தற்காலிக பணி நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உத்திரவிட்டார் .

ஸ்தானிகம் நரசிம்மன்
ஸ்தானிகம் நரசிம்மன்

இதேபோல் கடந்த பங்குனி உற்ச்சவம் சமயத்தில் ஸ்தானிகம் நரசிம்மன் என்பவரையும் சஸ்பெண்ட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது , நரசிம்மன் அடிக்கடி மது அருந்திக் கொண்டு வருவதாகவும் (மது அருந்தி இருந்தால் இரண்டு மாஸ்க் போட்டு கொண்டுதான் கோயிலுக்கு வருவாராம் ) பெண்களிடம் முறைகேடாக பேசுவதாகவும் பக்தர்களின் பக்தர்களிடம் கட்டாயமாக பணம் பிடுங்குவதாகவும் புகார்கள் வந்ததை அடுத்து நரசிம்மனை சஸ்பெண்ட் செய்தார்.

இவருக்கு பதில் பண்டாரி ஸ்ரீராம் என்பவரை ஸ்தானிகமாக நியமித்தார், ஆனால் கடந்த சித்திரை தேர் உற்ச்சவத்தின் போது மணியக்காரர் ஸ்ரீதர் என்பவர் நரசிம்மனின் மகன்களுக்கு முறைகேடாக அனைத்து மரியாதையும் செய்தார் என்று பக்தர்கள் குமுறுகின்றனர்.

இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து
இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து

மேலும் நாம் கோயில் வட்டாரத்திலும் ஸ்ரீரங்கத்திலும் விசாரிக்கும் போது இணை ஆணையர் மாரிமுத்து மிகவும் கண்டிப்பாகவும், நேர்மையானவர் இருப்பவராகவும்,  இவர் வந்த பிறகு அன்னதான நன்கொடை , குத்தகை பாக்கி வசூல் மிக அதிகரித்து உள்ளதாகவும் , குறிப்பாக ஏழை எளிய கட்டணமில்லா தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக வசதிகளை செய்துள்ளார் என்றனர்.

மேலும் பணியாளர்களிடம் பணிகளில் மிகவும் கவனமாகவும் நேர்மையாகவும் இருக்கும் படி அடிக்கடி எச்சரிக்கை செய்பவர் என்றும் கூறுகின்றனர், இந்த எச்சரிக்கை பிடிக்காத சில ஊழியர்கள் இணை ஆணையருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இணை ஆணையர்க்கு ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என்று வேலை செய்து கொண்டே உள்ளனர்.

பங்குனித் தேரின் போது தேர்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் பஞ்சாங்கம் படிக்கும் வேதவியாசராஜர்
பங்குனித் தேரின் போது தேர்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் பஞ்சாங்கம் படிக்கும் வேதவியாசராஜர்

குறிப்பாக முருகன் குடியிருக்கும் ஊரின் பெயரை தன் பெயரோடு கொண்ட “சாமி ” யானவர் சொல்கிறபடி தான் பல கோயில் பணியாளர்கள் செயல்படுகின்றனர் , அந்த “சாமி ” யானவர் இணை ஆணையர்க்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்காமல் அவரை சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்று அடிக்கடி கூறுவாராம் அந்த சாமியானவரை இந்த கோவிலில் இருந்து மாற்றினாலே பல குழப்பங்களுக்கும் , முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று வைணவ பக்தர்கள் கூறுகிறார்கள்.

-ஸ்ரீ

 

ஸ்ரீரங்கம் கோயில் ஆவணத்தை திருட்டுத்தனமாக பெற்று அவதூறு செய்தி வெளியிட்டதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டிஸ் !

https://angusam.com/notice-to-srirangam-rangarajan-narasimhan/

 

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.