தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவு சான்றிதழ் சமா்ப்பிக்க அறிவிப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பார்வைக்குறைபாடுடைய 0-6 வயது வரையுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதை சாிசெய்திடும் வகையில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தின் மூலம் வேண்டிய பயிற்சிகள், உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கல்வி வழங்கிடும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனத்திற்கு சிறப்பு ஆசிாியா்களுக்கு ஊதிய மானியம், வாடகை மானியம் மற்றும் இத்திட்டத்திற்கான விழிப்புணா்வு முகாம் நடத்துதல், விழிப்புணா்வு முகாம் மூலம் குழந்தைகளை கண்டறிந்து, அவா்களை மதிப்பீடு செய்து வழிகாட்டி மற்றும் ஆலோசனை வழங்க ஆண்டு தோறும் அரசு நிதி ஒதுக்கீடு அளித்து வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு விருப்பமுள்ள மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல உாிமைச்சட்டம் (RPWD ACT) 2016-ன் கீழ் பதிவு பெற்ற தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது தொண்டு பதிவு சான்றிதழ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த தொகுப்புகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீதிமன்ற வளாகம் பின்புறம், கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி – 620001 என்ற முகவாிக்கு வருகிற 10.10.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்குமாறு தொிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவா் மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. அவா்கள் தொிவித்துள்ளாா்.
வெளியீடு:
உதவி இயக்குநா்,
செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.